அரங்கன் என்ற தமிழ்ச்சொல்லின் சிதைந்த வடிவமே    ரெங்கன்.

அரங்கன் > ரங்கன் > ரெங்கன்.
அரங்கம் + நாதன்= அரங்கநாதன் > அரங்கன் என்பதே அழகான தமிழ்!

அரங்கநாதன், அரங்கண்ணல், அரங்கநாயகம், அரங்கரசன், அரங்கெழிலன் இவையெல்லாம் அந்த அரங்கனின் வெவ்வேறு பெயர்களில் சில.

அரங்கன் என்ற பெயர் எப்படி வந்தது?

ஒரே ஆறு சில இடங்களில் இரண்டாய்ப் பிரிந்து பிறகு மீண்டும் ஒன்றாய்க் கூடி அமைந்திருக்கும்! இவ்வாறு அமைந்த #தீவு__போன்ற #இடைப்பட்ட_நிலப்பகுதியே__அரங்கம்' எனப்பட்டது.

அரங்கம் என்ற சொல் ஆற்றிடைத் திட்டு ஆற்றிடை அமைந்த அறுக்கப்பட்ட நிலத்தைக் குறிக்கும்.

திருவரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவுஆகிய அரங்கத்தில் இறைவன்கோவில் கொண்டுள்ளதால் திருவரங்கம் என இத்தலம் அழைக்கப்படுகிறது.

ஆற்றிடைத் தீவான அரங்கத்தில்பள்ளி கொண்டமையால் அப்பகுதி திரு + அரங்கம் என அழைக்கப் பட்டது !

அரங்கத்தில் பள்ளி கொண்ட நாதனே      
        அரங்கநாதன் !

எந்த ஆழ்வார் பாசுரங்களும் திருவரங்கத்தை ஸ்ரீரங்கம் எனக் குறிப்பிடவில்லை. ஆனால்…

”திருவரங்கம் என்னா(த) மிண்டர்
பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி
நாய்க்கு இடுமினீரே!” - அதாவது திருவரங்கம் என அழைக்காதவர்கள்
நாயை விடக் கீழானவர்கள் என்று
பக்தி மிக்க ஆழ்வாரே பாடுகிறார்.

எனவே.... இனி மேலாவது 
 அரங்கன்__திருவரங்கம் என்றே உரைப்போம்!