பில்லி சூனியம் உண்மை
அதிலிருந்து காக்கும் கடவுள் இவரே

நாம் சக்கரத்தாழ்வாரை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், நம்முடைய வளமான வாழ்க்கையை நோக்கி நாம் எடுத்து வைக்கும் வெற்றிப் படிகளாகும்.

சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து, சிவப்பு மலர்களால் மாலை சூட்டி, மனமுருகி "ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம" என்று சொன்னால் கிரக தோஷம் விரைவில் நீங்கி விடும்.

மேலும் சனி கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து, அவரை 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால் மனதில் எண்ணிய பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் தடையில்லாமல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக  சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு எனப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னதி எழுப்புவர்.

சக்கரத்தாழ்வாரை வணங்கிட நம்மை #சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை. சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நினைத்த காரியம் ஈடேறி, வெற்றி கிட்டும்.

மனஅமைதியின்மை, செய்யும் தொழிலில் நிலையற்ற தன்மை, கெட்ட கனவு, எதிர்மறை எண்ணங்கள், பகைவர்களால்ஏவப்பட்ட பில்லி, சூனியம், ஏவல், உடல் நலம் சரியில்லாமல் சித்தபிரமை, புத்தி சுவாதீனம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மதுரையில் உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயிலில் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாரை வணங்கினால் பிரச்சனைகளையும், துன்பங்களையும் தீர்த்து வைப்பார்.

‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர். அப்படியென்றால் அவரிடம் அபயம் என்று போய் நின்றால், அடுத்த கணமே நம்மை நம் இடர்களில் இருந்து காத்தருள்வார். திருமாலின் பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், அது அந்த பெருமாளுக்கே ஏற்பட்ட இடையூறாக கருதி விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார்.

நாம் அவரை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், நம்முடைய வளமான வாழ்க்கையை நோக்கி நாம் எடுத்து வைக்கும் வெற்றிப் படிகளாகும்.