விதுரர் உறக்கம் வராமல் தவிக்கும் திருதராஷ்டிரனிடம் கீழ்க் கண்டவர்கள் உறக்கம் வராமல் தவிப்பார்கள் என்று கூறுகிறார்.
1. தன்னை விட பலவானிடம் மோதுபவன்.
2. தான் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என நினைத்து அதை நிறைவேற்ற வேண்டிய சாதனம் இல்லாமல் இருப்பவன்.
3. தனது சொத்தை களவு கொடுத்தவன்.
4. காம வயசப்பட்டவன்,
கடைசியாக 5. திருடன்.
மேலும் விதுரர் கூறுகிறார். ஆனால் திருதராஷ்டிரா! உனக்கு மேல் சொல்லப் பட்ட ஐந்து தோஷங்களால் நீ தீண்டப்பட்டவன் அல்ல. இருப்பினும் நீயும் உறக்கம் வராமல் தவிக்கிறாய். இதற்கு மேலும் ஒரு காரணம் உண்டு. இந்த காரணங்களுக்கும் மேலாக பிரர்த்தியார் சொத்தை யார் அபகரித்தாலும் அவனுக்கும் உறக்கம் வராது. நீ செய்தது பெருங்குற்றம்.
யாராக இருந்தாலும் தன்னிடம் உள்ள துணி, அன்னம் மற்றும் இல்லம் ஆகியவற்றை தனக்கு தேவையானது போக மீதத்தை பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆனால் நீ நியாயமாக கிடைக்க வேண்டிய பாண்டவரின் பங்கை கொடுக்க மறுக்கிறாய் எனிவே நீ உறக்கம் வராமல் தவிக்கிறாய் என்று கூறுகிறார்.
அதற்கு திருதராஷ்டிரன் இதுவரை அமைதியாக இருந்துவிட்டு தர்மர் இப்போது ஏன் சொத்தை கேட்டு சண்டைக்கு வர வேண்டும் என வினவுகிறான். எல்லா ஜீவராசிகளிடம் உள்ள கருணையால் தான் தருமர் இதுவரை பொறுத்துக் கொண்டு இருந்தார் என்று கூறுகிறார். மேலும் தாமதிக்காமல் அவர்களது சொத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறார். திருதராஷ்டிரன் கொடுப்பதாக இல்லை.
அடுத்து விதுரர் பண்டிதர்களுக்கான விளக்கத்தை பற்றி கூற ஆரம்பிக்கிறார். அதை பற்றி அடுத்த அத்தியாயத்தில் காண்போம். அதற்கு முன் தரும புத்திரனின் தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி யைப் பற்றி பாப்போம்.
கண்ணபிரான் இந்த பூவுலகத்தை பிரிந்த பிறகு இவ்வுலகத்தில் இருக்க பிடிக்காமல் பஞ்ச பாண்டவர்கள் மற்றும் திரௌபதி சொர்க்க ஆரோஹனம் செய்வதற்கு இமயமலை நோக்கி செல்கிறார்கள். முதலில் திரௌபதி தனது பிராணனை விட்டு விடுகிறாள். அதன் பிறகு தருமரைத் தவிர மற்ற நால்வரும் ஒவ்வொருவராக இவ்வுலகத்தை பிரிந்து விடுகிறார்கள்.
கடைசியாக தருமரும் ஒரு நாயும் செல்கின்றனர். அப்போது அந்த நாய் நீங்கள் தான் இந்த உலகத்தை விட்டு செல்ல போகிறீர்களே எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும். எனது ரோமத்தில் உள்ள புழு பூச்சிகள் என்னை கடித்து துன்புறுத்துகின்றன. அவைகளை எனது உடம்பை விட்டு எடுத்து செல்லுங்கள். நான் படும் இந்த கஷ்டத்திலிருந்து விடுபட்டு விடுவேன் என்று சொல்லியது.
அந்த பூச்சிகளை தருமர் உதற முற்படும் பொது அந்த பூச்சிகளின் பிரதிநிதி அவரிடம் பேசுகிறது. நாங்கள் அனைவரும் இந்த நாயின் மீதுதான் உயிர் வாழ்கிறோம். எங்களை இதில் இருந்து எடுத்து விட்டால் நங்கள் இந்த இமயமலையில் எப்படி உயிர் வாழ்வோம் நீங்கள்தான் தரும சிந்தனை உடையவர் ஆயிற்றே எங்களுக்கு வழி சொல்லுங்கள் என்று கூறியது.
தருமர் சிந்தனையில் ஈடுபட்டார். பிறகு ஒரு உபாயம் தோன்றவே அந்த பூச்சிகளை அந்த நாயிடம் இருந்து உதறி தனது மீது விட்டுக் கொண்டார். இந்த ஒரு செயலால் நாயையும் பூச்சிகளையும் காப்பாற்றியதைப் பார்த்து எம தர்ம ராஜனும் இந்திரனும் நேரில் வந்து கடைசி நேரத்தில் எப்படி இருக்கிறாய் என்று சோதிக்கவே இப்படி ஒரு நாடகம் தாங்களே நடத்தியதாக கூறி தங்களது ராஜ்ய சபைக்கு அழைத்து சென்றார்கள்.
அடுத்த அத்தியாத்தில் பண்டிதர்களுக்கான விளக்கத்தைப் பற்றி விதுரர் என்ன கூறினார் என்று பார்ப்போம்.