எப்படி ராமானுஜர் அனந்தசரஸில் நீராடி தேவ பெருமானை தியானித்து சந்நியாசம் பூணும் போது துறந்தோம்! துறந்தோம்! துறந்தோம் தாசரதியை (ராமானுஜரின் மருமகன் முதலியாண்டான்) தவிர்த்து அனைத்தும் துறந்தோம் என்பது போலே.
துறவறம் என்றால் அனைத்தையும் துறக்க வேண்டியது தானே, மருமகன் மேல் மட்டும் பற்று எப்படி விசேஷ தர்மமோ, அதே போல் எங்கள் கோட்பாடுக்கு ஏற்றவை மட்டும் எடுத்து கொள்வோம் என்பது எதிர் தரப்பு வாதம்.
துறவறம் என்பது சம்சார பந்தங்களை துறந்தல், ராமானுஜர் மருமகன் முதலியாண்டானை பற்றி கொண்டது பகவத் விஷயத்திற்கு தொண்டாற்றவே.
ஏன் சந்நியாசம் பூண்டும் ராமானுஜர் கிருஹஸ்தாஸ்ரமத்தில் இருந்தே நம் சம்பிரதாயத்தை வளர்த்து எடுத்தார் என்றே கொள்ளலாம் தன் சொந்த பந்தங்கள் கொண்டு. சந்நியாஸத்தில் சொந்தங்களா? உண்டே ஆதலால் தான் அவர் ஒரு புரட்சி மகான்.
- பிள்ளை: சம்பத் குமாரன்
- தங்கை: ஆண்டாள்
- சிஷ்யர்: திருக்குறுங்குடி நம்பி
- தம்பி: எம்பார்
- மருமகன்: முதலியாண்டான்.
ஒரு தலைவனை காலம் உள்ள வரை கொண்டாட போகிறோம் என்றால் அவரின் கட்டமைப்பு எத்தகையதாக இருந்திருக்க வேண்டும். அது தலைவனால் மட்டுமே சாத்தியமாகிருக்காது, தொண்டர்களே அதன் அடிநாதம்.
ராமானுஜர் கட்டமைப்புக்கு தொண்டாற்றி அனுக்க்ஷணமும் ராமானுஜரை கட்டமைத்த தொண்டர்கள் பற்றிய குறிப்பே இப்பதிவு.
1. ராமானுஜர் கிரந்தங்கள் படைக்க உறுதுணையாக இருந்தவர்கள்
- முதலியாண்டான் திருக்குமாரன் கந்தாடையாண்டான்
- நடாதூராழ்வான்
- ஸ்ரீ பராசர வேதவ்யாச பட்டர்
- கூரத்தாழ்வான்
2. எம்பெருமானார் மடத்தில் இருந்த நூலகத்தின் காப்பாளராகவும் & பண்டகசாலை பொறுப்பாளராகவும் இருந்தவர்
- கூரத்தாழ்வான்
3. ராமானுஜரின் திருவாராதன பெருமாளான பேரருளாளரரை நித்ய திருவாராதனம் செய்தவர்
- அருளாள பெருமாள் எம்பெருமானார்
4. திருமடைப்பள்ளி கைங்கரியப்பரர்கள்
- கிடாம்பியாச்சான்
- கிடாம்பி பெருமாள்
5. மடத்திலுள்ள பசுக்களுக்கு புல் இடுபவர்
- வடுக நம்பி
6. எம்பெருமானாருக்கு எண்ணெய் காப்பு சாற்றுகைக்கும், உரிய வேளைகளில் பாலமுது சமர்ப்பிப்பதற்கும் கடவர்
- வடுக நம்பி
7.எம்பெருமானாருக்கு திருமண்காப்பு பணிவிடை
- முதலியாண்டான்
8. அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவாராதன உதவி
- முதலியாண்டான்
9. எம்பெருமானார் திருவீதி எழுந்தருளும் முன் பாதுகைகள் சமர்ப்பிப்பவர்
- முதலியாண்டான் (நம்பெருமாள் பாதுகை நம்மாழ்வார், நம்மாழ்வாரின் பாதுகை மதுரகவி & ராமானுஜர், ராமானுஜரின் பாதுகை முதலியாண்டான்)
10. ராமானுஜர் சயனத்திற்கு முன் திருப்படுக்கை சோதிப்பவர்
- எம்பார்
11. ராமானுஜர் சயனித்திருக்கையில் திருக்கால்களை பிடித்துவிடுவபவர்
- எம்பார்
12. ராமானுஜர் திருப்பறியட்டம் திருத்துபவர்
- எம்பார்
13. ராமானுஜருக்கு அர்க்யம் பாத்யம் சேர்ப்பவர்
- எம்பார்
14. திருக்கை செம்பும் ஸ்ரீபாத ரக்ஷையும் எடுப்பவர்
- கோமடத்து சிறியாழ்வான்
15. வரவு செலவுகளை கணக்கிடுபவர்
- பிள்ளை உறங்காவில்லிதாசர்
16. கருவூல காப்பாளர்
- பிள்ளை உறங்காவில்லிதாசர்
17. பாலமுது காய்ச்சுபவர்
- அம்மங்கியம்மாள்
18. திருத்தளிகை சாதிப்பவர்
- உக்கலாழ்வான்
19. திருவாராதனத்திற்கும் & திருத்தளிகைக்கும் நீர் சேர்ப்பவர்
- மாருதியாண்டான்
20. அமுதுபடி சுத்தம் செய்வது & கரியமுது திருத்துவது
- சிறியாண்டான்
21. ராமானுஜருக்கு திருமேனி காவலர்களாக பணிபுரிந்தவர்
- வண்டர்
- செண்டர் (இவர்கள் சோழ படை தளபதிகள்)
22. திருவரங்க காவல் பணி
- அகளங்க நாட்டாழ்வான்
இப்படி ராமானுஜரை ஆச்ரயித்தோர் பலரும் வெவ்வேறு கைங்கரியங்கள் செய்து வந்தனர். ஒவ்வொரு சிஷ்யரும் எப்பேர்பட்டவர்கள், இப்படியதாக ஓர் அடிதளத்தை கொண்டு தான் ஸ்ரீவைஷ்ணவம் எனும் கட்டுமானத்தை ஸ்திரமாக நிலைநாட்டினார் எம்பெருமானார்.
எம்பெருமானாரை தியானிக்கும் பொழுது அவர் சிஷ்யர்களையும் நினைவுக்கூற வேண்டும்.
ஸ்ரீமதே ராமானுஜாய நம: