முந்தைய பதிவில் நாதமுனிகளை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம்.

திருநக்ஷத்ரம்: சித்திரை மாஸம், கார்த்திகை நக்ஷத்ரம்

அவதார ஸ்தலம்: திருவெள்ளறை

ஆசார்யன்: நாதமுனிகள்

ஶிஷ்யர்கள்: மணக்கால்நம்பி, திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்கார தாஸர், ஸ்ரீ புண்டரீக தாஸர், கோமடம் திருவிண்ணகரப்பன், உலகபெருமாள் நங்கை.

புண்டரீகாக்ஷர், திருவெள்ளறை (ஶ்வேதகிரி) என்ற திவ்ய தேசத்தில் அவதரித்தார். இவருடைய பெற்றோர்கள் அந்த திவ்ய தேசத்து எம்பெருமான் திருநாமத்தையே இவருக்கு வைத்தார்கள். இவருக்கு பத்மாக்ஷர் என்ற திருநாமமும் உண்டு, ஆனால் உய்யக்கொண்டார் என்ற திருநாமமே இன்றளவும் ப்ரசித்தியாக உள்ளது.
 ஆண்டாள் என்ற நங்கையை மணந்து
கொண்ட இவருக்கு இரண்டு
பெண் குழந்தைகள் பிறந்தனர்.
நாதமுனிகளின் முக்கிய பத்து
சிஷ்யர்களில் ப்ரதானமான இவர்,
திவ்யப் ப்ரபந்தம் முதலியவைகளை
அவரிடம் கற்றார்.

உய்யக்கொண்டாரும், குருகைக் காவலப்பனும் நாதமுனிகளுடைய முக்கியமான அந்தரங்க ஶிஷ்யர்களாக இருந்தார்கள். நாதமுனிகள் நம்மாழ்வாரிடமிருந்து சகல அர்த்த விசேஷங்களைப் பெற்ற பிறகு, காட்டு மன்னார் கோவிலுக்கு வந்து நமது ஸம்ப்ரதாயத்தைப் பரப்ப ஆரம்பித்தார்.

 அஷ்டாங்க யோகத்தை குருகைக் காவலப்பனுக்குக் கற்றுக்கொடுத்தார்.
 அஷ்டாங்க யோகத்தின் மூலம் ஒருவர் உடல் உபாதைகளைப் பற்றி யோசிக்காமல், எந்த தடையும் இல்லாமல் எம்பெருமானை அனுபவிக்க முடியும்.

 ஒரு சமயம் நாதமுனிகள் இவரிடம் யோக ஸாஸ்த்திரத்தைக் கற்றுக் கொள்ளும்படி தெரிவித்தபொழுது,
ஆச்சாரியனின் க்ருபை உணர்ந்து "
பிணம் கிடக்க மணம் புணரலாமோ
” என்று வினவினார். அதாவது
இப் பூவுலகிலே சம்ஸாரிகள்
இறையுண்மை அறியாமல் உழன்று
நடை பிணமாக தவிக்கும் போது,
தன்னுடைய நன்மைக்காக
தான் மட்டும் எப்படி " யோக
ஸாஸ்திரம் ” கற்றுக் கொள்வது
என்றும், அது தர்மமும் ஆகாது என்றும்
கூறினார்.

உய்யக்கொண்டாரின் இந்த
பதிலைக் கேட்ட நாதமுனிகள் மிகுந்த
உவகை கொண்டு, உலகம் உய்யவும்,
லோக சேஷமத்திற்காகவும் வைணவ
ஸாஸ்திரங்களை எங்கும் பரப்பவும்
என்று கூறினார். 
இதைக் கேட்ட நாதமுனிகள் மிகவும்
மகிழ்ந்து, அவருடைய பெருந்தன்மையை
“இந்த வையம்
உய்யக்கொண்டீரோ?" என்று பாராட்டி
அருளிச்செயல் மற்றும் அதனுடைய சகல
அர்த்தத்தையும் அவருக்குக்
கற்றுக்கொடுத்தார்.

அன்றிலிருந்து   "உய்யக்கொண்டார்" என்ற திருநாமம்
ப்ரஸித்தியானது. நாதமுனிகள்
அஷ்டாங்க யோகம், அருளிச்செயல்
மற்றும் அருளிச்செயலினுடைய
விக்ஷேஷ அர்த்தங்கள்
அனைத்தையும் ஈய்வர முனியுடைய
குமாரருக்கு (நாதமுனிகளுடைய
திருப்பேரனாருக்கு)
சொல்லிக்கொடுக்குமாறு
உய்யக்கொண்டார் மற்றும் குருகைக்
காவலப்பனுக்குக் கட்டளையிட்டார்.

நாதமுனிகளுக்குப் பிறகு,
உய்யக்கொண்டார் தர்ஸன
ப்ரவர்த்தகராக (நம் ஸம்ப்ரதாயத்தைப்
பாதுகாத்துப் பரப்புபவர்) ஆனார்.
அவருடய சிஷ்யர்களுக்கு அருளிசெயல்
மற்றும் சகல அர்த்த விசேஷங்களையும்
சொல்லிக்கொடுத்தார்

சில காலம் கழித்து
உய்யக்கொண்டாரின் திருமேனி
தளர்வடைந்து, பின் திருநாட்டுக்கு
எழுந்தருளும் நேரம் வந்தது. அவர் தம்
ஸிஷ்யரான மணக்கால் நம்பியையும்
மற்ற ஸிஷ்யர்களையும் அழைத்து,
மணக்கால் நம்பியே நம் வைணவ
தர்மத்தை உலகம் எங்கும் பரப்ப வழி
செய்வார் என்று கூறி, நாதமுனிகள்
முன்னம் தம்மிடம் அளித்திருந்த
பவிஷ்யதாசார்யர் விக்ரஹத்தை,
அவரிடம் அளித்து ஒரு விவரத்தைக்
கூறினார்.

அவர் பரமபத்ததுக்கு செல்வதற்கு முன், மணக்கால் நம்பி (ப்ரதான அந்தரங்க ஶிஷ்யர்) அடுத்த தர்ஶன ப்ரவர்தகர் யார் என்று கேட்க, அவர் மணக்கால் நம்பியையே  ஸம்ப்ரதாயத்தை வளர்க்குமாறு கூறினார். 

பிற்காலத்தில் நாதமுனிகளின்
புதல்வராகிய ஈஸ்வரமுனிக்கு
ஒரு புதல்வன் பிறப்பார் என்றும்,
அவருக்கு " யமுனைத்துறைவன்
" என்று பெயரிட்டு, அவர்
மூலம் ஆழ்வார்களின்
அருளிச்செயல்களையும், தர்ஸன
வளர்க்கவும் என்று கூறிவிட்டு, யமுனைத்துறைவரை அடுத்த தர்ஸன ப்ரவர்த்தகராக உருவாக்குமாறு கட்டளையிட்டார். உய்யக்கொண்டான்
நாதமுனிகளின் திருவடிகளைத்
த்யானித்துக் கொண்டே
திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

*#உய்யக்கொண்டாருடைய_தனியன்*:

நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பத பங்கஜே
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குலநாதாய தீமதே

*#உய்யக்கொண்டாருடைய_வாழி_திருநாமம்*:

வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பிதொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்கவந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால் அரங்க மணவாளர் வளமுரைப்போன் வழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே 

ஶ்ரீ உய்யக்கொண்டான் திருவடிகளே சரணம்