சுதர்ஸனம் என்பது விஷ்ணு பகவானின் வலது கரத்தில் , எப்போதும் சுற்றி கொண்டிருக்கின்ற.
ஒரு ஆயுதம்,
" சுதர்ஸன சக்கராயுதம் "
சுதர்ஸனம்?
சுத; நல்ல,
தர்ஸனம் ;திருஷ்டி,
:நல்ல திருஷ்டி.
அந்த சுதர்ஸனசக்ராயுதம் கொண்டு, பகவான் நமக்கு ஏதாவது துன்பங்கள் நேரிடுகையில், சக்ராயுதனை,
சங்குசக்ராயூதனை!
அச்சுதனாந்தனை!!
இதயசுத்தியோடு ப்ரார்த்திக்கும் பக்தர்களை பகவான் ஆயிரம் பற்கள்(ஆரங்கள்)கொண்ட சுதர்ஸன சக்ரத்தால்,
சக்ராயுதன் நம்மை துன்பங்களிலிருந்து, மனப்பூர்வமாக ரக்ஷித்து காப்பார்
சுதர்ஸன சக்ரத்தேயூம், அதின்கூட மகாவிஷ்ணு பகவானையும் ப்ரீத்தி படுத்துவதற்காகவும்,
உத்திஷ்ட பல ப்ராப்த்திக்கும் வேண்டி,
சொல்கின்ற மந்திரம்,
"சுதர்ஸன மஹாமந்திரம் "
மஹாவிஷ்ணுவின் ப்ரதானப்பட்ட நாள்,
" வியாழக்கிழமை "
ஆதாலால் எல்லா வியாழக்கிழமையும், நாம் வாழும் கிரகத்தை சுத்திபடுத்தி நம்மையும் ஜலத்தால் சுத்திபடுத்தி,
நல்ல வெள்ளை வஸ்திரங்கள் தரித்து காலையில், "சுதர்ஸன மஹாமந்திரம் " புருஷன்மார்கள் சொன்னால் அவர்களுக்கு, அவர்கள் கிரகங்களுக்கு,
அவர்கள் வம்ஸ தாழாதிமார்களுக்கு, அவர்களுடைய அங்கத்தினர்களுக்கு,
பகவான் அச்சுதானந்தன் சகல ஐஸ்வர்யங்களும் கொடுப்பான்,
விவாஹம் தடைகள்,
வித்யாப்யாஸம் தடைகள்,
வியாபர தடைகள்,
உத்யோஹம் தடைகள்,
கண் திருஷ்டி நீங்குதல்,
சத்ருநாஸம்,
போன்றவை மனுஷ்யன்மார்களுக்கு சம்பவிப்பதை கண்கூடாக காணலாம் '
அதுமட்டுமல்ல,
வியாழன் கிரகம்,
புதன்கிரகம்,
நீச்சக்ஷேத்ரம்,
அனிக்ஷ்ட பாவக்ஷேத்ரத்தில்,
மௌடிகம் போன்ற ஸ்திதி கொண்டால்,
இந்த,
" சுதர்ஸன மஹாமந்திரம் " வியாழன் தோறும் சொல்லி வந்தால்,
ஜனன ஜாதகத்தில் உள்ள,
புதன், வியாழ கிரகதோஷங்கள் நிச்சயமாக நீங்கும்.
நல்ல குணங்கள் சம்பவிக்கும்,
குறைந்தபட்சம் 108 தடவை சொல்லவேண்டும் '
முடியாத பக்ஷத்தில் சுமார் 54, தடவையாவது சொல்வது நல்லது,
ஸ்த்ரீக்கள் இந்த மந்திரம் சொல்லக்கூடாது, என கிரந்தங்களில் சொல்லப்படுகிறது,
அதேபோல் "விஷ்ணு வின் கையில் இருக்கும் சுதர்ஸன சக்ரத்தை ப்ரீத்தி படுத்துவதற்காகவும்,
அதை தனது வலக்கரத்தில் தாங்கி கொண்டு நம்மை ரக்ஷிக்கும்.
"ரக்ஷ கர்த்தா ""
"சக்ரராயூதத்தோனையும் " சந்தோஷிக்க செய்வது, "
" சுதர்ஸன ஹோமம் "
சுதர்ஸனஹோமம் "
எளிமையாக "லகுஹோமம் "
ஆடம்பரமாக. "மஹாசுதர்ஸன ஹோமம் "
என இரண்டு முறையில் செய்யப்படுகின்றது,
இந்த ஹோமத்தை கிரகத்தில் செய்தால்,
" அபிசார தோஷங்கள் " கண்டிப்பாக நீங்கும்,
தோஷங்கள் அதிகமாக இருந்தால்,
" மஹாசுதர்ஸன ஹோமம் "நடத்துவது உத்தமம்,
கிரகத்திற்கு க்ஷேம சௌகர்யங்கள் உண்டாகுவானும்,
" பித்ருதோஷம் "நீங்குவானும்,
லலிதமான முறையில் " லகு,
" சுதர்ஸன ஹோமம் " எளிமையான முறையில் நடத்தலாம்,
எள்ளு,
அக்ஷதம்.
பஞ்சகவ்யம்,
கடுகு,
பசுநெய்,
பசு பால்பாயம்,
போன்ற த்ரவ்யங்கள் கொண்டு ஹோமங்கள் செய்யப்படுகிறது.
வியாழன்தோறும் சொல்ல வேண்டிய,
" ஸுதர்ஸன மந்திரம் "
" ஓம் க்லீம் க்ருஷ்ணாய,
கோவிந்தாய,
கோ பீஜன, வல்லபாய,
பராய பரம் புருஷாய பரமாத்மனே,
பரகர்ம்மா மந்தர யந்திர,
ஔஷதயாஸ்த்ர ஸஸ்த்ராணீ,
ஸங்கர ஸங்கர ம்ருத்யேர் மோர்ச்சய,
மோசய,
ஓம் நமோ பகவதே,
மஹாசுதர்ஸனாய,
தீப்த்ரே ஜாலா பரீதாய,
ஸர்வதீக்ஷோ பணகராய,
ப்ரஹ்மணே,
பர ஜோதிஷே ஹும் ஹட் ;
இந்த சுதர்ஸன மந்திரம் வியாழக்கிழமை தோறும் சொல்லி வரவேண்டும்.