புரட்டாசி வந்தாலே விஷ்ணு பக்தர்களுக்கு கொண்டாட்டமே

அதிகாலை ப்ரம்ஹ முகூர்த்தத்தில் எழுந்து ஸ்நானம் செய்து சாப்பிடாமல் ஓடோடி சென்று அலங்காரப் பிரியனான பரமபதவாசனையும் தாயாரையும் தரிசிப்பது கோடான கோடி புண்ணியம் தரும்.
 
எனக்கு தெரிந்து சிறுவயதில் அதிகாலையில் 4:00மணிக்கு பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெறும் அப்போது பாடும் பஜனை பாடல்கள் மற்றும் சஹஸ்ர நாமம் கேட்க ஆஹா நாம் என்ன புண்ணியம் செய்தேன் நாராயணனின் திவ்ய நாமங்களை கேட்பதற்கு நாம் இந்த பிறவிப் பயனை அடைந்து விட்டது போல தோன்றும்.

அதுதான் பெருமாளுக்கு உண்டான சக்தி 

புரட்டாசி சனி அத்தகைய சக்தி வாய்ந்தது.

மற்ற மாதங்களைக் காட்டிலும் இந்த புரட்டாசி அதி உத்தம பலன்களை அளிக்கிறது.

அதற்கு முன் ஸ்ரீமந் நாராயணன் யார் என்றும் அவருக்கு பிடித்தவை என்ன என்றும் பார்ப்போமா !!

ஸ்ரீமந் நாராயணன் -  காக்கும் கடவுள்

மும்மூர்த்திகளில் ஒருவர்

ஸ்ரீமஹா விஷ்ணு - த்வைதம் மற்றும் வைணவ நெறிகளின் தலைவர்.

வேறுபெயர்கள்- மஹா விஷ்ணு, பரமாத்மா, வேணுகோபாலன், ஸ்ரீராமபிரான், ஸ்ரீஅரங்கநாதர், வேங்கடவன், கோவிந்தராஜன், வெங்கடேசப் பெருமாள், சீனிவாசன் என ஆயிரம் ஆயிரமாக சொல்லி கொண்டே போகலாம். 

திருமாலின் ஆயிரம் பெயர்கள் . 
 (விஷ்ணு சஹஸ்ரநாமம்)

உகந்த நாட்கள்- புதன் மற்றும் சனிக்கிழமை சிறப்பு. 
எந்நாளும் வழிபடலாம்.

உகந்த மலர்கள்- தாமரை, மருக்கொழுந்து, பவளமல்லி, 
துளசி அதி சிறப்பு.

ஆயுதம் - சங்கு , சக்கரம் , மற்றும்
கதாயுதம் ,பஞ்சாயுதங்களை கொண்டவராகவும்,

விழாநாட்கள் -  வைகுண்ட ஏகாதசி விழா, மாசிமகம் தீர்த்தவாரி- பாற்கடலில் தோன்றிய பார்கவியை பரந்தாமன் மணந்ததால், தன் மாமனார் கடலரசனை கண்டு நீராடும் நாளாகும்.

புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரதன்று வாமன அவதாரம். 

புரட்டாசி துவிதியை திதியன்று பலராமன் அவதாரம், 

புரட்டாசி மூல நட்சத்திரத்தில் சரஸ்வதி தேவி அவதாரம். 

சூரியன் கன்யாராசியில் பிரவேசிப்பதால் இம்மாதம் கன்யா மாதம் எனப்படும். 

புரட்டாசி சனியன்று சனீஸ்வரன் அவதாரம். 

திருப்பதியில் புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வைகுண்ட ஏகாதசி பிரமோற்சவத்தை பிரம்ம தேவன் முன்னின்று நடத்தி வழிபடுகிறார் என்கின்றது ப்ரம்ஹ வைவர்த்த புராணம். 

நாராயணனின் கல்யாண குணநலன்கள்

திருமாலின் கல்யாண குணங்களாக நான்கு குணங்கள் கூறப்பெறுகின்றன. அவையாவன,..

1. வாத்சல்யம் - தாய்ப்பசுவின் கன்று கொள்கின்ற அன்பு.
2. சுவாமித்துவம் - கடவுள்களுக்கெல்லாம் தலைமையேற்கும் சிறப்பு.
3. சௌசீல்யம் - ஏற்றத்தாழ்வின்றி நட்பு பாராட்டுவது.
4. சௌலப்யம் - கடவுளின் எளிமையை குறிப்பது.

இந்த நான்கு குணங்களும் திருமாலுடைய ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தில் வெளிப்பட்டதாகவும் கருதப்பெறுகிறது.

அர்ஜூனனின் தவறை நோக்காது, பாரத போரினை நிகழ்த்தியமை வாத்சல்யமாகவும், அர்ஜூனனுக்கு தன்னுடைய பரத்துவத்தை விளக்கியமை சுவாமித்தரமாகவும், குசேலனிடம் நட்பு பாராட்டியமை சௌசீல்யமாகவும், இறைவனாகிய திருமாலே மனித உருவெடுத்து அவதரித்தமை சௌலப்யமாகவும் சொல்லப்பெறுகிறது.

வணங்கும்முறை- கோவிலுக்கு வெளியில் உள்ள சிறிய திருவடியை-ஹனுமன் அல்லது பெரிய திருவடியான கருடனை வணங்கவும். 

புராதனக் கோவிலின் முன்பகுதியில் உள்ள கொடிமரத்தை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கவும். 

ஆழ்வார்கள், ஆச்சாரியர்களை வணங்கவும். எல்லா சன்னதிகளிலும் அனுக்கிரகம் பெற்று தாயார் சன்னதிக்கு வெளியில் உள்ள துவார பாலகிகளைச் சேவித்து அனுமதியுடன் தாயார், ஆண்டாள் ஆகியோருக்கு அர்ச்சனை செய்து அல்லது வணங்கி மூலவரான பெருமாளின் எதிரில் உள்ள கருடாழ்வார் துவாரக பாலகர்களை வணங்கி அவர்களின் அனுமதியுடன் மூலவரான பெருமாளைத் தரிசிக்கவும்.

இறைவனுக்கு நைவேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத் தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். நெய்வேத்தியப் பொருட்களை அர்ச்சகரிடம் கொடுக்கவும். 

நின்ற, இருந்த, கிடந்த ஆகிய எந்த கோலத்தில் இருந்தாலும் பாதத்திலிருந்து சேவித்து முகத் தரிசனம் செய்யவும். 

அர்ச்சகர் தீப ஆரதனைக் காட்ட கண்களை மூடாமல் இறைவனைப் பார்த்து வணங்கவும். 

அர்ச்சனை ஆரத்தி முடிந்தபின் துளசி, தீர்த்தம் பெற்று வரவும். அருள் நிறைந்துள்ள பெருமாள் கோவிலில் ஒரு பகுதியில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து ஸ்துதிகள் அல்லது நாமங்களைச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு எழுந்து வரவும்.

அப்படி செய்தால் தாயார் நம்முடனே வீட்டிற்கு வருவார்.

முடிந்த வரை அமங்கள வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்.

தசாவதாரம்

திருமாலும், திருமகளும் பாற்கடலில் தனித்திருக்கும் வேளையில் சில சநகாதி முனிவர்கள் திருமாலைக் காண வந்தார்கள். 

அவர்களை ஜெய விஜய எனும் இரு வாயிற்காவலர்களும் தடுத்தனர். இறைவனின் தரிசனத்திற்கு வந்த தங்களைத் தடுத்தமையால் கோபம் கொண்ட முனிவர்கள் வாயிற்காவலர்களைக் கொடூர அசுரர்களாகப் பிறக்கும்படி சாபமிட்டனர். இதையறிந்த திருமால் தன்னுடைய வாயிற்காவலர்கள் அரக்கர்களாகப் பிறக்கும் போது, அவர்களை ஆட்கொள்ளும்படி செய்ததாகத்க் தசாவதாரங்களுக்கு காரணம் சொல்லப்படுகிறது.

பத்து அவதாரங்கள் அல்லது தசாவதாரங்கள் என்று கூறப்படுவன:

1. மச்ச அவதாரம்
2. கூர்ம அவதாரம்
3. வராக அவதாரம்
4. நரசிம்ம அவதாரம்
5. வாமண அவதாரம்
6. பரசுராம அவதாரம்
7. இராம அவதாரம்
8. பலராம அவதாரம் / கௌதம புத்தர்
9. கிருஷ்ண அவதாரம்
10. கல்கி அவதாரம்

பெருமாளின் எந்த ஸ்லோகத்தை படித்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என பார்க்கலாமா !!

1. “ஸ்ரீவெங்கடேச கராவலம்பம்” -திருக்கரங்களால்அருள் புரிய- கஷ்டங்கள் நீங்க-தினமும்-காலை.

2. “அச்சுதன்அஷ்டகம்” -ஆயுள், ஆரோக்கியம், ஆனந்த வாழ்வுக்கு- துக்க மோசக அச்சுத அஷ்டகம்- தினமும்-ஆதிசங்கரர்.

3. “ஸ்ரீரங்கநாத அஷ்டகம்” -எண்ணங்கள் ஈடேறும், புண்ணிய பலன்கள் கிட்டும்- தினமும் / வேண்டும்போது.

4. “ஸ்ரீ பாண்டுரங்க அஷ்டகம்” - சகல மங்களங்கள் பெற- ஆதிசங்கரர் இயற்றியது. பெற்றோரை முதலில் நினைத்து, தினமும் / வேண்டும்போது.

5. “ஸ்ரீபார்த்தசாரதி ஸ்லோகம்”- புதன், சனி தோஷம் விலகி, வம்சம் சிறந்து வளர- தினமும் வேண்டும்போது.

6. “தன்வந்திரி பகாவான் ஸ்துதி” - தீராத நோய்கள் தீர- தினமும்/ வேண்டியபோது.

7. “ ஸ்ரீராமர் ஸ்துதி” -ஆபத்துக்களின் பயம் விலகி சந்தோஷம் கிடைக்கப்பெற- தினமும் முடிந்தபோது.

8. “ஸ்ரீராமபுஜங்காஷ்டகம்” -துன்பங்களை நீக்கி,ஆரோக்கியம், ஆனந்த வாழ்வுக்கு- தினமும்- வேதவியாசர்.

9. “ ஸ்ரீநரசிம்ஹர் ஸ்துதி” - கடன், கிரக தோஷங்களிலிருந்து நிவர்த்தி- நரசிம்மர் ஜெயந்தியன்று.

10. “ஸ்ரீ நாராசிம்ஹர் ஸ்துதி” -பன்னிரு திருநாமங்கள்-தினமும்.

11. “ஹரிசரணாஷ்டம்” -நீண்டஆயுள் நிறைவாழ்வுக்கு- புரட்டாசி மாதத்தில்-ஆதிசங்கரர் அருளியது.

12. “பஞ்சாயுதத் ஸ்துதி” - திருமாலின் திருவருளைப் பெற- புரட்டாசி மாதத்தில் -தினமும்.

13. “ ஸ்ரீ வெங்கடேச காரவலம்பம்” -கடன்கள் தோஷங்கள்தீர-புரட்டாசி மாதத்தில்-தினமும்/சனிக்கிழமை.

14. “முகுந்தன் ஸ்துதி” - கண்ணனின் வருகை-பாலமுகுந்த அஷ்டகம்- கிருஷ்ண ஜெயந்தியன்று.

15. “கண்ணன் துதி” - மதுராஷ்டகம்- கிருஷ்ண ஜெயந்தி.

16. “ கிருஷ்ணன் துதி” - குந்திதேவி சொன்ன துதி-கிருஷ்ண ஜெயந்தியன்று.

17. “நவமி ராமர் துதி” -துக்கங்கள் விலகி சந்தோஷம் கிடைக்கப்பெற- ஆதிசங்கரர்- இராமநவமி -அன்று.

18. “ராமர்-மகாவிஷ்னு துதி” - சீரான வாழ்வுடன் மங்களங்கள் யாவும் கிடைக்கப்பெற-இராமநவமி -அன்று-நாரதமுனி அருளிய- ப்ரஹ்மபாரம்-வராஹ புராணம்.

19. நாராயணீயம் - மகாலட்சுமி அவதாரம்- நாராயணபட்டத்திரி பாடியது- வெள்ளிக் கிழமை, தீபத் திருநாள்.

20. “நாராயணீயம்”- வெப்ப உஷ்ணத்தின் பாதிப்பை நீக்க- நாராயண பட்டத்திரி பாடியது

21. “சுந்தரகாண்ட பாசுரம்”- தடைகள் போக்கி சுகங்கள் சேர்க்கும்- சுந்தரகாண்டம் முழுதும் படித்த பலன்.

22. “இராமாயணப் பாசுரம்” - புண்ணியங்கள் சுகங்கள் சேர்க்கும் இராமாயணம் முழுதும் படித்த பலன். சுவாதி திருநாள் மகாராஜா எழுதியது-பவயாமி ரகுராம் துதி.

23. “பஜகோவிந்தம்” வாழ்க்கையில் தெளிவு ஏற்பட அவசியம் ஒருமுறை படிக்க வேண்டியது -மூலம்-ஆதிசங்கரர்.

24. “ஸ்ரீ வெங்கடேஸ்வர கோவிந்தா”

25. “ஸ்ரீ மகாவிஷ்ணு துதி” - சகல மங்களங்கள் - லட்சுமி கடாட்சம் பெற- ரிக்வேதம்- ஸ்ரீ சூக்தம்- தினமும் / வேண்டும்போது.

26. ஸ்ரீகிருஷ்ணர்- புத்ர பாக்யம் பெற-108 முறை தினமும்

27. ஸ்ரீ ராமர் - துன்பங்கள் விலக தினமும் 11முறை

28. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்- கல்வி ஞானம் - தினமும் 11முறை

29. ஸ்ரீ மஹா விஷ்ணு- சௌபாக்யங்கள்பெற தினமும் 11முறை

30. ஸ்ரீ ஆதிசேஷன் - நோய்கள் குணமாக தினமும் 11முறை

31.“ஸ்ரீமங்களாஷ்டகம்”:- -மங்களங்கள் பெருக-மனக்குறை- பாவங்களிலிருந்து விலகி-நீண்ட ஆயுளுடன்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

இதையெல்லாம் புரட்டாசி மாத சனிக்கிழமை காலையில் மாலையிலும் பாராயணம் செய்தால் ஸ்ரீமந் நாராயணனின் கிருபா கடாஷதால் சகலமும் கிடைக்கும்.

வசதி படைத்தவர்கள் லோக ஷேமத்திற்காக ஒவ்வொரு புரட்டாசி புதன் கிழமை ஸ்ரீஸுதர்சன ஹோமம் செய்யலாம்.

ஸ்ரீமந் நாராயணா ஸர்வ லோக ரஷகா

ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய