பெருமாள் திருநாமங்கள் எப்பப்போ எப்படிச் சொல்ல வேண்டும் ?

ஆபத்தான காலத்தில் எம்பெருமான் திருநாமங்களைச் சொல்வோம்! வாரீர்!

பொய்கை ஆழ்வார் அருளிச்செய்கிறார்!

“ அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டொழிய வேண்டில் ...நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரணழிய முன்னொருநாள்
தன் விலங்கை வைத்தான் சரண்!
......முதல் திருவந்தாதி!

மநோவ்யாதி,,,,சரீரத்தினால் வரும் வ்யாதி,,,நம்முடைய அஜ்ஞானம் ,பாவங்கள், வினைகள்,இவை எல்லாவற்றையும் துரத்தி,.. அவைகள் நம்மைவிட்டு தூர ஓடிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் சக்ரவர்த்தித் திருமகனான இராமபிரானைச் சரண் அடைய வேண்டும் என்கிறார் ஆழ்வார்!

இங்கு...“ அருவினை “...என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்!....
அதற்குப் பொருள் என்னவென்றால், .... இந்த வினைகளை நம்மால் அழிக்க முடியாத வினைகள் என்றதாயிற்று!
ஏன்?... இவைகள்...மூட்டை மூட்டையாக பாபக் குவியல் போன்று இருப்பது!
நம்மால் வெளியேற முடியாதபடி இருப்பது!
அதனால்தான் அழிக்க முடியாது..
சில பூச்சிகள் தம்மைச் சுற்றி தாமே கூடு கட்டிக் கொண்டுவிடும் !
பிறகு அந்தக் கூட்டில் இருந்து அந்த பூச்சியால் தானே வெளிவர முடியாததால், அப்படியே அழிந்துவிடுமாம்!
அதைப்போலத்தான் நம்போன்றவர்களும் .. இருக்கிறோம்...
பாபமூட்டையால் ஒரு கூடு கட்டிக் கொண்டு,அதிலிருந்து வெளியே வராமல் தவிக்கிறோம் !
அப்படிப்பட்ட கூட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்றால்.... ஶ்ரீராமனின் திருவடியைப் பற்றுங்கள்! அவன் நம்மை வெளியேற்றிவிடுவான் என்கிறார் ஆழ்வார்!!
பொதுவாகவே..... பேரிருளில் ந்ருஸிம்ஹப் பெருமாளை த்யானிக்க வேண்டும்!
தாபங்களால் பீடிக்கப்பட்டவ ர்கள் க்ஷீராப்தியில் சயனம் கொண்டுள்ள எம்பெருமானை த்யானிக்க வேண்டும்!
விஷ ஜந்துக்களால் பாதிக்கப் பட்டவர்கள் கருடத்வஜனான பகவானை த்யானிக்க வேண்டும்!...
...என்று விஷ்ணு தர்மம் சொல்கிறது!

“ அந்த காரேதி தீவ்ரே ச நரஸிம்ஹம் அநுஸ்மரேத்!
தர்த்யகிலது:காநி தாபார்தோ ஜலஶாயிநம்
கருடத்வஜா நுஸ்மரணாத் விஷ வீர்யம் ப்ரணஶ்யதி!!”

அவனை நினைப்போம்!
பலம் பெறுவோம்!!

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!