மேல்கோட்டை (ஆங்கிலம்: Melukote ),(கன்னடம்: ಮೇಲುಕೋಟೆ)இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுக்காவில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், மைசூரிலிருந்து 51கி.மீ., பெங்களூரிருந்து 133கி.மீ தொலைவில் அமைந்துள்ள பசுமையான வயல்கள் சூழ்ந்த அழகிய மலை கிராமம். 

கர்நாடகத்தின் வைணவத்தலைமை பீடமாகக் கருதப்படும் இவ்வூருக்கு "திருநாராயணபுரம்" என்றும் பெயருண்டு.

இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய உற்சவம் வைரமுடி சேவையாகும்.

இராமானுஜர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவமூர்த்தியை நாச்சியாருடன்
எழுந்தருளச் செய்துவைரமுடி அணிவித்து விழா கொண்டாடுகின்றனர்.

இராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக்கிடைக்காத
பேறு இராமானுஜருக்கு கிடைத்தது.

வைர முடி சேவை ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம்  புஸ்ய நட்சத்திரத்தன்று(பூச நட்சத்திரம்) மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது

பிரஹலாதனின் 
மகன் விரோதசனன் பாற்கடலுக்குச் சென்று வைரமுடியை கொண்டு வந்து பாதாள லோகத்தில் மறைத்து வைத்துவிடுகிறான்.

கருடன் அதை மீட்டுக்கொண்டு வரும்போது கண்ணனின் வேய்ங்குழல் நாதம் கேட்டு அவனுக்கு அணிவித்து விடுகிறார்.

கிருஷ்ணன் அதைப் பிறகு இந்த உற்சவ மூர்த்திக்கு அணிவித்து விடுகிறான். 

கலியுகத்தில் அதை வருடத்தில் ஒருநாள் பங்குனி மாதம்  புஸ்ய நட்சத்திரத்தன்று(பூச நட்சத்திரம்)அணிவித்து அழகு பார்க்கிறார்கள்.

கருடனுக்கு வைநதேயன் என்றொரு பெயர் உண்டு.

இந்த முடி பெரிய திருவடியின் பெயரால் வைநமுடி என்று வழங்கப்பட்டுப் பின்னாளில் வைரமுடி என்று மருவியதாகவும் ஐதீகம்.

அந்த கருடன் கொண்டு வந்த வைரமுடியில் கருடனில் பெருமாள் பங்குனி மாதம் புஸ்ய நட்சத்திரத்தன்று சேவை சாதிப்பதே மேல்கோட்டை வைர முடி சேவை என்று சிறப்பித்து கூறப்படுகின்றது.

மேல்கோட் எனும் திருநாராயணபுரத்தில் பங்குனிமாதம் நடக்கும் வைர(கிரீட)முடித்திருவிழா பெருஞ் சிறப்பு வாய்ந்த ஒன்று.'

வைர(கிரீட)முடித்திருவிழா அன்று காலை வைரமுடியும், சாம்ராஜ முடியுமாக இரண்டும் மண்டியா காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டு வழிநடைப்பூஜைகளையும் ஏற்று, மாலை திருநாராயணபுரம் வந்தடையும்.

திருநாராயணபுர (மேல்கோட்)எல்லையிலிருந்து பல்லக்கில் வீதி வழியாக டம் டம் என மத்தளம் ஒலித்தபடி ராஜமரியாதையுடன் திருக்கோவிலுக்கு சென்று சேரும்.
சத்தம் கேட்டதும் வீதிக்கு வந்து பலரும் பல்லக்கை குனிந்து பார்த்து கிரீடம் நோக்கி வணங்குகிறார்கள். 

இரவு ஒன்பது மணிக்கு செல்வநாராயணன் எனும் செல்வப்பிள்ளை வைரமுடிப்புறப்பாடு கண்டருளி, மாடவீதிகள் மிகச்சிறியதாயினும் தமிழ்நாடு ,ஆந்திரா, கேரளா, கர்நாடகாமற்றும் வடக்கிருந்தும் வரும் பக்தர்களுக்குக் காட்சி அளிக்க வேண்டி நான்குதிசையிலும் பெருமாளை திருப்பித்திருப்பி காணச்செய்வார்கள் .

"செலுவா நன்ன
ச் செலுவா”

என பக்தி கோஷம் முழங்கும்.

யாருமே வைரமுடிஅணிந்த செல்வப்பிள்ளையைக்காணாமல் ஊர் திரும்ப இயலாது.

வைரகிரீடம் ஜொலிக்க அவரே சுற்றிச்சுற்றி (அதாவது இறைவனை தோளில் ஏற்றி வருபவர்கள்மூலமாக)
தன் அழகைக்காட்டுவார்!. 

வீதிகளில் வீடுகளில் மேல் மாடங்களில் கைபிடி சுவர்களில் மரக்கிளைகளில் வீட்டுக்கூரைகளில் என பக்தர்கள் எங்கும் பரவி நிற்பார்கள்..

இப்படி ஒரு கூட்டத்தை அதுவும் இராப்பொழுதில் வேறெங்கும் பார்க்கமுடியுமாஎனத்
தெரியவில்லை.

விடியற்காலை 4மணி அளவில் வாஹன மண்டபம் திரும்புவார். 

மண்டபம் சேர்ந்தவுடன் வைரமுடி அடுத்த கணமே பொக்கிஷப்பெட்டிக்கு
போய்விடும். 

கோவிலுக்குள் வந்து யாரும் வைரமுடி தரிசனம் பெற முடியாது 

ஏனென்றால் அடுத்து
ராஜா அளித்த சாமராஜமுடி அணிவிக்கப்பெறும்.
மற்ற ஆறுநாட்களும் சாமராஜமுடியுடன் சம்பத்குமாரனைக் கண்குளிரக்காணலாம்!

கருடபகவான் இதை எல்லாபெருமாள்களுக்கும் பொருத்திப்பார்த்து கடைசியில் மேல்கோட்டை செல்வப்பிள்ளைக்கு சரியாக இருக்கவும் அவருக்கு சூட்டியதாய் இந்த வைரமுடிக்கு பின்னணிக்கதை உண்டு.

போலீஸ் பாதுகாப்புடன் மாண்டியா மானிலத்தின் பாண்டவபுரா ட்ரஸ்ட்டில் வருடம் முழுக்க வைத்திருப்பார்கள் .