திருமால் - ஆன்மீக கதை

ஓம் நமோ நாராயணாய நம

ஒரு நாள் அக்பர் அரசவையில் அக்பரும் பீர்பாலும் பேசி கொண்டிருக்கும்போது
அக்பர் கேட்டார் பீர்பாலே இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா ?

பீர்பால் அரசே அவருக்கு ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன் கேட்கிறீர்கள்?

அக்பர் இல்லை ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததர்க்காவா உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும் நீர் கூறியது போல் ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே?

அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும்?
இதற்க்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார்.

அதை பார்த்ததும் அக்பருக்கு ஒரு சந்தோசம் பீர்பாலே பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று
ஒரிரு நாட்கள் சென்றன
அக்பரும்அவர்குடும்பத்தா
ரும் அவர்களுடன் பீர்பாலும் சில மெய் காப்பாளர்களும் கங்கை கரையை கடப்பதற்கு படகில்சென்று
கொண்டிருந்தனர்

அக்பரின் மூன்று வயது பேர குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த பீர்பால் படகு ஆழமான பகுதிக்கு வந்ததும் பீர்பால் படகோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும் சைகை காட்டிவிட்டுஅக்பரின் பேரனை கங்கையில் தூக்கி போட்டுவிட்டார்.

பதறிய அக்பர் உடனே நீரில் குதித்து தன பேரனை காப்பாற்ற துணிந்தார்
அவரோடு சேர்ந்து பீர்பால் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து அக்பரையும் குழந்தையும் தூக்கி வந்து படகில் சேர்த்தான்

படகில் பேரனுடன் ஏறிய அக்பர் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு பீர்பால் என்ன இது நீயா இப்படி என் பேரனை கொல்ல துணிஞ்ச என்னால நம்பவே முடிலயே சொல்லும் என்ன காரணத்துக்காக என் பேரனை தண்ணீர்ல தூக்கி போட்டீர் சொல்லும்? என்றார் கோபமாக.

பீர்பால் அமைதியாக உங்களுக்கு திருமாலை பத்திதெரியனும்
என்பதற்காக அப்படி செஞ்சேன் அரசே என்றார்.

அக்பர் பீர்பாலே என்ன விளையாடுறியா நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் உமது திருமாலை நான் தெரியுறதுக்கும் என்ன சம்மந்தம்?

பீர்பால் அரசே மன்னித்துக்கொள்க நீங்க அன்று ஒரு நாள் உங்கள் கடவுள் திருமாலுக்கு சேவகர்களே இல்லையா அவர்தான் வந்து யானையை காப்பாற்றணுமான்னு கேட்டிங்களே ஞாபகம் இருக்கா உங்களுக்கு?
அக்பர் ஆமாம் அதுக்கும் இன்று நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் என்ன சம்மந்தம்?

பீர்பால் அரசே கொஞ்சம் யோசித்து பாருங்கள் என்னையும் சேர்த்து இந்த படகில் உங்களுக்கு 10 சேவகர்கள் இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிறப்பிக்காமல் நீங்களே உங்கள் பேரனை காப்பற்ற தண்ணீரில் குதித்து விட்டீர்கள் ஏன் அரசே?
எங்களை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டார்.

அக்பர் கொஞ்சம் கோபம் தணிந்து அப்படி இல்லை பீர்பால் என் பேரன் மேல் அளவு கடந்த பாசம் வச்சுருக்கேன்னு உனக்கு தெரியும் நீர் திடீர்னு தண்ணீர்ல அவனை தூக்கி போட்டதால் எனக்கு அவனை காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்ததே தவிர உங்களுக்கு உத்தரவிட்டு அவனை காப்பாற்ற சொல்லும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லமால் நானே குதித்து அவனை காப்பாற்றினேன் என்றார்.

பீர்பால் புன்னகையுடன்
அரசே இந்த நாட்டை ஆளும் உங்களுக்கே இவளோ பாசம் இருக்கும் போது அண்ட சாகசரங்களையும் ஆளும் எங்கள் திருமாலுக்கு எவளோ பாசம் இருக்கும் உயிர்கள் மேல்?

அதனால்தான் எத்தனை சேவகர்கள் இருந்தாலும் தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான்
அரசே இப்பொழுது புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையை காப்பாற்றினார் என்று?

நான் நீரில் வீசிய உங்கள் பேரனை காப்பற்ற இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன் தவறு இருந்தால் மன்னியுங்கள் அரசே என்றார்.

அக்பர் இல்லை பீர்பால் நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்
உங்கள் கடவுளை பற்றி தவறாக எண்ணி இருந்தேன் உங்கள் கடவுள் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார் நெகிழ்ச்சியாக.

அன்புக்கு பண்புக்கு நேர்மைக்கு பகவான் கட்டுண்டவன் கூப்பிட்ட குரலுக்கு யார் மூலமாவது இன்றும் உதவுபவன்
அதனால் தான் கலியில் "தெய்வம் மனித ரூபேன" என்பர்.

அவனே தாய் தந்தை போல் நமக்கு இருக்கும் போது அவன் அருளாலே எல்லாம் நடக்கிறது அவனின்றி அணுவும் அசையாது என்று மட்டும் நினைப்போம்
என்றும் எப்போதும் நன்மையே நடக்கும்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!