நம் பக்தி எத்தகையது


பகவான் பிறந்த உயிரினங்களுக்குத்தான் அருள்புரிவானா என்றால் அது தானில்லை. தாயின் கர்பத்திலுள்ள கருவையும் காப்பாற்றியிருக்கிறானே .ஆம், பாரதப்போர் முடிந்து, பாண்டவர்களும் ஆட்சி ஏற்றார்கள். கண்ணன் தன் வேலை இனிதே முடிந்தது என்று த்வாரகைக்குப் புறப்பட்டுக் கொண்டி ருந்தார். அப்போது தலைவிரிகோலமாய் ஒரு பெண்மணி, “ தேவாதி-தேவனே, ஜகந்நாதா ! நெருப்பைக்கக்கிக்கொண்டு ஒரு பாணம் என்னைத்-துரத்திக்கொண்டு வருகிறது. அது என் உயிரை மாய்த்தாலும் பரவாயி-ல்லை. என் வயிற்றில் உருவான கருவை அழித்துவிடாமல் காப்பாற்று“ என்று கதறிக்கொண்டே ஒடி வந்தாள். கண்ணனுக்குத் தெரிந்துவிட்டது, வந்த பெண்மணி உத்திரை, அபிமன்யுவின் மனைவி என்று. மேலும் அவருக்குப் புரிந்துவிட்டது இது அஸ்வத்தாமனின் வேலைதானென்று. 
பாண்டவர்களின் சந்ததியே இல்லாமல் செய்துவிட வேண்டுமென்று அவன் “ அபாண்டவீயம் “ என்ற மிகக்கொடிய அஸ்தரத்தை கருவை அழிக்கும் பொருட்டு ஏவி விட்டிருந்தான். கண்ணன் உடனே சோதிவடிவமாக அவள் கர்பத்துள் நுழைந்து, தன் சுதர்ஸன சக்ரத்தால் அந்த அஸ்தரத்தை அழித்தான். குழந்தை பிறந்ததும், அது விஷ்ணுவால் காப்பாற்றப்-பட்ட குழந்தை என்ற காரணத்தால் அதற்கு “ விஷ்-ணுராதன் “ என்று பெயர் சூட்டினர். அந்தக்குழந்தை வெளியில்வந்ததும் தான் தன் தாயின் கருவில் இருந்த போது கண்ட எம்பெருமானின் உருவம் கண்ணில் படுகின்றதா என்று சுற்றும், முற்றும் பரீக்ஷித்துப் பார்த்ததால் அவனுக்கு “ பரீக்ஷித் “ என்ற பெயரும் ஏற்பட்டது.
என்ன ஸ்வாமி இதுவரை நீங்கள் பிறந்து, பிறக்கயிருக்கின்ற உயிருள்ள வற்றை மட்டுமே பகவான் காப்பாற்றியிருக்கிறார் என்று கூறினீர்கள். அவனால் படைக்கப்பட்ட உயிரற்ற அசேதனங்களை காப்பாற்றியிருக் கிறானா? என்றுதானே கேட்கிறீர்கள் மேலே படியுங்கள் உங்களுக்கே புரியும்.
கண்ணன் வெண்ணையையும், தயிரையும் திருடி உண்பான் என்பது நீங்கள் எல்லோரும் அறிந்த ஒன்றே. ஒருசமயம் கண்ணன் ஒருவீட்டில் வெண்-ணையைத் திருடிவிட்டானென்று யசோதை அவனைத் துரத்திக்கொண்டு வந்தாள். கண்ணன் தயிர்பானைகள் செய்யும் ஒரு ததிபாண்டன் வீட்டி-ற்குள் சென்று ஒரு பெரிய பானைக்குள் ஒளிந்து கொண்டான். அதை ததிபாண்டன் கவனித்துவிடவே பானைக்குள்ளிருந்த கண்ணன் அவனுக்கு ஜாடையால் தன்னைக்காட்டிக்கொடுக்க வேண்டாமென்று கெஞ்சினான். அவனும் யசோதை வந்த போது அங்கு கண்ணன் வரவேயில்லை என்று 
பொய் சொல்லி அவளை அனுப்பி வைத்தான். அவள் சென்றதும், வெளி-யில் வந்த கண்ணன், அவனிடம், “ பொய்ச்சொல்லி என்னைக் காப்பா-ற்றிய உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன் “ என்றான். ததிபாண்டனுக்கோ, கண்ணனின் சக்தி நன்றாகத்தெரியும். மேலும் கண்ணன் பானைக்-குள் இருந்தது, அசேதனப்பொருள்களுக்கும் அவன் அந்தர்யாமியாக இருப்பதை உணர்த்துவதுபோல் தெரியவே “ பொய்க்-காமல் எனக்கு மோக்ஷம் வேண்டும் , அதுமட்டுமல்ல “ என்று தயங்கி-னான். உடனே கண்ணன்,” மோக்ஷத்திற்குமேற்பட்டது எதுவுமில்லையே. பின்வேறென்ன வேண்டும் “ என்று கேட்க, அதற்கு அவன், “ எனக்கு மோக்ஷம் தந்தால்மட்டும்போதாது. அந்தபானைக்கும் மோக்ஷம் அருளவேண்டும். “ என்று கேட்டதும், கண்ணன் கண்களுக்கு அவன் ஒரு ஆச்சார்யனாகவே காட்சியளித்-தான். காரணம் ஆச்சார்யர்கள்தான் தங்களுக்கு மட்டுமல்லாது, தன்னைச் சேர்ந்த சேதன, அசேதனங்களுக்கும் சரணாகதி பெற்று தருவர்.ஆகவே கண்ணன் உடனே, “ தந்தோம் “ என்று அருள் புரிந்தான்.
இப்போது புரிந்ததா! எம்பெருமானின் கருணை அளவிடமுடியாதது என்று. காரணம் அவனே அநந்தன் அல்லவா !
நீங்களே சொல்லுங்கள், எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன், ஆத்மாக்களில் வேறுபாடு பார்ப்பவனா? இல்லையே.
ஆக, நாம்தான் அவனை விட்டு விலகி, விலகி போகின்றோம். பிறகு அவன் நமக்கு கருணை புரிவதில்லை என்று புலம்புகின்றோம். அவன் அருள் நமக்குக்கிடைக்காமல் போவதற்குக் காரணம், நாம் போன ஜென்மத் தில் செய்த பாவங்கள், இந்த ஜென்மத்தில் செய்து கொண்டிருக்கும் பாவங் களே. இதற்கு என்ன செய்யலாம்? த்ரொபதியைப்போன்று, கஜேந்திரனைப் போன்று மற்ற தேவதைகளை நாடிச்செல்லாமல், அந்த ஸ்ரீமந் நாராயணன் திருப்பாதங்களில் சரணம் என்று முழு விசுவாசத்துடன் விழுந்துவிட்டால், நாம் அதுவரை செய்தப் பாவங்களுக்கு தண்டனை இல்லாமல் செய்து விடு வான் அதன் பிறகு நம் உயிர் இருக்கும் நாட்கள் வரை பாவங்கள் செய்யா-மல் இருக்கவேண்டும். ஒருவேளை நம்மையறிமல் ஏதாவது பாவங்களை நாம் செய்தாலும் சிறு, சிறு தண்டனைகளை அளித்து, நம் வாழ்நாட்கள் முடிந்ததும் தம்மிடம் சேர்த்துக்கொள்வான் இது உறுதி

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!