நாராயணனே துணை

ஒரு குடும்பஸ்தருக்கு தொழிலில் நஷ்டம். கடன் தொல்லை தாங்காமல் ஞானி ஒருவரைச் சந்தித்து முறையிட்டார். குருவே! எனக்கு வாழத் தெரியவில்லை. நான் செய்வதெல்லாமே தவறாகின்றன? ஏனப்பா அப்படிச் சொல்கிறாய்? குரு வினவினார். சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதே வாடிக்கை. லாபம் வரும் காலத்தில் நஷ்டம் தரும் வியாபார முடிவெடுத்தேன். நஷ்ட காலத்தில் வியாபாரத்தைச் செய்தேன். குடும்ப வாழ்க்கையிலும் காலத்தை கணித்து முடிவெடுக்கத் தெரியவில்லை. எனக்கு சன்னியாசம் கொடுங்கள்...? குரு கேட்டார். அதோ, அந்தப் பாதையில் ஒரு வண்டி வருகிற சத்தம் கேட்கிறது. அது என்ன வண்டியப்பா? மோட்டார் சத்தம் கேட்கிறது. அனேகமாக கார் அல்லது வேன் ஆக இருக்கும், குருவே! அதற்குப் பின் வரும் வண்டி என்ன? சத்தமும் கேட்கவில்லை. கண்ணுக்கும் தெரியவில்லை. எப்படிச் சொல்வேன் குருவே....? குரு சிரித்தார். அதேதான் வாழ்க்கையும்! பாதையில் வரும் அடுத்த வாகனம் என்ன என்பதையே நம்மால் சொல்ல இயலாதபோது, வாழ்க்கையில் அடுத்தென்ன என்று எப்படிச் சொல்வது? சத்தத்தை வைத்து, சாமிக்ஞைகளைக் கொண்டு ஓரளவு கணிக்கலாம், உத்தரவாதமாக எதையும் சொல்ல இயலாது. அதுபோல, முடிவுகளை நாமெடுப்போம், விளைவுகளை நாராயணனே முடிவெடுப்பான். ஆக, நீ செய்தது தவறுமல்ல, நஷ்டப்பட நீ காரணமுமல்ல! எதற்கும் காரணனான நாரணனை நம்பு; நாளை ஜெயிப்பாய், லாபமடைவாய்! வியாபாரிக்குப் புரிந்து வாழ்க்கையில் பிடிப்பும் வந்தது

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!