1.திருமங்கையாழ்வார் அவதார ஸ்தலம் ?
திருக்குறையலூர்

2.திருமங்கையாழ்வார் திருநக்ஷத்ரம் ?
கார்த்திகையில் கார்த்திகை

3.திருமங்கையாழ்வாரின் வேறு திருநாமங்கள் ?
அங்கமலத் தடவயல் சூழ் ஆலிநாடன்,
அருள்மாரி, அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்கு மலர்க் குழலியர் வேள், மங்கை வேந்தன், கொற்ற வேல் பரகாலன், கலியன்

4.திருமங்கையாழ்வாரின் மனைவி பெயர் என்ன ? 
குமுதவல்லி நாச்சியார்

5.திருமங்கையாழ்வார் பெருமாளின் எந்த அம்சமாக அவதாரம் செய்தார் ?
சார்ங்கம் என்ற வில்லின் அம்சமாக அவதாரம் செய்தார்.

6.திருமங்கையாழ்வார் அருளிய பிரபந்தங்கள் என்னென்ன ?
பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்

7.திருமங்கையாழ்வார் தன்னை நாயகியாக பாவித்து எந்த திவ்ய தேசத்து பெருமாளை பாடியுள்ளார் ? அந்த பிரபந்தங்கள் எவை ?
திருநறையூர் - சிறிய திருமடல், பெரிய திருமடல்

மொத்தம் 22 பதிகங்களில் நாயிகா பாவம்... 
இதில்  8 தாய் பாவனை 
14 தலைவி பாவனையில் பாடி உள்ளார்

8.திருமங்கையாழ்வாருக்கு ஆச்சார்யன் யார் ?
திருநறையூர் நம்பி

9.திருமங்கையாழ்வாரால் "அடியவர்க்கு மெய்யன்" என்று மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் யார் ?
★வையம் ஏழும் உண்டு, ஆலிலை வைகிய மாயவன்
அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வநாயகன் இடம், மெய்தகு வரைச் சாரல்
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய, முல்லையங் கொடியாட
செய்ய தாமரைச் செழும்பணை திகழ்தரு, திருவயிந்திர புரமே.

10. திருமங்கையாழ்வாரால் நூறு பாசுரங்களுக்கு மேல் பாடப்பெற்ற க்ஷேத்ரம் எது ?
திருநறையூர் 110
திருக்கண்ணபுரம் 104

11.திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் நூறு பாசுரங்கள் பாடியுள்ள க்ஷேத்ரங்கள் எவை ?
திருக்கண்ணபுரம்

12.ப்ரத்யேகமாக (ஒரே பாடலில்) குடந்தைப் பிரானை பாடிய பிரபந்தம் எது ?
திருவெழுகூற்றிருக்கை

13.திருமங்கையாழ்வார் "________பெருமாள்" என்று போற்றப்படுகிறார் ?
நான்கு கவிப் பெருமாள்
ஆசுகவி, வித்தாரக்கவி, சித்தாரக்கவி, மதுரகவி என நான்கு விதமான கவி பாடக் கூடியவர்

14.திருஞானசம்பந்தர் திருமங்கையாழ்வாருக்கு எதனை பரிசாக அளித்தார் ?
வேலை பரிசாக அளித்தார்
இந்த வைபவத்திற்கு முன்பே 
பல திவ்ய தேசங்களில் ஆழ்வார் தன்னை கொற்றவேல்  பரகாலன் என்று பாடியிருப்பதால்.... இந்த வைபவம் பின் நாளில் வந்த கட்டுக்கதை என்று ஆசார்யர்கள் கூறுவர்.

15."நந்தாவிளக்கே" என்று எந்த திவ்ய தேசத்து பெருமாளைப் போற்றியுள்ளார் ?

★ நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்!,
நர நாரணனே! கருமா முகில் போல் எந்தாய்!
எமக்கே அருளாய் என நின்று, இமையோர் பரவும் இடம்
எத்திசையும் கந்தாரம் அந்தேன் இசை பாட மாடே,
களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர்,
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே!.

16.ஊறாக்கிணறு, உறங்காபுளி, காயாமகிழ், தேரா வழக்கு, _______ ?
திருக்கண்ணங்குடி
திருக்கண்ணங்குடி திவ்ய தேசம் கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரங்களில் ஒன்று, ‘காயாமகிழ்’ உறங்காப்புளி, தேறா வழக்கு, ஊறாக்கிணறு திருக்கண்ணங்குடி’ என்பது பழமொழி. இவற்றில முக்கிய அடையாளங்களான ஊறாக் கிணறும், உறங்காப்புளியும் இப்பொழுது இல்லை, காயாமகிழ் (காய்ந்து பட்டுப்போகாத வரம் பெற்ற தல விருட்சம்) மட்டும் சன்னிதியின் பின்புறம் உள்ளது.

17.திருமங்கையாழ்வார் "அச்சோ ஒருவரழகியவா" என்று எந்த பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார் ?
திருநாகை

18.திருமங்கையாழ்வாரின் குதிரை பெயர் என்ன ?
ஆடல் மா

19."மரதகத்தைப் புட்குழி எம்போரேற்றை" என்று எந்த பிரபந்தத்தில் பாடியுள்ளார் ?
பெரிய திருமடல்
மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல் பொன்னை
மரகதத்தை புட்குழி எம் போர்ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மாமணியை

20.திருமங்கையாழ்வார் தனக்கு உரிய பெயர்களை கோத்து "ஆலிநாடன் அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் கொங்குமலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்றவேல் பரகாலன் கலியன்" எந்த திவ்ய தேசத்து பெருமாளை மங்களாசாசனம் செய்தார் ?
திருக்காழிச்சீராம விண்ணகரம்
சீர்காழி

21.திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்கள் எத்தனை ?
108 திருப்பதிகளில் இவர் தனியாக சென்று 46 கோயில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 40 கோயில்களையும் என மொத்தம் 86 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்

22.திருமங்கையாழ்வார் எந்த திவ்ய தேசத்து பெருமாளை மங்களாசாசனம் செய்ய அதிக நாட்கள் காத்திருந்தார் ?

திருநீர்மலை
திருமங்கையாழ்வார் இந்த திவ்ய தேசத்திற்கு எழுந்தருளியபோது இந்த மலையைச் சுற்றி நீர் அரண் போல் சூழ்ந்து இருந்ததால், ஆறுமாத காலம் எதிர்த்த மலையில் காத்திருந்ததாகவும், அதனால் இம்மலைக்கு நீர்மலை என்ற திருநாமம் உண்டாகியதாக வரலாறு
ஆழ்வார் தங்கியிருந்த இடம் *திருமங்கை ஆழ்வார் புரம்* என்று இன்றும் வழங்கப்படுகிறது

23."சென்று காண்டற்கரிய கோயில்" என்று எந்த திவ்ய தேசத்தை பாடுகிறார் ?
திருச்சிங்கவேள் குன்றம் (அஹோபிலம்)

24.எந்த பெருமாளுக்கு மதில் எழுப்பினார் ?
ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு

25."கலியன் உரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே" என்று எந்த ஆச்சார்யன் போற்றப்படுகிறார் ?

ஸ்ரீ வேதாந்த தேசிகர்
வஞ்சப் பரசமயம் மாற்ற வந்தோன் வாழியே!
மன்னுபுகழ் பூதூரான் மனம் உகப்போன் வாழியே!
கஞ்சத் திருமங்கை உகக்க வந்தோன் வாழியே!
கலியன் உரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே!
செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்து உரைப்போன் வாழியே!
திருமலைமால் திருமணியாய் சிறக்க வந்தோன் வாழியே!
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே!

26.திருமங்கையாழ்வார் திருநாடு எழுந்தருளிய திவ்ய தேசம் எது ?
திருக்குறுங்குடி

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்