கோதா ஸ்துதி

அந்த நாள், ஸ்வாமி தேசிகருக்கு, திருவில்லிபுத்துாரில், ஒரு இனிமையான மாலைப் பொழுது...!

அன்று ப்ரதோஷம்...!
ஆண்டாளுக்கு வைகாசி வஸந்த உற்சவம் நடைபெற்றுக் கொண்டுள்ளது...!
ஸ்வாமி தேசிகர் அன்று மௌன விரதம்..!
மெனமாயிருந்து ஆண்டாளின் பாசுரங்களில் திளைத்து ஆழ்ந்து கொண்டிருந்த சமயம்..!
வெளியில் எங்கும் மங்கல ஒலியுடன், திவ்ய பிரபந்தங்கள், வேத கோஷங்கள்..!,
ஆச்சர்யபட்டு, தாம் தங்கியிருந்தவிடத்திலிருந்து வெளியே வருகிறார் தேசிகர்..!
வந்தவருக்கு ஒரு இன்ப பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது..!
தம் வீட்டு வாசலில் சத்ர, சாமர, ப்ரபந்த, வேதகோஷங்கள், மங்கல ஒலியுடன் ஆண்டாள் நிற்கின்றாள்..!
இந்த வழி வஸந்த உற்சவத்தின் போது, ஆண்டாள் வழக்கமாக எழுந்தருளும் வழி அல்ல..!
ஸ்வாமி இராமனுஜர், வடதிருக்காவிரியில் நீராடி சேனை முதலியாரைத் தரிசித்து அரங்கனைத் தரிசிக்க வருகின்றார்..! அரங்கன் அதற்குள் பொறுக்கமாட்டாது, அர்ச்சகர்களின் கைத்தலத்தில் ஜய விஜயர்கள் நடுவே இராமனுஜரை எதிர் கொண்டு அழைக்கின்றார்..!
அதுபோன்று, இராமனுஜ தரிசனத்தினை நிலைநாட்டிய ஸ்வாமி தேசிகரை, அவராக வந்து ஸேவிக்கும் வரை, பொறுக்க மாட்டாது, ஆண்டாளே எதிர்கொண்டழைக்கின்றாள்..!
இந்த பேரன்பின் முன் நெகிழ்ந்து போகின்றார் ஸ்வாமி தேசிகன்..!
எப்போதும் அனுஷ்டானத்தினை, வைராக்யமாகக் காக்கும் ஸ்வாமி தேசிகனின் மௌன அனுஷ்டானம் அப்போதே கலைந்தது..!
அந்த மஹாகவி, இந்த மஹா வாத்ஸல்யாவினைப் பார்த்து ஸ்தோத்ரம் பண்ணுகின்றார்..!
29 ஸ்லோகங்களினால் “கோதா ஸ்துதி” என்னும் அற்புதமான கவி மாலையினை, கோதைக்குச் சூட்டுகின்றார்..!

”ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிச்சந்தந யோக த்ருஸ்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம்
கோதாமநந்ய: சரண: சரணம் ப்ரபத்யே..” (கோதாஸ்துதி-01)

இந்தவிடத்தில் ஸ்வாமி தேசிகன் “ஸ்ரீ“ என்று விசேஷமாக ஆரம்பித்துள்ளார். அவர் அருளிய ஸ்ரீஸ்துதியிலேயோ அல்லது பூஸ்துதியிலேயோ “ஸ்ரீ” என்ற நாமாவுடன் ஆரம்பிக்காது, இங்கு “ஸ்ரீ“ என்று தோடங்கியதற்குக் காரணம் “ஸ்ரீ“ சப்தம் பெரியபிராட்டிக்கு மட்டிலுமே பொருந்தும். இதனை ஆளவந்தார் “ஸ்ரீ: இத்யேவச நாமதே பகவதி புருமஹ கதம் த்வாம்வயம்” என்று அருளுகின்றார்..! பெரியபிராட்டியினை “ஸ்ரீ” என்ற சப்தமல்லாது வேறெப்படி அழைக்கமுடியும் என்கிறார்..!

விஷ்ணுசித்த குல நந்தனம் என்பது சாதாரணமாக விஷ்ணுசித்தருடைய குல மகள் என்று கொள்ளலாம். ஆனால் மாமுனிகள் “அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியாய,..!” என்று உபதேச ரத்னமாலையில் அருளுகின்றார்..! அதாவது விஷ்ணுவினை சதா சித்தத்தில் கொண்ட ஆழ்வார்களாகிய சோலைக்கு கற்பகக்கொடியான” ஆண்டாள், ஸ்ரீரங்கநாதனாகிற கற்பக விருக்ஷத்தில் படர்ந்து காணப்படுகின்றாள்..!
“ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம்”
இதில் ”கருணயா” என்ற ஸப்தம் “காகாக்ஷி ந்யாய ஸப்தம்”என்று பெயர்..! காக்கை ஒரு கண்ணாலேயே இருபுறமும் பார்க்குமாம்..! அதுபோன்று இந்த பதத்தினையும்
“ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா” - கருணையில் பூமிபிராட்டியே இவள் என்றும்
“ஸாக்ஷாத் கருணயா கமலா“ - கருணையே உருவான ஸ்ரீதேவியே எனறும் பொருள் கொள்ளலாம்..!
கோதா..!
வராஹவதாரத்தில் பூமி பிராட்டி வராஹரின் உபதேசத்தினைக் கேட்டாள்..! யாருக்கும் உபதேசிக்கவில்லை..!
சீதை,, பொல்லாத ராவணனை சரணடையுமாறு உபதேசித்தாள்..! பலனில்லை..!
ஆண்டாள “வையத்து வாழ்வீரகாள்” என்று எம்பெருமானை அடையவேண்டும் என்ற அவாவுடையவர் அனைவருக்கும் உபதேசித்தாள்..!
எனவே அவளை “கோதை” என தேசிகன் கொண்டாடுகின்றார்..! அதனாலேயே இது “கோதா ஸ்துதி” என்கிறார்..!

(காம் ததாதி - இதி கோதா - காம் என்ற ஸப்தத்திற்கு 13 அர்த்தங்கள் உண்டு..! அதில் ஒன்று “வாக்கு” - )
வேறொரு புகல் ஒன்றுமிலாத இந்த அடியவன், அம்மா..! உன் சரணாரவிந்தங்களில் சரணடைகின்றேன்..!

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!