ஸ்ரீ ஆளவந்தார் ஆணைப்படி திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ஆசார்ய உபதேசம் பெறும் எண்ணம் வந்துற்றதும் ஸ்ரீராமானுஜர் திருக்கோட்டியின் இருப்பிடம் செல்ல ஆயத்தமானார்.

மணிமுத்தாறு நதிக்கரையிலுள்ள அந்த சேத்திரம் முன்னால் கதம்பவளம் என அழைக்கப்பட்டது முற்காலத்தில் கதம்ப மகரிஷியின் ஆசிரமமாக இருந்தது.

இரணியாசுரன் மூவுலகத்தையும் ஆட்சி புரிந்து தேவர்களையும் சாதுக்களையும் துன்புறுத்தி கொடுங்கோல் செய்து வந்தான் அப்போது தேவர்களும் தபோதனர்களும் ஒன்று சேர்ந்து திருக்கோஷ்டியாக மும்மூர்த்திகளையும் தொழுது பணிந்து குறை தீர்க்க வேண்டிக்கொண்டனர். இவர்கள் அனைவரும் கோஷ்டியாக இந்த கதம்ப ரிஷி ஆசிரமம் உள்ள கதம்பவனத்திற்கு வந்ததால் திருக்கோஷ்டியூர் என அழைக்கப்பட்டது. 

இரணியாசுர வதத்திற்கு பின்னாகதம்ப ரிஷி பிரம்மாவை பிரார்த்தித்தார்.

"சிங்கப்பெருமாளாய் அவதரித்தபெருமாளின் அழகு திருமேனியை அடியேன் தொழ விரும்புகிறேன் என்று அவர் பிரார்த்தித்ததும் ஸ்ரீசௌமிய நாராயணப்பெருமாள் விக்ரகத்தை தேவலோகத்திலிருந்து எழுந்தருளப்பண்ணி மகரிஷியிடம் அளித்தனர்.

அத்தகைய தலப்பெருமை பெற்ற திருக்கோட்டியூர் நம்பிகளிடம் அரும்பொருள் கேட்கும் வேட்கையில் ஸ்ரீஇராமானுஜம் அங்கே எழுந்தருளினார்

"திருக்கோட்டியூர் நம்பியின் திருமாளிகை எது?' என்று அவர் கேட்டபோது, ''அதோ தெரியும் கூரைதான் அது" என்று அவரது திருமாளிகையைக் காட்டினர். மக்கள் உடனே இராமானுஜர் பூமியில் விழுந்து திருமாளிகையின் திசைநோக்கித் தொழுது எழுந்தார் மின் மீண்டும் அவ்வாறே திரும்பத்திரும்ப செய்தபடி திருமாளிகையை அடைந்தார்.

ஊர்மக்கள் அனைவரும் அது கண்டு அதிசயித்தனர் ஏனெனில், ஊர்மக்களுக்கு நம்பிகளின் பெருமை தெரியாது. நான்கு சாஸ்திரங்களிலும், ஆழ்வார்கள் அருளிச்செய்த செய்யுல்களிலும் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த நம்பிகள் நீறு பூத்த நெருப்பாக தனிமையிலேயே வாழ்ந்துவந்ததே காரணம் ஸ்ரீராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பிகளின் திருப்பாதத்தில் வீழ்ந்து வணங்கினார்.

"சுவாமி, அடியேனுக்கு மகாவாக்கிய உபதேசம் செய்தருள் வேண்டும் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்து பெரிய நம்பி உரைத்தனுப்பிய படி தேவரீர் திருமாளிகைக்கு வந்தேன்" என்றார் இராமானுஜர் ஆனால் நம்பிகளோ இவரது தேடலை பரிசோதிக்க எண்ணியவராய் இவரை வேண்டுமென்றே பொருட்படுத்தாது அலட்சியமாய் நின்றார்.

திருக்கோட்டி நம்பிகள் ஸ்ரீஇராமானுஜருக்கு மந்திர உபதேசம் செய்ய மறுத்து கடினசித்த முடையவராயிருந்தார் இராமானுஜர் அவரிடத்தே பட்டினி கிடந்து பார்த்தார். சலிக்காமல் நடந்தும் பார்த்தார். ஏறத்தாழ பதினெட்டு தடவைகள் திருக்கோட்டியூர் போய் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிவந்தார்.

ஸ்ரீஇராமானுஜர் அடைந்த துயரத்தைக் கண்ணுற்ற ஸ்ரீரங்கநாதப் பெருமாள் திருக்கோட்டியூர் நம்பிகளுக்கு அவரது பெருமைகளையும் யோக்யதாம்சங்களையும் எடுத்துரைத்து உபதேசம் செய்யும்படி கூறினார் ஆனால் நம்பிகளோ ஒரு வருடமாவது என்னிடம் இருந்து பரிசோதனைசெய்து பார்க்க வேண்டாமா என்று திருப்பிக் கேட்டார்.

பெருமாள். 'ஸ்ரீஇராமானுஜருக்கு பரிசோதனை எதுவும் தேவையில்லை" என்று ஆணையிட்டதும், ஒவ்வொரு வார்த்தை யாக அவருக்கு உபதேசம் செய்வித்தார்.

மந்திர உபதேசம் அறிவதற்கு இராமானுஜரைத் தனியாக வரும்படி திருக்கோட்டியூர் நம்பிகள் கூறியிருந்தார்.

இராமானுஜர் உள்ளம் உவந்து கூரத்தாழ்வாரையும் முதலியாண்டானையும் கூட்டிக் கொண்டு திருக்கோட்டியூர் சென்றடைந்தார்.

"தனியாகத்தானே உம்மை வரச்சொன்னேன் துணைக்கு இருவரை ஏன் அழைத்து வந்தீர்?'' என்று கேட்டார் நம்பி 'சுவாமி, அடியேன் தனித்தே வந்துள்ளேன். கூட வந்திருக்கும் தாசரதியே எனது தண்டு இந்த கூரத்தாழ்வானே.
எனது பவித்ரம்" என்று பணிவோடு கூறினார்.

"நல்லது இவ்வரும்பொருள் உங்கள் மூவர் அளவிலே நிற்கட்டும் மற்ற யாருக்கும் இந்த ரகஸ்யம் தெரியக் கூடாது" என்று இராமானுஜரிடம் சத்தியம் பெற்றுக்கொண்டு தனியிடத்தில் அந்த அரும்பெரும் மந்திரத்தை 'ஓம் நமோ நாராயணாய' என்பதன் உட்பொருளை உபதேசித்தார்.

அதனைக் கேட்ட மாத்திரத்தில் எல்லையற்ற பரவசமடைந்தார் இராமானுஜர் தாம் பெற்ற இன்பம் இந்த வையகம் அனைத்தும் பெற்றுய்ய வேண்டுமென்று பேருவகை கொண்டார்.

மறுநாள் திருக்கோட்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோபுரம் மேலேறி, உரகமெல்லணையான் திருமுன்பாக சென்று பக்த மகாஜனங்கள் எல்லோரையும் உரத்த குரலில் கூவி அழைத்தார்

"பக்தகோடிகளே வாருங்கள் நான் கூறும் அருட்பொருளை பெற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறியதும் வைஷ்ணவப் பெருமக்கள் பெருந்திரளாய் கூடினார் 

திருக்கோட்டியூர் நம்பிகள் கூறிய திருவெட்டெழுத்து மந்திர் ரகசியத்தை வெளியிட்டு ஆனந்தக் கூத்தாடினார். இதனைப் பார்த்த திருக்கோட்டியூர் நம்பி அதிர்ச்சியுற்றுப் போனார்.

திருவெட்டெழுத்து மந்திரம் தெருவில் உரைக்கத்தகும். மந்திரமா? தகுதி பாராது அனைவருக்கும் அதைக்கூறலாமா? ஏன்று வெகுண்டெழுந்து போனார் கோபாவேசத்தோடு கோவிலை நோக்கி விளரந்து ஓடி எதிர்ப்பட்ட இராமானு முடியைப் பிடித்திழுத்து ஏன் அப்படிச் செய்தாய்' என்று கேட்டார்.

"பாரினில் ஒருவருக்கும் இந்த உண்மை பகரேன் என்று நீர் ஆணையிட்டுக் கூறினீர் இப்போது ஊருக்கு தெரிவித்து விட்டீரே'' என்று கேட்டார் தம்பி ஆசாரியன் சொல் மீறியதற்கு என்ன பலன் உமக்குத் தெரியுமா? என்று கேட்டார் நம்பி.

தெரியும் ஆயினும் பொன்றலில் நரகம் பெற்றேன். புனிதனே" என்று கண்ணீர்மல்க இராமானுஜர் உரைத்தார்.

அதனைக் கேட்டு மனம் நெகிழ்ந்து போனார் நம்பி பலர் நலத்திற்காக தந்நலம் துறப்பவனே மனிதருள் மாணிக்கம் அத்தகையவன் கோடியில் ஒருவன் அவ்வொருவனே நம் 'இராமானுஜன்'' என்று அகமகிழ்ந்தார் 'எம்பெருமானாரே என்று தம்பி இராமானுஜரை மார்புறத் தழுவினார். பின்னர் 
இராமானுஜருக்கு பக்வத் கீதையின் சரம சுலோக இரகசியங்களை எடுத்துரைத்தார்

அதன்பின்னர் கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் இராமானுஜரிடம் ஷமந்திரங்களை உபதேசம் பெற்றனர்.

ஒரு நாள் திருக்கோட்டியூர் நம்பி திருவரங்கத்திற்கு திருமலையாண்டானை அழைத்துக் கொண்டு மடத்துக்கு வந்தார். இராமானுஜரைப் பார்த்து நீர் திருவாய்மொழியில் இலைமறைவுகாய் மறைவு போல உள்ள பொருள்களைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதற்கு இத்திருமலையாண்டான் ஒரு நல்ல வழிகாட்டி" என்று நம்பி கூறினார்.

அவரும் திருவாய்மொழியினை இராமானுஜருக்கு உபதேசிக்க. இராமானுஜர் அவற்றிற்கு புதிய புதிய அர்த்தங்களைக் கூற திருமலையாண்டாருக்கும் அவருக்கும் அபிப்ராய பேதங்கள் உருவாயிற்று

இராமானுஜருக்கு திருவாய்மொழிப் பாடம் முற்றுப் பெற்றதைத் தொடர்ந்து பெரிய நம்பி ஆளவந்தாரின் அருமைப் புதல்வரான திருவரங்கப் பெருமாளரையரிடம் வேறொரு பொருள் உண்டு அவரிடம் நீர் உபதேசம் பெறவேண்டுமென அழைத்துச் சென்றார்.

இராமானுஜரும் திருவரங்கப்பெருமானரையரிடம் சீடனாகக் கற்க அவரது குருசேவை தொண்டினைக்கண்டு அகமகிழ்ந்து போய் "நீர் நம் உள்ளத்தை கொள்ளை கொண்டுவிட்டீர், பெரிய நம்பியின் விருப்பத்திற்கிணங்க நான் இப்போதே ஒரு மறைபொருளை உமக்கு வெளியிடுகிறேன்" என்று அதனைக் கற்பித்தருளினார்.