அவனை சரணடைந்தால் நம்மை நிச்சயம் காப்பாற்றுகிறார்.....

திருக்கண்ணமங்கை ஆண்டான் என்று  ஒரு மகான் சேங்கனூரில் இருந்தார். (நமக்கு சேங்கனூர் என்றதும் உடனுக்குடன் ஞாபகம் வருகிறார் வ்யாக்யான சக்ரவர்த்தி  பெரியவாச்சான் பிள்ளை! .) அவ்வூர்கருகிலிருந்த திருக்கண்ணமங்கை கோயிலில் உள்ள பக்தவத்சலம் பெருமாளிடம் இவருக்கு இருந்த பக்தியின் காரணமாக திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற பெயர் வந்தது. .

கோவில் புஷ்ப கைங்கர்யம்  செய்தை, கோவிலையே சுத்தப்படுத்தி, பகவானிடம் சரணாகதி செய்து வாழ்ந்து வந்தார் . ஒரு சமயம் ' சரணாகதி செய்பவரை பகவான் காப்பாற்றுவார் என்று எப்படி நம்புவது' என்று  சந்தேகங் கொண்ட ஒருவர் இவரை அணுகி அக்கேள்வியை கேட்டார் . இவர் சாஸ்திரத்தை நம்பாதவன் என நம் கண்ணமங்கலம் ஆண்டான் பரிந்து கொண்டார்.

சிறிது நேரம் மௌனம் சாதித்தார் திருக்கண்ணமங்கை ஆண்டான்.  சாஸ்திரதை நம்பாத ஜனங்களிடம் பொதுவாக உலகில் நடக்கும் விஷயங்களை காட்டி புரிய வைக்கலாம் . மற்றவர்களுக்கு ஹிதோபதேசம் செய்து ஆசார்யர்கள் நல்வழி படுத்துவார்கள்.

அப்போது  எதிர்  வீட்டிலிருப்பவன் தான் வளர்க்கும் நாயைப் பிடித்து கொண்டு  நடந்து போய்க் கொண்டிருந்தான். அன்று அதே தெருவில் வசிக்கும் மற்றொரு நாய் வேகமாக ஓடி வந்து  எதிர் வீட்டு நாயைப் பார்த்து 'லொள் லொள்' என ஹிம்சை பண்ணியது . யாருடனோ பேசிக் கொண்டிருந்த அந்நாயின் எஜமானன் தன் நாய் படும் ஹிம்சையை காணப் பொறுக்காமல்,  குபீர் எனப் பாய்ந்து தன் நாயை தாக்க வந்த நாயை கல்லால் அடித்து தன் நாயை அணைத்தபடி சென்றான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணமங்கை ஆண்டான் தன்னிடம் விதண்டாவாதம் செய்தவரை பார்த்து , ' இந்த எஜமானன்க்கு ஏன் இந்த நாயின் மேல் அபிமானம்?  இவர்கள் உறவினரா?  ரத்த சம்பந்த உறவா' என்று  கேட்டார்.

' இது அவன் சொந்த நாய் . அதனால் அவனுக்கு அபிமானம் ' என்றார் அடுத்தவர்.

' சொந்த நாயாக இது ஆவதற்கு காரணமென்ன' என்று  கண்ணமங்கை  ஆண்டான் கேட்க

இந்த நாய் அவன் வீட்டில்ஃஇருக்கிறது. அவன் தரும் உணவை உண்டு அவன் காலையே சுற்றி சுற்றி வருகிறது . இந்த அன்பு அந்த எஜமானன் நாயாக இருந்தாலும் தன் சொந்தம் என நினைக்க வைக்கிறது. அதை காப்பது தன் பொறுப்பு என நினைக்கிறான் ' என்றார் விதண்டாவாதம் செய்தவர்.

' தனக்கு பிரியமான நாயை மற்றொரு நாய் ஹிம்சை செய்தால் அதைக் காப்பாற்றுவது ஒரு அல்ப மனிதனுக்கு ஸ்வபாவமாக இருந்தால் பக்தவத்சலன் திருக்கண்ணமங்கை எம்பெருமான் அப்படி செய்யமாட்டாரா?  நீயே கதி என்று அவர்  அடியிலேயே கிடக்கும் அடியவர்களை அணைத்துக் கொள்ளாமல் இருந்து விடுவாரா? அந்த தெரு நாய், போல் மோக்ஷத்திற்கு எதிரான பாதையில்  திருப்பி, உலக விஷயங்களில் திருப்ப நினைப்பவர்கள். தன்னடியார்களோடு சேர்த்து விடாமல் விலக்கி அணைத்து கொண்டு  காப்பாற்ற மாட்டாரா எம்பெருமான்? 

சரணாகதி சத்தியமாக எஜமான் காப்பாற்றுவான் என்று  உலக வாழ்க்கையிலே தெரியும்போது, கருணையே வடிவான எம்பெருமான்  சரணாகதி செய்தவர்களை காப்பாற்றுவார் என்ற  சந்தேகம் ஒருவருக்கு  எழும்பலாமா "?

சரணாகதி செய்தவர்களுக்கு எம்பெருமானுக்கு கைங்கர்யம்  செய்வதே லட்சியம். அது ஒன்றே சரணாகதி செய்தவன் தன் எஜமானன் எம்பெருமானுக்கு செய்ய வேண்டியது"  என்று திருக்கண்ணமங்கை ஆண்டான்  ஹித உபதேசம் உலக விஷயத்தை வைத்தே விளக்கிச் சொல்ல, சந்தேகம் தெளிந்து விடை பெற்றார் வந்த நபர்.