🔯 1.தன் கண்டத்தில் ஹரி நாமத்தை வைத்தவன் பெரும் கண்டத்தில் இருந்து தப்புவான்
🔯 2.தன் வாயில் ஹரி நாமத்தை வைத்தவன் எமன் வாயில் அகப்பட மாட்டான்
🔯 3.தன் செவியில் ஹரி நாமத்தை கேட்பவன் வைகுண்டத்தின் சாவியில் கரத்தை வைப்பான்
🔯 4. ஹரி நாமத்தை அசை போடும் ஜீவனை
முக்தர்கள் இசையோடு வரவேற்பர்
🔯 5. ஹரி நாமத்தை ஸ்மரணம் செய்பவனை வைகுண்ட தூதர்கள் கரணம் போட்டு அழைத்து செல்வர்
🔯 6. ஹரி நாமத்தை ஸ்மரிப்பவன் ஹரியாலயே வரிக்க படுகிறான்.
🔯 7. ஹரி நாமத்தை ஸ்மரணம் செய்பவன் ஹரியின் பூரண கிருபைக்கு பாத்திரம் ஆவான்
🔯 8.ஹரி நாமத்தை சொல்பவனுக்கு நிகரானவன் ஈரேழு லோலகத்திலும் இல்லை
🔯 9 ஹரி நாமத்தை சொல்பவன் தன் மூதாதையர் மற்றும் தம் சந்ததிகள் அனைவரையும் கரை சேர்க்கிறான்
🔯 10. பல கோடி சென்மத்தின் பலனாகவே ஒருவனுக்கு ஹரி நாமம் சொல்ல வாய்க்கிறது
🔯 11 ஹரி நாமத்தை சொல்பவனை கண்டு யமன் அஞ்சி நடுங்கி ஒளிந்து கொள்கிறான்
🔯 12 ஹரி நாமத்தை சொல்பவன் ஹரியின் எஜமான் ஆவான்
🔯 13. ஹரி நாமத்தை ஸ்மரணம் செய்பவன் உலகில் உள்ள அத்தனை திவ்யமான நதிகளிளும் ஸ்நானம் செய்த பலனை காட்டிலும் கோடி மடங்கு அதிகமாக அடைகிறான்
🔯 14 ஹரி நாமத்தை சொல்பவனை கலியின் துல்மஷம் அண்டுவதில்லை
🔯 15 ஹரி நாமத்தை சொல்பவனின் சரீரம் பரம பவித்திரமான நிலையை அடைகிறது
🔯 16 . ஹரி நாமத்தை உச்சரிப்பவன் நான்கு விதமான முக்திகளையும் எளிதாக அடைகிறான்
🔯 17 ஹரி நாமத்தை சொல்பவனுக்கு சம்மந்தப்பட்ட அனைவரும் கல்ப கோடி காலமாய் வைகுண்டததில் சுகபடுகின்றனர்
🔯 18. ஹரி நாமத்தை அன்றி வேறு சாதனங்களால் ஹரியை திருப்தி செய்ய இயலாது
🔯 19 சகல தேவர்களும் ஹரி நாமத்தின் மகிமையால் அன்றி இயங்க இயலாது
🔯 20 இந்த கல்பத்தின் பீஜ மந்திரம் ஹரி நாமமே அன்றி வேறு இல்லை
🔯 21 நான்கு புருஷார்த்தங்களும் கடந்து ஐந்தாவதாக உள்ள ஹரி நாமமே மகா உத்தமமானது
நாரத புராணம்
*********************
ஸமாயாலம் ஜலம் வஹ்னே தமஸோ பாஸ்கரோதய
ஸாந்தி கலௌ ஹ்யகௌகஸ்ய நாமைவகீர்த்தனம் ஹரே
🍒பொருள்
~~~~~~~~~
அக்னியை ஜலம் தணிப்பது போல் எச்சமயத்திலும் எவ்விடத்திலும் சூரியோதயம் இருளை நீக்குவது போல் இந்த கலியுகத்தில் ஹரி நாம ஜபமே அனைத்து பாவங்களையும் அழிக்கின்றது
நாமமே பலம் நாமமே சாதனம்
ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி