' அச்சுவை பெறினும் வேண்டேன் ' என்பர் ஆழ்வார்கள் .

பெருமாளே அமுதம் எனத் தெரியாத தேவர்கள், அவரிடமே போய் தனியாக அம்ருதம் கேட்கிறார்கள் ! என்று  நினைத்த திருமங்கையாழ்வார்,  பாடுகிறார் ஒரு பாசுரத்தில் ...

பாய் இரும் பரவை  தன்னுள்
பருவரை திரித்து வானோர்க்காய் இருந்து
அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை
வேயிறுஞ்சோலை சூழ்ந்து விரி கதிர் இரிய நின்ற
மாலிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே
( திருமங்கையாழ்வார்  )

தகப்பன் தன் பிள்ளை பசியால் வாடுவதை கண்டு உருகுவேக்கு தந்தை தேவர்களுக்கு ஒருநாள் பசி ஏற்பட்டு விட்டது.

தானே அமுதாக இருந்தும் தேவர்கள்  கேட்கிறார்கள் என்பதற்க்காக தனியாக ஒரு அமுதம் கொடுக்க,

பரந்து இருக்கக்கூடிய திருப்பாற்கடலில் பெரிய மலையைப் போட்டு சுழற்றி, கூடவே உதவிக்கும் இருந்து..

மலையை முதுகில் தாங்கி, மலையின் கொடி முடியையும் தானே பிடித்துக் கொண்டு,  விஷம் வெளிப்பட்டதும் தேவரும், அசுரர்களும் ஓடிவிட, அச்சமயம் இருபக்கமும்  இருந்து கடைந்து, பெரிதும் சிரமப்பட்டு தேவர்களுக்கு அமுதம் கொடுத்த என் அப்பனே என்கிறார்.

வீட்டுக்கு வந்த பிள்ளைகளுக்கு அவர்கள் கேட்டதை கொடுத்துவிட்டு, தன் பிள்ளைகளுக்கு தனியாக உயர்ந்த  பதார்த்தம் தருவதுபோல, என் அப்பன் அம்ருதம் வேண்டும் என்று  கேட்ட இந்த பிளைகளுக்கு ஏதோ அம்ருதம் என்று ஒன்றை கடைந்து கொடுத்துவிட்டு' பக்தரான எனக்கு தன்னையே தந்துவிட்டாரே'என்கிறார்.

' இப்படி ஒரு அப்பனை போல, அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்து, தேவர்களுக்காக சிரமப்பட்டு வெப்பம் ஏறி, வியர்த்திருக்க எங்காவது குளிர்ந்த இடம் இருக்குமா '?  என்று  உலவி, கடைசியில் மூங்கில்  மரங்களால் சூழப்பட்ட அதிக குளிர்ச்சியான இலைகள் சூழ்ந்த சோலையாக தெரிய, சூரிர வெப்பம் உள்ளே புக முடியாதபடி இருக்கும் திருமாலிருஞ்சோலை என்ற அழகர் மலையில் நித்ய வாசம் செய்யும் அம் மைந்தனை வணங்கினேனே என்கிறார் ஆழ்வார். .

திருப்பாற்கடலில் அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்வதை பர்த்தால் ஒரு தந்தை போல தெரிகிறதாம் ஆழ்வாருக்கு.

அதே பெருமாள் குளிர்ச்சியான நூபுரகங்கை கங்கை ஓடும் திருமாலிருஞ்சோலுயில் வந்ததும், புஷ்டியாக பார்ப்பதற்கு சிறு பாலகன் போல் தெரிய ' மைந்தன் ' என்று  கொஞ்சுகிறார் ..

கிருஷ்ணன் பார்க்க பாலகனாய் இருந்தாலும் பிரம்ம தேவனே காலில் விழுந்து வணங்கும் பரமாத்மா அல்லவா!  அதனால் ' மைந்தனை வணங்கினேனே ' என்கிறார்..