கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா

கோவிந்தா நாம மகிமை!!

கோவிந்தா என்று உளப்பூர்வமாகச் சொன்னால் பெருமாள் ஓடி வருவார்'' 
பெருமாள் பக்தர் ஒருவர் அதிகாலை நீராடி, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி பெருமாளைத் தரிசிப்பார். ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார். 

ஒரு குருவிடம் சென்று, ""குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு குறையில்லை. இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன்'' என்றார். 
 
குரு அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து,""தம்பி! உன் குடும்பம் நலமா? ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா?'' என்று கேட்டார். 
அந்த நபரோ, ""பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை...?''என்றார். உடனே பெருமாள் பக்தர் ஆச்சரியத்துடன்,  ""எனக்கு அந்த மந்திரம் தெரியாதே! அதைச் சொல்லேன்!'' என்றார். 
வந்தவர்,""கோவிந்தா! கோவிந்தா!'' என்றார். 

 பக்திமான் ஏமாற்றத்துடன்,""இது தானா! நான் தினமும் விஷ்ணு சகஸ்ரநாமமமே சொல்கிறேன். அதை விடவா இது பெரிது?'' என்றார். 
 
குரு அவரிடம்,""நீ தவறாக நினைக்கிறாய். 
ஆயிரம் பெயர்களால் விஷ்ணுவை வணங்குவதே சகஸ்ரநாமம். 
இது பீஷ்மர் அர்ஜூனனுக்கு உபதேசித்தது. இதைப் போல அற்புதம் வேறில்லை. ஆனால், எல்லாரும் பீஷ்மராக முடியுமா? 
பாமரனும், பெருமாள் அருள் பெற சொல்லப்பட்டதே கோவிந்த நாமம். 
திரவுபதியின் மானம் காத்தது . 
அதுவே. எந்த மந்திரமும் அறியாதவன் கூட "கோவிந்தா' என்று உளப்பூர்வமாகச் சொன்னால் பெருமாள் ஓடி வருவார்'' என்றார் குரு. 
 
பக்தரின் மனதில் தெளிவு பிறந்தது. 
பகவானின் மற்ற நாமங்கள் எல்லாவற்றையும் விட கோவிந்த நாமம் ஏற்றமானதா? 
 
ஆம் மிகவும் ஏற்றமானது அந்த கோவிந்த நாமம் 
இதை பெரியாளவரின் பெண்பிள்ளை கோதைஆண்டாள் தனது திருப்பாவை பாசுரத்தின் முடிவில் மிக அழகாக விவரித்துள்ளாள் எப்படியானால் 

ஆண்டாள் தனதுதிருப்பாவை 27வது பாசுரத்தில் "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" என்றும், 
 
28வது பாசுரத்தில் 
 "குறைவொன்றுமில்லாத கோவிந்தா" என்றும், 29வது பாசுரத்தில் "இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா" என்றும் 
 மூன்று முறை வரிசையாக கோவிந்த நாமம் பாடுகிறார். 

 "கறவைகள் பின்சென்று" பாசுரத்தில் கோவிந்தனை 
 "குறைவொன்றுமில்லாத கோவிந்தா"என்று அழைத்து விட்டு கூடவே "அன்பினால் உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே" என்று வேண்டுகிறார் ஆண்டாள் 

 அப்படியானால் ஆண்டாள் பகவானை சிறுபெயரை வைத்து அழைத்துள்ளாளா 
 பார்ப்போம்..
 
ஆண்டாள் முந்தைய 24 திருப்பாவை பாசுரங்களிலும் பகவானை அழைத்த சிறு பெயர்கள் இதோ: 
 
1)நாராயணன், 
2)பரமன் 
3)உத்தமன் 
4)கண்ணன் 
5)பத்மநாபன் 
6)மாயன் 
7) யமுனைத்துறைவன்
8)தாமோதரன் 
9) நாராயணன்மூர்த்தி 
10)கேசவன் 
11)தேவாதிதேவன் 
12)மாதவன் 
13)வைகுந்தன் 
14) புண்ணியன் 
15)மணிவண்ணன் 
16)மனத்துக்கினியான் 
17)மணிவண்ணன் 
18)உம்பர்கோமான் 
19)மலர்மார்பன் 
20)கலி 
21) விமலன் 
22)ஊற்றமுடையாய் 
23)பெரியாய் 
24) சுடர் 
 
இந்த உன்னதமான பெயர்களையே ஆண்டாள் சிறுபேர் என்கிறாள் என்றால்,கோவிந்த நாமத்தின் மகிமையைச் சொல்லவும் வேண்டுமோ? 

சொல்லுவோம் தினமும் கோவிந்தா கோவிந்தா என்ற பகவத் நாமாவை 
தொலைப்போம் நம் ஜென்மத்தை!! 
"கோவிந்தா கோவிந்தா கோவிந்தா"....

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!