(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)
அனுப்பியவர் : அகிலா
ஊர் : தர்மபுரி
என்னோட வாழ்க்கையில என்னுடைய எல்லாமே என்னோட நாராயணர் தான். அவர் தான் என்னோட கதி. அவர் தான் என்னோடே சந்தோசம், துக்கம், அழுகை, ஆனந்தம், பரமானந்தம், தோழன், காதல், சொந்தம், பந்தம், எல்லாமே அவர் தான், அவரை தவிர வேறு எதுவும் இல்லை.
என்னோட ஆதியும் அந்தமும் அவர் தான்.
இந்த உலக பந்தம் எல்லாமே கொஞ்ச நாள் தான். நம்ப வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்கள் வருவதும் போவதும் உண்டு ஆனால் என்னை எப்போழுதும் பிரியாத, பிரிக்கமுடியாத பந்தம் நாராயணார்.
யார் கூட இருந்தாலும் இல்லாட்டியும் நாள் ஓடிடும்.. ஆனால் நாராயணாயனு சொல்லாம என்னோட நாள் தொடங்கவும் தொடங்காது முடியவும் முடியாது.
எனக்கு நாராயணாயனர இவ்வளவு பிடிக்கும் தெரியாது.
இந்த உலகத்தில் எத்தனையோ ஜீவராசிகள் இருக்கு அதுல நாராயணர் அவரை பற்றி நினைக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கார். அதுக்காக நான் அவருக்கு நன்றி சொல்ல ஆசை படுகிறேன்.
நாராயணர் எவ்வளவு கருணை கொண்டவர்
நான் அவர் கூட தினமும் பேசுவேன் தினமும் என்னோடே நாள்ல என்ன நடந்ததுனு அவர் கிட்ட சொல்லுவேன். தினமும் சண்டை போடுவேன், சில நேரம் கோபத்துல திட்டுவேன். யார் மேல இருக்க கோபத்தை அவர் கிட்ட காட்டுவேன், கத்துவேன் ஆனாலும் அவர் என்ன எப்பவும் தனியா விட்டது இல்லை.
என் வாழ்க்கையில நான் ரொம்ப தனியா இருந்த சமயம்.. என்ன பன்றதுனு தெரியாம நான் கிளம்பி திருப்பதி போயிட்டேன். அதுவும் தனியா.. நான் கிளம்பும் போது அவர நினைச்சேன்.. உங்கள நம்பி தான் நான் வர்றேன்னு கிளம்பிட்டேன்... திருப்பதி போய்ட்டு திருமலைக்கு நடந்து போகலாம் னு... படி மேனி போனேன்... தரிசன நேரம் முடிஞ்சது நான் போறதுக்குள்ள மழை வேற வந்துட்டு இருந்தது.. எங்க
போறதுனு தெரியல்லை... முதல் முறை யா தனியா போனேன் எனக்கு கண் கலங்கிடுச்சு...
நாராயணனு கண்ன முடிட்டேன்... கோபத்துல உங்கள நம்பி தான வந்தேன்... இப்படி தனியா நிக்கவச்சிட்டன்னு சொன்னேன்... கண் திறந்து பார்த்தா..
என் பக்கத்தில ஒரு குடும்பமே இருந்தது.. தரிசனம் முடிஞ்ச துனு... அவங்க என்ன அவங்க கூடவே கூட்டிட்டு போனாங்க... காலையில முதல் தரிசனம்க்கு என்ன கூட்டிட்டு போனாங்க... என்ன சாப்பிட வச்சு பஸ் ல கூட ஏத்தி விட்டாங்க.. அவங்க எங்கிட்ட என் பேர் கூட என்ன னு கேக்கல்ல. அப் போதான் நான் புரிஞ்சிக்கிட்டேன்... என்னோட நாராயணர்
அப்ப இருந்து எப்போலாம் கஷ்டமா இருக்கோ... அப்போலாம்... நான் கிளம்பி திருப்பதி போய்டுவேன்..
இதுபோல அனுதினமும் என்னை என் உடன் இருந்து வழிநடத்தி வரும் நாராயணர் அவரைப்பற்றி இன்னும் கூறிக்கொண்டே போகலாம்
" ஓம் நமோ நாராயணாய"
நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகித் திரும்பவும் உங்களை வந்து சேரும்.
அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173