மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை

தெய்வீகம் தவழும் மார்கழி மாதத்தில் தெய்வ வழிபாட்டுக்கு உகந்தது. இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என முன்னோர்கள் கூறியுள்ளதைப் பார்ப்போம்...

மார்கழி மாதமென்றாலே அது தெய்வீகம் தவழக்கூடிய  மாதம். இந்த மாதத்தில் தெய்வ வழிபாட்டுக்கும், நல்ல அறநெறிகளை பின்பற்றக்கூடிய பக்திமயமான மாதமாகும்.
அப்படி இருக்க மார்கழி மாதம் எதை எல்லாம் செய்ய வேண்டும், செய்யக் கூடாதென தெரிந்து கொண்டு அதனை பின்பற்றி நம் வாழ்வில் வளம் பெறுவோம்...

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை: Dos in Margazhi Month

1). மற்ற மாதங்களை காட்டிலும் மார்கழி மாதத்தில் ஆக்சிஜன் நிறைந்திருக்கும். இதனால் இந்த மாதத்தில் அதிகாலை எழுந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடுவது அல்லது கேட்பது, பஜனை பாடுதல் புண்ணியமாகும்.

2). மார்கழியில் திருமண சுப காரியம் நடத்தப்படாவிட்டாலும், திருமணத்திற்கான வரன் பார்த்தல், ஜாதகம் பரிமாற்றம், கர்ப்பிணிப் பெண்களுக்கு சீமந்தம் செய்தல் போன்ற சுப காரியங்கள் செய்யலாம்.

3). புதிய சொத்துக்கள் வாங்குதல் அதாவது நிலம், வீடு, மனை வாங்க முன் பணம் கொடுப்பதும் நல்ல விஷயம்.

4). அதிகாலை எழுந்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும்.

மார்கழியில் செய்யக்கூடாதவை: Don'ts in Margazhi Month

1). மார்கழி மாதத்தில் விதை விதைத்தலும், திருமணம் செய்தலும் கூடாது.

2). மார்கழி மாதம் விதை வளர்வதற்கான காலம். இந்த காலத்தில் விதை விதைத்தால் அது சரியாக வளர்வதற்கான சூழல் இருக்காது. இதனால் தான் திருமணமும் செய்யக் கூடாது என முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.

3). இந்தமாதத்தில் அதிகாலையில் ஆக்சிஜன் அதிகமாக இருக்கும் என்பதால் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். சூரிய உதயத்திற்குப் பின் உறங்கக் கூடாது என முன்னோர்கள் கூறிவைத்துள்ளனர்.

4). மார்கழி மாதத்தில் புதுமனையில் குடிபுகுதல், வாடகை அல்லது ஒத்திக்கு வீடு மாறி செல்லுதல், புதிய அலுவலக கட்டடத்திற்கு மாறுதல் கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் துரியோதனன் தனது ராஜ்ஜியத்தை இழந்தார்.

5). திருமணம், நிச்சயதார்த்தம், காது குத்துதல், புதிய வீட்டிற்கான பத்திரப் பதிவு, வாகனப் பதிவு செய்தலும், வாங்குதலும் கூடாது.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!