பாற்கடலில் பாம்பணைமேல் துயில்பவனே

பச்சை மா மலை போல் திருமேனி கொண்டவனே

பள பளக்கும் திவ்ய ஆபரணங்கள் அணிந்தவனே

பவளசிவப்பு நிற மேனி உடைய மஹாலக்ஷ்மி தாயாரை மார்பில் அமர வைத்தவனே

பக்தர்கள் நமோ நாராயணா எனும் கோஷம் இசைத்திட கேட்டு மகிழ்பவனே

பக்தியோடு உனையே நம்பி துதித்து நின்ற ப்ரஹ்லாதன் துருவன் போன்ற அடியார்களுக்கு சிறந்த சாயுஜ்ய பதவி அளித்து மேன்மை பெற செய்தவனே

பஞ்சாயுதங்கள் சுதர்சனம் சக்ரம், பாஞ்சஜன்யம் சங்கு, கௌமோதகம் கதை, நந்தகம் வாள், சார்ங்கம் வில் கைகளில் ஏந்தி பக்தர்களை காப்பவனே

பரந்து விரிந்த உலகை வாய்க்குள் யசோதை அன்னைக்கு காட்டினவனே

இடையில்_கட்டிய உரலை இழுத்து சென்று மரத்தை முறித்தவனே

இன்பம் துன்பம் நிறைந்த இப்பிறவி பிணியை நீக்கி முக்தி பேறான உன் பத்மபாதங்களில் அடைக்கலம் தந்திடுவாயே

ஸ்ரீமன் நாராயணா எனதுதித்து உன்முன் நின்றிடும் அடியேனுக்கு ,

தூணிலுமிருப்பார் துரும்பிலு மிருப்பார் 
துரிதமாய் அருள்வார் நாராயணன்.   

ஆணவம் அழிப்பார் அன்பாய் வருவார் 
ஆபத்பாந்தவன் நரசிம்மன்.   

உன்னிலுமிருப்பார் என்னிலுமிருப்பார் 
உத்தம புருஷன் நாராயணன் 

பக்தரைக் காப்பார் பாபத்தை போக்கும் 
பட்டொளி வேந்தன் பராபரன்.   

உள்ளிலும் இருப்பார் வெளியிலுமிருப்பார்   
ஊழ்வினை அழிப்பார் நாராயணன்

எள்ளிலும் இருப்பார் புல்லிலும் இருப்பார் 
பார்புகழ் வேந்தன் ப்ரபாகரன். .

சித்தராகிருப்பார் சீறிப் பாய்வார் 
சிந்தையில் இருப்பார் ஸ்ரீனிவாசன் 

பாபத்தை அழிப்பார் பக்தியை அருள்வார் 
ஆனந்த நிலையன்

அன்னையைக் காப்பார் தந்தையைக் காப்பார் 
அன்பர்க்கு அன்பன் நரசிம்மன் 

சிசுவைக் காப்பார் சிந்தையில் நிற்பார்  
ப்ரதோஷ நாயகன் நரசிம்மன்.   

ௐ நமோ பகவதே வாசுதேவாய