1.மரணமானால் தானே வைகுந்தம் அடையமுடியும்!
2.வைகுண்டம் அடைந்தவர் யாரும் திரும்பி வருவது இல்லையே!
3.இந்த வழியில்தான் வைகுண்டம் சென்றேன் என்று நமக்கு சொல்ல யாரால் முடியும், என நமக்குத் தோன்றலாம்!
இந்த கேள்விகள் அனைத்திற்கும் விடை, ஸ்ரீமன் நாராயணன் பூவுலகிலேயே நம்மாழ்வாருக்கு இதனை காட்ட! ஆழ்வார் நமக்கு திருவாய்மொழியில் சொல்லியிருக்கிறார்!!
பெருமாள் நம்மாழ்வாரிடம் நீர் பரமபதம் கிளம்பும் நேரம் வந்துவிட்டது (திருவாய்மொழி 10-8 பத்து முடிந்தவுடன்). உம்மை இந்த வழியில்தான் கூட்டிக் கொண்டு போய், தன் நித்ய கைங்கர்யதில் ஈடுபடுத்துவேன் என்று ஒரு திரைப்படம் போல நம்மாழ்வாருக்கு காட்டினார். அதாவது acclamation அடைவதற்காக!!
அதை கண்ட ஆழ்வார் தன்னைப்போல் சரணாகதி செய்யும் அனைவருக்கும் வைகுந்தம் கிடைக்கும் என்பது நாம் அறிவதற்காகவே! சூழ்விசும் பணிமுகில் என்ற பதிகத்தைப் (திருவாய்மொழி 10-9) பாடியுள்ளார்.
அர்ச்சிராதி மார்க்கத்தில் யார் யார் வந்தனர், எப்படி அடியார்களை பலர் புகழ்கின்றனர், பெருமான் வைகுந்த வாசலில் வந்து எப்படி தன்னை கைபிடித்து அழைத்து சென்றார் என்ற அனுபவங்களை பாசுரங்களாக இட்டுள்ளார்.
1st Process: ஜீவாத்மா பிரிதல்
முதுகுத்தண்டை மத்தாக வைத்து உடல் முழுவதையும் கடைந்து, புலன்கள் மற்றும் பூத சூஷ்மங்கள் அனைத்தையும் பிராண வாயு & மனதுடன் சேர்த்து கொட்டி ஆத்மாவை பிரித்து விடுகிறார் வைகுண்ட நாதர்.
2nd Process: ஜீவாத்மா வெளியேறுதல்
இதயத்தில் இருந்து தலைக்கு 101 நாடிகள் பிரயாணம் செய்கின்றன ( நாடி என்பது மிக நுண்ணிய நரம்பு போல் இருக்கும் ). அதில் 101வது நாடி சூஷூம்னா நாடி, ஆத்மா இந்த நாடியை பற்றினால் தான் வைகுண்டம் செல்லும் அர்ச்சிராதி மார்கத்தில் பிரயாணிக்க முடியும்.
உள்ளோ ஒரே இருட்டு, வைகுண்ட நாதரே தன் திருமேனி ஒளியாலே ஆத்மாவுக்கு 101வது நாடியை பிடித்து கொடுக்கிறார். ஆத்மாவும் அதை பற்றி பிரம்மரந்திரம் ( உச்சம் தலையின் சிறு துளை ) வழியாக வெளியேறுகிறது.
3rd Process: வைகுண்ட மார்க்கம்
ஆத்மா வெளியேறி 12 லோகங்கள் பிரயாணித்து மூல பிரகிருதியை கடந்து விரஜா நதியை அடைகிறது. ஆத்மா இவ்வுளவு தூரம் பிரயாணிக்க மிக நுண்ணிய உடலை வைகுண்ட நாதர் தருகிறார்.
- அர்ச்சிஸ் (ஒளி)
- பகற்பொழுது
- சுக்லபக்ஷம்
- உத்தராயணம்
- சம்வத்ஸரம்
- வாயுலோகம்
- சூரியமண்டலம்
- சந்திரமண்டலம்
- வித்யுத்லோகம் (மின்னல்) – அமானவன் என்கிற மின்னல் இங்கிருந்து ஆத்மா கூடவே வருவார்.
- வருணலோகம்
- இந்திரப்பட்டணம்
- சத்யலோகம் (பிரம்மா)
விரஜா நதியில் நீராடியதும் நுண்ணிய உடலும் கலையப்படும்.
4th Process: வைகுண்டம் சேர்தல்
பிறகு அமானவன், ஆத்மாவை அக்கரையில் சேர்த்து விடுவார்.
அக்கரையை சேர்ந்ததும், ஆத்மாவுக்கு அபிராகிருத உடல் (பஞ்ச பூதங்கள் இல்லா உடல்) கிட்டும் மற்றும் ஞானம் பல்கும் (சாலோக்கியம், சாமிப்யம், சாருப்பியம் & சாயுஞ்யம்).
அக்கரையில் வைகுண்ட வாசல் திறந்து இருக்கும் ஆத்மாவுக்காக.
5th Process: வைகுண்டம்
500 தேவதைகள் வரவேற்க ஆத்மா உள்ளே நுழைகிறார். திருமாமணி மண்டபத்தில் வைகுண்ட நாதர் ஆதிசேஷ பீடத்தில் அமர்ந்த திருக்கோலம், தெற்கு நோக்கி திருமுக மண்டலம், அனைத்து ஆபரணங்கள் மற்றும் ஆயுதங்கள் தரித்து எழுந்தருளி உள்ளார்.
இருபக்கமும் பூதேவி, ஸ்ரீதேவி நாச்சியார்கள். அருகில் விஷ்வக்சேனர், திருவடி அருகில் கருடர், சிங்கமுகன், கஜமுகன் & நித்யசூரிகள். சுற்றி நான்கு மதில் சுவர், ஒவ்வொரு மதிலுக்கும் ஒரு வாசல், அதில் இரண்டு துவார பாலகர்கள், மொத்தம் எட்டு துவார பாலகர்கள்.
வைகுண்ட நாதர் ஆத்மாவை அழைத்து, மடியில் அமர்த்தி, ஆரதழுவி வைகுண்டத்தில் ஐக்கிய படுத்துகிறார்.
மோட்சம் அடையும் ஆத்மாக்கள் மட்டுமே இந்த வழியை அணுக முடியும். மீதமுள்ளவர்களுக்கு எப்போதும் மற்றொரு பாதை உள்ளது.
நாம் விரும்பும் பாதையை நோக்கிச் செயல்படுவது நம்மைப் பொறுத்தது