Navathirupthi | நவதிருப்பதி திருத்தலங்கள்


தசாவதாரமும் நவகிரகங்களும்:பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.

ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயகநரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யசவாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர

என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,

ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்ஸ்ரீ நரசிம்மவதாரம் - செவ்வாய்ஸ்ரீ கல்கியவதாரம் - புதன்ஸ்ரீ வாமனவதாரம் - குருஸ்ரீ பரசுராமாவதாரம் - சுக்ரன்ஸ்ரீ கூர்மவதாரம் - சனிஸ்ரீ மச்சாவதாரம் - கேதுஸ்ரீ வராகவதாரம் - ராகுஸ்ரீ பலராமவதாரம் - குளிகன்

என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது.

அதுபோலவே, சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,

ஸ்ரீவைகுண்டம் - சூரிய ஸ்தலம்வரகுணமங்கை (நத்தம்) - சந்திரன் ஸ்தலம்திருக்கோளூர் - செவ்வாய் ஸ்தலம்திருப்புளியங்குடி - புதன் ஸ்தலம்ஆழ்வார்திருநகரி - குரு ஸ்தலம்தென்திருப்பேரை - சுக்ரன் ஸ்தலம்பெருங்குளம் - சனி ஸ்தலம்இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) - ராகு ஸ்தலம்இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) - கேது ஸ்தலம்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!