Thukkaram - துக்காராம்

தன் வாழ்வில் எத்தகைய துன்பங்களை சந்தித்த போதும் எப்போதும் தர்மம் தவறாமல், இறைவனின் மீது எந்நேரமும் பக்தி கொண்டு, தன் சக மக்களுக்கு தனது பாடல்கள் மூலம் நல்ல விஷயங்களை போதித்து வந்தார் துக்காராம். அப்படிப்பட்ட துக்காராமை தன்னுள் ஐக்கியமாக்கி கொள்ள விரும்பிய அந்த “பரந்தாமன்’ ஒரு இரவு துக்காராம் உறங்கும் போது அவரின் கனவில் தோன்றி, துக்காராமின் பக்திக்கு தாம் தரும் வரமாக வருகிற “ஏகாதசி” தினத்தன்று “தேஹு” எனும் இடத்தில் துக்காராம் தனது “மனித சரீரத்தோடு” வைகுண்டம் வர தன்னுடைய “கருட வாகனத்தை” தாம் அனுப்புவதாகவும், அதில் ஏறி துக்காராம் தன் வைகுண்டலோகத்தை  அடையுமாறு கூறி மறைந்தார்.

இக்கனவைக் கண்டு மிகவும் மகிழ்ந்து தூக்கத்திலிருந்து எழுந்த துக்காராம் தன் மனைவி ஜிஜியாவிடம் இக்கனவைப் பற்றி கூறினார். அதற்கு ஜிஜியா துக்காராம் தன்னை சிரிக்க வைக்க இவ்வாறெல்லாம் அவர் கூறுவதாக கூறி மீண்டும் உறங்கினார். சில நாட்களில் அந்த ஏகாதசி நாளும் வந்தது பெருமாள் தன்னிடம் கூறியது போலவே அந்த தேஹு எனும் இடத்திற்கு வந்தார். ஊர்மக்கள் எல்லோரும் அங்கு கூடியிருந்தனர் அப்போது வானிலிருந்து மஹாவிஷ்ணுவின் கருட வாகனம் கீழே வந்து இறங்கியது.
அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரையும் வணங்கி, விஷ்ணுவை புகழ்ந்து கீர்த்தனைகளை பாடியவாறே அந்த கருட வாகனத்தில் ஏறி அமர்ந்தார் துக்காராம். அப்போது வெளியே எங்கோ சென்றிருந்த அவரின் மனைவியான ஜிஜியாவிடம் யாரோ ஒருவர் இவ்விஷயத்தைப்பற்றி கூற, அன்று இரவு தன் கணவர் கூறியது உண்மைதான் என உணர்ந்து, அவரை வைகுண்டம் செல்ல விடாமல் தடுக்க வேகமாக ஓடோடி வந்தார். ஆனால் அவர் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் பார்த்திருக்க அந்த கருட வாகனத்தில் விண்ணுலகம் சென்று மறைந்தார் துக்காராம்.

இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!