செல்வம் நிலைக்க

லட்சுமி குபேர மந்திரங்கள்

வந்தே பத்மகராம் பிரஸந்நவதநாம் ஸௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யாம் அபயப்ரதாம் மணிகணைர் நாநாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப்ரஹ்மாதிபிஸ் ஸேவிதாம்
பார்ஸ்வே பங்கஜஸங்க்க பத்மநிதிபிர் யுக்தாம் ஸதா ஸக்திபி

ஸரஸிஜ நயநே ஸரோஜஹஸ்தே
தவளதராம்ஸுக கந்தமால்ய ஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்

ஓம் ஸ்ரீ யக்ஷாய குபேராய !
வைச்ரவணாய தநதாந்யாதிபதயே !
தநதாந்ய ஸ்ம்ருத்திம்மே தேஹி !
தாபாஸ ஸ்வாஹா !!

குபேர மந்திரம் : ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம் க்லீம் விட்டேஸ்வராய நமஹ

ஓம் ஸ்ரீம்.கும் குபேராய
நரவாகனாய யக்ஷ ராஜாய
தன தான்யாதிபதியே
லக்ஷ்மி புத்ராய

ஸ்ரீம்..ஓம். குபேராய நமஹ:

செல்வம் எப்போதும் நிலைக்க குறிப்புக்கள் :

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக் கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலை பொழுதில் செய்யக் கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.

அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகள் பணம் வரும்.

அவரவர் குல தெய்வத்தை தினம் அதி காலை நேரத்தில் நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.

ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபட பூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.

ஐப்பசி மாத வளர் பிறையில் மகா லட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.

ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.

ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.

ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.

ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ண மியன்று சத்திய நாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.

கனக தாரா ஸ்தோத் திரத்தினை கூறியும் கேட்டு வர பணம் கிடைக்கும்.

கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ர ஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.

குடியிருக்கும் வீட்டில் வட கிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.

குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.

குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.

கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப் பெட்டியில் வைக்க பணம் சேரும்.

சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனை அன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும்.

சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.

சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.

சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இரு வேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திட செல்வம் சேரும்.

செல்வத்திற்கு உரியவள் மகா லட்சுமி வெள்ளிக் கிழமை தினம் வழிபடவும் 24 வெள்ளிக் கிழமை வழிபாட்டால் பணம் கிடைக்கும்.

செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்ப வருக்கு பணம் திரும்ப கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்ப கொடுக்க இயலும். திரும்பகொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.

தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில் காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.

தமிழ் மாதத்தில் முதல் திங்கட் கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம். பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.

திருப்பதி வெங்கடா ஜலபதி, பத்மாவதி படம் வைத்து வழிபட பணம் வரும்.

திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்து வழிபட செல்வம் சேரும்.

தினசரி குளிக்கும் முன் பசுந் தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.

தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம் செய்வாள்.

துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்து வர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராய ணத்தை வேதபண்டி தர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம் நிரந்தரமாகும்.

நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பணவரவு ஏற்படும்.

பசும் பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக் கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.

பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம்வரும்.

பசுவுடன் கூடிய கன்றுக்கு உண வளித்தால் சகல செல்வங்களும் வசமாகும்.

பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டி தினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும்.

பாசி பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறு நாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.

பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்யபலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.

மகா லட்சுமியை கனக தாரா ஸ்தோத்திரம் கூறி திரிதள வில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.

மகாலட்சுமிக்கு இளஞ் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசிய முண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.

மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்க பணம் வரும்.

மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதள வில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திட பணம் குவியும்.

மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாப னத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.

முழு பாசி பருப்பை வெல்லம்கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்துவர பணத்தடைநீங்கும்.

யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசை தான்.

வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன் வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மி அருள் பரிபூர ணமாக கிட்டும்.

வியாழக் கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபட பணம் வரும்.

வீட்டில் சுமங் கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகல தோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பலவித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது.பணம் ஓடிவிடும்.

வீட்டில் வெள்ளை புறாக் களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்

வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.

வெள்ளிக் கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன், மகாலஷ்மி இரு வரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.

வெள்ளிக் கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேக த்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.

வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.

ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும் அணிந்து வர பணம் வரும்.

ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கிதனலாபம் பெறலாம்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!