இந்த பூலோகத்தில் உள்ள அனைத்து (106) திவ்ய தேசங்களுக்கும் சென்றவர்கள் பகவான் பெருமாள், திருப்பாற்கடலில் நிச்சயம் தரிசனம் தருவார்.
திருப்பாற்கடலைச் சென்றடைய இந்த ஸ்தூல சரீரத்தோடு செல்ல முடியாது. சூட்சும சரீரத்தோடு தான் செல்ல வேண்டும்.
திருப்பாற்கடலில் பெருமாள் மூலவர் க்ஷிராப்தி நாதனாக, ஆதிசேஷன் படியில் சயனித்து, தெற்கே நோக்கி தரிசனம் தருவார். கூடவே தாயார் கடல் மகள் நாச்சியாரும் காட்சி தருவார்.
இத்தகைய திருப்பாற்கடல் பெருமாளை பெரியாழ்வார். ஆண்டாள். குலகேசர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், பொய்கையாழ்வார். பூதத்தாழ்வார், பேயாழ்வார். நம்மாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.
திருப்பாற்கடலில் பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் தேவர்கள்
சூழ, வேதங்களும், மங்கல நாதங்களும் கேட்க, நாம் செய்த
புண்ணியங்களுக்கெல்லாம் மோட்சத்தைக் கொடுக்க காத்துக்
கொண்டிருக்கிறார்.
ஆழ்வார்கள் தங்களின் ஞானக் கண்களினாலும், சூட்சும சரீரத்தினாலும் இக்கண்கொள்ளாக் காட்சியினை கண்டு, மெய்மறந்து, பாசுரங்களினால் மானிடர்களான நமக்கு கொடுத்து இருக்கிறார்கள்.
மேலும் சிறப்புகள்:
107வது திவ்யதேசம் திருப்பாற்கடல்.
கிட்டிடும் பரமபதம், கிட்டாது திருப்பாற்கடல்.
ஷீராப்தி எனும் திருப்பாற்கடல்.
அர்ச்சிராதி மார்கத்தில் இல்லா திருப்பாற்கடல்.
பிராகிருத பிரளயத்தில் அழியும் திருப்பாற்கடல்.
விபவ அவதாரங்களின் உருவாக்கம் திருப்பாற்கடல்
பிள்ளை லோகச்சார்யார் குறிப்பிட்ட ‘கூப்பிடு கேட்குமிடம்’ திருப்பாற்கடல்.
பிரம்மா, தேவர்கள் குறை நீங்கும் இடம் திருப்பாற்கடல்.
ஆதிசேஷன் படுக்கையில் சயனத்திருக்கோலம் திருப்பாற்கடல்.
வியூக வடிவமாய் நாரணன் திருப்பாற்கடல்.
நாரணன் நான்காக பிரிந்த நிலையில் திருப்பாற்கடல்.
முதல் நிலை:
முதல் நிலையில் வியூக வாசுதேவனாய் திருப்பாற்கடல்.
வியூக வாசுதேவனின் இருப்பிடமான ஆனந்தம் திருப்பாற்கடல்.
வியூக வாசுதேவன் புரியும் படைத்தல், காத்தல் & அழித்தல் திருப்பாற்கடல்.
க்ருத யுகத்தில் வெள்ளை நிறமாய் வியூக வாசுதேவன் திருப்பாற்கடல்.
த்ரேதா யுகத்தில் சிவப்பு நிறமாய் வியூக வாசுதேவன் திருப்பாற்கடல்.
துவாபர யுகத்தில் பச்சை நிறமாய் வியூக வாசுதேவன் திருப்பாற்கடல்.
கலி யுகத்தில் கரிய நிறமாய் வியூக வாசுதேவன் திருப்பாற்கடல்.
இரண்டாம் நிலை:
இரண்டாம் நிலையில் பிரத்யும்னனாய் திருப்பாற்கடல்.
பிரத்யும்னனின் இருப்பிடமான பிரமோதம் திருப்பாற்கடல்.
பிரத்யும்னன் புரியும் படைத்தல் திருப்பாற்கடல்.
க்ருத யுகத்தில் பச்சை நிறமாய் பிரத்யும்னன் திருப்பாற்கடல்.
த்ரேதா யுகத்தில் கரிய நிறமாய் பிரத்யும்னன் திருப்பாற்கடல்.
துவாபர யுகத்தில் வெள்ளை நிறமாய் பிரத்யும்னன் திருப்பாற்கடல்.
கலி யுகத்தில் சிவப்பு நிறமாய் பிரத்யும்னன் திருப்பாற்கடல்.
வேதத்தை நிர்வகிக்கும் பிரத்யும்னன் திருப்பாற்கடல்.
மூன்றாம் நிலை:
மூன்றாம் நிலையில் அனிருத்தனாய் திருப்பாற்கடல்.
அனிருத்தனின் இருப்பிடமான சம்மோதம் திருப்பாற்கடல்.
அனிருத்தன் புரியும் காத்தல் திருப்பாற்கடல்.
க்ருத யுகத்தில் கரிய நிறமாய் அனிருத்தன் திருப்பாற்கடல்.
த்ரேதா யுகத்தில் வெள்ளை நிறமாய் அனிருத்தன் திருப்பாற்கடல்.
துவாபர யுகத்தில் சிவப்பு நிறமாய் அனிருத்தன் திருப்பாற்கடல்.
கலி யுகத்தில் பச்சை நிறமாய் அனிருத்தன் திருப்பாற்கடல்.
வேதத்தை மீட்கும் அனிருத்தன் திருப்பாற்கடல்.
நான்காம் நிலை:
நான்காம் நிலையில் சங்கர்ஷனாய் திருப்பாற்கடல்.
சங்கர்ஷனின் இருப்பிடமான அமோதம் திருப்பாற்கடல்.
சங்கர்ஷன் புரியும் அழித்தல் திருப்பாற்கடல்.
க்ருத யுகத்தில் சிவப்பு நிறமாய் சங்கர்ஷன் திருப்பாற்கடல்.
த்ரேதா யுகத்தில் பச்சை நிறமாய் சங்கர்ஷன் திருப்பாற்கடல்.
துவாபர யுகத்தில் கரிய நிறமாய் சங்கர்ஷன் திருப்பாற்கடல்.
கலி யுகத்தில் வெள்ளை நிறமாய் சங்கர்ஷன் திருப்பாற்கடல்.
வேதத்தை கொடுக்கும் சங்கர்ஷன்
திருப்பாற்கடல்.
புராணம்:
சுவயாம்புவ மனுவின் புத்திரரான ப்ரியவிரதனால் உருப்பெற்ற திருப்பாற்கடல்.
பிரபஞ்சத்தின் ஏழு கடல்களில் ஆறாவது திருப்பாற்கடல்.
பிரபஞ்சத்தின் ஏழு துவீபங்களில், ஆறாவது துவீபத்தை உள்ளடக்கிய திருப்பாற்கடல்.
நாம் வசிக்கும் முதலாம் துவீபமான 100,000 யோஜனை விட்டம் கொண்ட ஜம்பு துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
ஜம்பு துவீபத்தை உள்ளடக்கிய உப்பால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.
இரண்டாம் துவீபமான 200,000 யோஜனை விட்டம் கொண்ட ப்லாக்ஷ துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
ப்லாக்ஷ துவீபத்தை உள்ளடக்கிய கரும்பு சாற்றால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.
மூன்றாம் துவீபமான 400,000 யோஜனை விட்டம் கொண்ட ஷல்மாலி துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
ஷல்மாலி துவீபத்தை உள்ளடக்கிய கள்ளால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.
நான்காம் துவீபமான 800,000 யோஜனை விட்டம் கொண்ட குஸ துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
குஸ துவீபத்தை உள்ளடக்கிய நெய்யால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.
ஐந்தாம் துவீபமான 1,600,000 யோஜனை விட்டம் கொண்ட க்ரௌன்ச துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
க்ரௌன்ச துவீபத்தை உள்ளடக்கிய தயிரால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.
ஆறாம் துவீபமான 3,200,000 யோஜனை விட்டம் கொண்ட ஷாக துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
ஷாக துவீபத்தை உள்ளடக்கிய பாலால் ஆன கடல் திருப்பாற்கடல்.
ஏழாம் துவீபமான 6,400,000 யோஜனை விட்டம் கொண்ட புஷ்கர துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
புஷ்கர துவீபத்தை உள்ளடக்கிய நீரால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.
* கடவுள் கொடுத்த இந்த உயிரை நல்ல செயல்ளுக்காக மட்டுமே பயன்படுத்தி, நல்ல எண்ணங்களோடு மற்றவர்களுக்கு உதவி செய்து, நாம் இறந்த பிறகு, சூட்சும சரீரம் அடைந்தவுடன், இந்த திருப்பாற்கடலை கண்டு, வணங்கி மறுபிறவி இல்லாமல் சென்றடைந்து, பெருமாளையும் நேராக வைகுண்டம் சென்றடைய, ஒவ்வொரு மனிதனும் விருப்பப்பட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபடவும் வேண்டும்
திருப்பாற்கடலில் சயனித்திருக்கும் பரந்தாமனுக்கு பல்லாண்டு