அடுத்ததாக இரண்டுகளைப் பற்றி கீழ் வருமாறு விதுரர் விவரிக்கிறார்.

1.  இந்த  இரண்டு பேரும் பாம்பின் வாயில் அகப் பட்ட தவளை போல அழிந்து விடுவர்.

சத்ரியன் ராஜாவாகவும் ராணுவ தலைவனாகவும் இருந்து விட்டு வரவழைத்த யுத்தத்திற்கு போக மாட்டேன் என்று சொல்பவன்.

பிராமணனாக  இருந்து ஊர் ஊராக  சென்று தொண்டு புரியாதவன். (பிராம்மனமே  அழிந்து விடும்)

2. இந்த இரண்டு விஷயங்களை செய்பவர்கள் கொண்டாடப் படுவர்.

கெட்டவன் என்று தெரிந்து அவனை அர்ச்சிக்காதவன் அல்லது அவனை நல்லவன் என்று புகழாதவன்

மற்றவர்களை துன்புறுத்தும் வார்த்தைகளை உபயோகிக்காதவனை  கொண்டாடுபவன்.

3. இந்த இரண்டு பேர்களுக்கும் சுய புத்தி கிடையாது.

மற்ற ஸ்திரிகளின் வஸ்துகளுக்கு (பொருட்களுக்கு) ஆசை பட்டு அதை அனுபவிக்க, வாங்க ஆசைப்படும் ஸ்திரிகள்.

ஒருவனைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே மற்றவர்கள் சொன்னார்கள் என்று உண்மையை தெரிந்துகொள்ளாமல் அவனைப் பற்றி புகழ்பவர்கள்.

4. இந்த இரண்டும் முள் போல குத்திக் கொண்டே இருக்கும்.

ஒருவனது கையில் காசு இல்லை என்றாலும் பலவற்றை வாங்க வேண்டும் என்று ஆசைபட்டால் அந்த ஆசை

தனக்கு சக்தி அல்லது பதவி  இல்லை என்று தெரிந்தும் கோபப்பட்டால்  அந்த கோபம்.

5. இந்த இரண்டு கர்மாக்களை செய்பவன் விளங்குவதில்லை.

எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் கிரகஸ்தன் (இல்லத்தரசன்)

வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் சந்நியாசி.

6. இந்த இரண்டு பேரும் சொர்க்கத்தை விட உயர்ந்த இடத்தில நிற்கிறார்கள்.

பொறுமை உள்ள பணக்காரன்  
தரித்திரனாக இருந்தும் தன்னிடம் உள்ளதை தானம் செய்பவன்.

7. இந்த இரண்டு செயல்களும் ஏற்று கொள்ளப் படாது

ஏற்பதுக்கு தகுதி உள்ளவனுக்கு கொடுப்பது
ஏற்கும் சக்தி உள்ளவனுக்கு கொடுக்காமல் இருப்பது

8. இந்த இரண்டு பேரும் கழுத்தில் கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்குபவர்கள்.

தனம் இருந்தும் ஈயாதவன் (சம்சாரக் கடலில் மூழ்கி விடுவான். )

காசு இல்லை ஆனால்  உலகத்து கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாதவன்.  (திருடு, கொள்ளை அன்று பல விதங்களில் மாட்டிக் கொண்டு விடுவான்.)

9. இந்த இரண்டு பேரும் சூரிய மண்டலத்தை தாண்டிய உயர் கதியை அடைவார்கள்.

யோகம் மற்றும் வைராக்கியம் உள்ள சந்நியாசி
போர்களத்தில் இறந்த வீரன்.
 
இவ்வாறு விதுரர் இரண்டுகளைப் பற்றி அழகாக விவரிக்கிறார். அடுத்து மூன்றுகளைப் பற்றி என்ன விவரித்தார் என்று அடுத்த அத்தியாத்தில் பார்ப்போம்.