நெற்றியில் திருமண் தரிப்பதால் வாழ்வில் உயர்வு பெறலாம்.!!

கண்ணன் என்பவர் ஒரு கிராமவாசி மூட்டை தூக்கும் தொழிலாளி. காலையில் வேலைக்கு போனால் இரவு நேரமாகி தான் வீட்டுக்கு வருவார். 

வேலை இருந்தால் தான் கூலி. அதுவும் மிகவும் குறைவு. 
கண்ணனின்  மனைவி சீதை, நரசிம்மரின் பக்தை.அவள், தினமும் நரசிம்மர் ஆலயம் சென்று வணங்கி வருவாள்.நெற்றியில் திருமண் இடுவாள். ஏழைத் தொழிலாளியின் மனைவியானாலும், வறுமையை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டாள்.தன் கணவரிடம், "என்னங்க! நீங்க வேலைக்கு கிளம்புறதுக்கு முன், நெற்றியில்திருமண் இட்டுட்டு கிளம்புங்களேன்" என்பாள். (திருமண் என்பது இங்கு நாமம், விபூதி அல்லது குங்குமம் போன்றவற்றை குறிக்கிறது)

அதற்கு கண்ணன், ‘மனுஷன், காலையில் மண்டிக்கு போனா தான் மூட்டை இறக்க வாய்ப்பாச்சும் கிடைக்கும்’என்பார். அவ்வூருக்கு ஒரு மகான் வந்தார் .அவர் திருமண் அணிவதின் மகிமை பற்றி பேசினார். இதைக் கேட்ட சீதை, "நீங்க! திருமண்  இட வேண்டாம். காலையில், வேலைக்கு போகும் வழியில்,திருமண் இட்டுள்ள, ஒருவர் முகத்திலாவது, விழிச்சிட்டு போங்க’', என்றாள்.
கண்ணன் ஒப்புக்கொண்டார்...அவ்வூரில் கோவிந்தன் என்ற விவசாயி, தினமும் காலையில் நீராடி, நெற்றியில் திருமண் அணிந்து, வயலுக்கு செல்வதை கண்ணன் அடிக்கடி பார்த்துள்ளார்.

கண்ணன், தினமும், கோவிந்தன்  முகத்தைப் பார்த்து விட்டு, வேலைக்கு  செல்வதை வழக்கமாக்கி கொண்டார். ஒருநாள் காலையில் ,கோவிந்தனைக் காணவில்லை. கண்ணன் திண்டாடி விட்டார். கோவிந்தன் முன்கூட்டியே வயலுக்கு போயிருப்பாரோ என எண்ணி, வயலுக்கு ஓடினார்.
அன்று ஏகாதசி என்பதால்,  கோவிந்தன், நரசிம்மர் தரிசனம் முடித்து விட்டு, வயலுக்கு போய்விட்டார்.  வயலில் ஏர் ஓட்டிய  போது, அவரது காலில்  ஏதோ தட்டுப்பட்டது. அவ்விடத்தை தோண்டி பார்த்தார். அங்கு, இரண்டு பானைகளில், தங்க காசுகள் இருந்தன. அவர், அந்த பானைகளை எடுக்கவும், கண்ணன் அங்கு போய் சேரவும் சரியாக இருந்தது.

தான் புதையல் எடுத்ததை ,கண்ணன் கவனித்து விட்டதைக் கண்ட, கோவிந்தன், கண்ணனிடம் ஒரு பானையை கொடுத்து, சம அளவில் இருவரும் வைத்துக் கொள்ளலாம் என்றார். கண்ணன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
‘திருமண் இட்டிருக்கும் உமது நெற்றியை பார்க்கவே வந்தேன்;புதையல் அரசாங்கச் சொத்து. இதை, மன்னனிடம் கொடுப்போம். அவனாக ஏதும் தந்தால், பிரித்துக் கொள்ளலாம்’, என்றார். இருவரும் மன்னனிடம் சென்றனர்.

அவர்களின் நேர்மையை பாராட்டிய மன்னன், அவர்களுக்கு பரிசு வழங்கினான். அவர்களின் வறுமை நீங்கியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கண்ணன், தன் மனைவியிடம் போய் நடந்ததை கூறினார். அவரோ, திருமண் இட்டவரை தினமும் பார்த்ததற்கே உங்களுக்கு இவ்வளவு நன்மை என்றால், நீங்களும் திருமண் அணிந்தால் எவ்வளவு நன்மை பயக்கும் என்றார். 
உடனே, நெற்றியில் திருமண், விபூதி, குங்குமம் தரிப்பதன் அர்த்தம் தெரிந்து கொண்டு, அதை தினமும் கடை பிடிக்க துவங்கினார்.நல்ல பழக்கங்கள் ஒருவரை வாழ்வில் உயர்த்தும். நல்லதை செய்தால் மட்டுமல்ல, நல்ல பழக்க வழக்கமுடையவர்களை பார்த்தால் கூட, வாழ்வின் நிலை உயர்ந்து விடும்...

இனி நாம் எல்லோரும் அவரவர் குல குடும்ப வழக்கப்படி தினமும் காலையில் நீராடிய பின் நெற்றியில் திருமண் தரிப்போம். பெருமாளை சேவிப்போம்.

திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம் 

கோவிந்தா ஹரி கோவிந்தா

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!