ஆலய தரிசனம் கோடி புண்ணியம் என்று கூறுவார்கள். இனி நீங்கள் ஆலயம் செல்லும் போது இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள். இதனால் புண்ணியம் கிடைக்கும். அத்தோடு மட்டும் இல்லாமல் இதை செய்வதால் உங்கள் கர்ம வினையும் தீர்ந்து விடும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் நன்மை தீமைகளை கணக்கிட்டு அதற்கான பலன்களை தருவது தான் கர்மா . இந்த கர்மா தீர ஆன்மீகத்தில் உள்ள ஒரு எளிய பரிகார முறை தான் இந்த செப்பு காசு பரிகாரம். இதை எப்படி செய்வது என்பது தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
இந்த நீர் நிலைகளில் செப்புக் காசுகளை வீசுவதை நாம் முன்னோர்கள் பலர் வழக்கமாக செய்து வந்தார்கள் இதற்கு காரணம் அந்த நீர் நிலைகள் சுத்தமாவது மட்டும் என்று தான் நாம் இதுவரை நினைத்திருந்தோம் ஆனால் அது மட்டுமே உண்மை அல்ல. நாம் செப்புக்காசுகளை வீசும் போது தண்ணீர் சுத்தமாகி அதில் வாழும் ஜீவராசிகள் நல்ல படியாக வாழ இந்த செப்புக்காசு உதவும் என்பது ஒரு அறிவியல் ரீதியான விஷயமாக இருந்தாலும், இந்த செப்புக்காசுகள் வீசும் போது நம்முடைய எதிர் மறை எண்ணங்களையும், கர்மாக்களையும் சேர்த்து நீக்கி விடும் என்று ஆன்மிக ரீதியாகவும் சொல்லப்படுகிறது.
இந்த பரிகாரம் செய்ய 11 செப்பு காசுகளை வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் மொத்தம் நான்கு பேர் இருக்கிறீர்கள் என்றால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக 11செப்பு காசுகள் வாங்கி கொள்ளுங்கள். இதை வாங்கி வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விளக்கேற்றி, உங்கள் குலதெய்வத்திடம் நான் தெரியாமல் செய்த எனது கர்ம வினை எல்லாம் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு, உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது நீர்நிலைகள் உள்ள ஆலயங்ளுக்கு சென்று அங்கு உள்ள நீர் நிலைகளில் இந்த செப்பு காசுகளை வீசி விடுங்கள். வீசும் போதும் இதே போல் நான் தெரியாமல் செய்த எனது கர்ம வினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வீசி விடுங்கள்.
நீங்கள் இருக்கும் நீர்நிலை இருக்கும் ஆலயங்கள் இல்லை என்றால் ஆலயத்திற்கு சென்று வழிபட்ட பிறகு கடலில் வீசி விடுங்கள். ஆலயத்தில் உள்ள நீர் நிலைகளில் போடுவது மிகவும் நல்லது இல்லாத பட்சத்தில் இப்படியும் செய்யலாம். ஆனால் அவரவர் பரிகார காசுகளை அவர்களின் கையாலே தான் போட வேண்டும் மற்றவர் போடக்கூடாது.
இந்த பரிகாரம் செய்வதன் மூலம் நமது கர்மா தீர்வதோடு மட்டுமல்லாமல் புண்ணியமும் சேர்த்தே கிடைக்கும். பொதுவாக நீர் நிலைகளில் செப்புக்காசு சேர்ப்பது என்பது நீர் நிலைகளை சுத்தம் செய்வதற்காக நம் முன்னோர்கள் கையாண்ட ஒரு முறை. இதனால் நீர்நிலைகளில் வாழும் உயிரினங்கள் நல்ல நீரில் வாழ இந்த செப்புக்காசுகள் உதவி செய்யும். இதை இந்த பரிகாரத்தின் பேரில் நாம் செய்யும்போது அந்த உயிரினங்கள் நல்ல முறையில் வாழ உதவிய புண்ணிய பலனும் நமக்கும் கிடைக்கும்.