பெருமாள் கோயில்களுக்கு போறப்போ பண்ண வேண்டியவை யாவை? பண்ணக் கூடாதவை யாவை?

பெருமாள் கோயில்களுக்கு போறப்போ பண்ண வேண்டியவை யாவை? பண்ணக் கூடாதவை யாவை? பராசரபட்டர் அருளப் பண்ணின ஸ்ரீ ரங்கராஜஸ்தவம் வாசிக்கறப்போ இது புரியும். 

நாமெல்லாம் பெருமாள் கோயில்களுக்கு போறப்போ என்ன பண்றோம்? கடகடன்னு நேரா வரிசைல போய் நிக்கறதப் பத்தியோ, எவ்ளோ கூட்டம் இருக்குன்னோ, உள்ள போறதுக்கு தெரிஞ்சவா யாரவது கண்ணுல தெம்படறாளா அப்பிடி இப்பிடின்னு யோசிக்கறோம். வரிசைல நின்னோ யாரையாவது சிபாரிசுக்கு புடிச்சோ சந்நிதிக்குள்ளே நுழைஞ்சு பெருமாள் தாயாரை சேவிச்சுடறோம். இன்னும் சில பேர், இதோட சேர்த்து எவ்ளோ திவ்ய தேச எம்பெருமானை சேவிச்சு முடிச்சிருக்கோம் அப்படிங்கற கணக்கை சரிபாத்துக்கறா. சந்நிதிக்குள்ளே போய் அவசரகதிலே பெருமாளை சேவிச்சுட்டு வந்துடறோம். மேலும் சில பேரோ, பெருமாள் சந்நிதிக்குள்ளே போய் நின்னுண்டு, ஒருத்தரை ஒருத்தர் குசலம் விசாரிச்சுண்ட்டு பெருமாளை சேவிச்சேன்னு பாவனை பண்ணிட்டு வெளிலே வந்துடறோம். 

ப்ராசீனமான பெருமாள் கோயில்கள் ஒவ்வொண்ணும் அகல நீளமா விஸ்தீரணத்தோட இருக்கும். பிரம்மாண்டமான மதில் சுவர்கள் அழகான தூண்கள் மண்டபங்கள் சிற்பங்கள் அகலமான நிலைப்படிகள் பிரகாரங்கள்னு எவ்ளோ விஷயங்கள். எதையாவது நாமோ நின்னு சேவிக்கறோமா? 

பராசரபட்டர் ஸ்ரீரங்கத்துல ரங்கநாதனை சேவிக்கப் போவாராம். பிராகாரத்தை ப்ரதக்ஷிணம் பண்றப்போ அவரை தவிர உள்ள மத்தவாள்ளாம் வேகமா இவரைத் தாண்டி போயிண்டே இருப்பாளாம். பட்டர் மட்டும் மெதுவா அங்குள்ள மண்டபங்கள் தூண்கள் சிற்பங்கள் மதில் சுவர்கள் எல்லாத்தயும் கண்ணார பாத்துண்டே மெதுவா ப்ரதக்ஷிணம் பண்ணுவாராம். கண்ணுல தாரதாரயா ஜலம் வழிய தொடச்சிண்டு தொடச்சிண்டு மறுபடியும் தன்னை சுத்திவர இருக்க சௌந்தர்யங்களை அனுபவிப்பாராம். அந்த வானளாவிய மதில்சுவர்கள் அவர் கண்ணுக்கு ஒரு பெரிய கருடன் தன்னோட பிரம்மாண்டமான ரெக்கைகளை விரிச்சுண்டு அந்த ஸ்ரீரங்கநாதனை காவல் காக்கறாப்போல நெனைச்சி அங்குலம் அங்குலமா அனுபவிப்பாராம். அப்பிடி பராசரபட்டர் அணு அணுவா ரசிச்சு சேவிச்ச ஸ்ரீரங்கத்தினை தான் இன்னிக்கு நாமெல்லாம் சேவிச்சுண்டிருக்கோம். 

ஆண்டாள் அருள பண்ணினா மாதிரி கோயில் காப்போன், தோரண வாயில் காப்போன், மணிக்கதவம் ஒவ்வொண்ணும் ஒவ்வொண்ணும் அது எதுவா இருக்கோ அதுவா பிறவி எடுக்க ஜென்ம ஜென்மாந்திரங்கள்ல சுகர்மாக்கள் நெறய்ய பண்ணிருக்கணும். அவற்றை சேவிக்கறப்போ அந்த எம்பெருமானோட திருவுள்ளத்துக்கு உகப்பாறது. அவன் திருவுள்ளத்துக்கு உகப்பா இருக்கறத பண்றதை விட வேறென்னது ஒசத்தியா இருக்க முடியும்? இதை விட ஒசந்த சுகர்மா வேறொண்ணு இருக்க முடியுமா? அவனோட சொத்தான ஆத்மாவை அபகரிச்சுண்டு வந்திருக்கோம். அவன் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆத்மார்த்தமா அனுபவிக்காம அல்ப விஷயங்களில் அதனை ஈடுபட பண்ணுவது எவ்ளோ தூஷகர்மாவை சேர்க்க வல்லது? 

ந்ருஸிம்ஹ அவதாரத்தை மனனம் பண்றப்போ ஒவ்வொரு தடவையும் மனசு யோசிக்கும்... அவன் தூணுல துரும்புலல்லாம் இருந்தானே. நாமோ அந்த அவதாரத்தும் போது அப்பிடி ஏதாவது ஒரு துரும்பா இருந்திருக்கக் கூடாதான்னு. அப்படி அவன் நெறைஞ்சிருக்க இந்த பிரபஞ்சமே எவ்ளோ புண்யம் பண்ணிருக்கணும். அதனாலே தானே மூணே மூணு ஜென்மங்கள் உனக்கு எதிரியா இருந்தாலும் பரவால்லே. ஆனா உன் பக்தனா கூட மேலும் பல ஜென்மங்கள் உன்னை விட்டு பிரிஞ்சிருக்கலாகாதுன்னு ஜயவிஜயர்கள் எதிரிகளா பொறக்கற வரம் கேட்டுண்டா. ந்ருஸிம்ஹனோட நகமா சுதர்ஷனாழ்வார் கிளர்ந்தெழுந்தாரே. ஆயிரமாயிரம் ராட்சச சேனைகள்ல ஒண்ணா இருந்திருந்தா கூட அவன் கைப்பட நம்மளுக்கு கதி மோக்ஷம் கிடைச்சிருக்குமே. எவ்வளவு பிராப்தம் வேணும் இதெல்லாத்துக்கும். என்னே ஹிரண்ய கசிபு பண்ணின சுகர்மா. 

ந்ருஸிம்ஹா.. ந்ருஸிம்ஹா. உன்தன்னோடுறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது. உன் தாள் கண்டு கொண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன். சரணாகதோஸ்மி. காப்பாத்து.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!