இதோ அதற்கான பதில்...
கோவிலுக்குச் செல்லும் போதும், இறைவனை வழிபடும் போதும் மணி அடித்துக் இறைவனை வழிபடுவதன் விளக்கம்.
பல ஆன்மிக செயல்களுக்கு காரண காரியங்கள் தெரியாமலேயே, நாமும் அதைப் பின்பற்றுகிறோம்.
நமது முன்னோர்கள் வழிவழியாகச் செய்து வந்தார்கள், என்று நடைமுறையில் செய்து வருகிறோம்.
அப்படி நாம் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவிலில் மணி அடித்து வழிபடுவது. இன்னும் சிலர், நாம் மணி அடித்து வழிபட்டால் தான் நமது வேண்டுதலுக்கு இறைவன் செவிசாய்ப்பார் என்று அவர்களுக்குத் தெரிந்த விளக்கத்தை சொல்வார்கள்.
பொதுவாக மணி அடிக்கும் போது எழுகின்ற ஓசைக்கும், நமது மூளைக்கும் இடையே தொடர்புகள் உள்ளது என்று சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இப்படி மணியிலிருந்து எழும் ஓசைக்குப் பின்னால் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. ஆகம விதிகளின் படி, வெண்கல மணியில் இருந்து எழுப்பப்படுகின்ற ஓசைக்கு எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கின்ற வல்லமை உண்டு.
உண்மையில் கோயிலில், செல்ஃபி எடுத்துக் கொண்டும், பிறர் கண்ணீர் கதைகளையும் பிரகாரங்களில் அமர்ந்து பேசுபவர்களின் காதுகளில் மணியின் சப்தம் கேட்டு, அவர்களின் கவனத்தை கடவுளை நோக்கித் திரும்புகிறது கோயில் மணி ஓசை.
மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் தெரியும். அதற்கு மணிகளில் உள்ள கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்களின் கலப்பு தான் காரணமாகும்.
மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றது.
கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து, விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் நிம்மதியை அளிக்கிறது.
பூஜைகள் நடைப்பெறும் நேரங்களில், மணியடித்து, சப்தம் எழுப்பி, "இப்பொழுதாவது இறைவனை நோக்கி மனதை செலுத்தி நற்கதியைப் பெறுங்கள்" என்று பக்தர்களை மனதை ஒருமுகப்படுத்த கோயில் மணி உதவுகிறது.
கோவிலில் உள்ள மணி பொதுவாக (zync, nickel, lead, chromium, copper, manganese) உள்ளிட்ட ஆறு உலோகங்களால் ஆனது. கோவில் மணியை அடிக்கும்போது ஏற்படும் ஓசை நமது மனதை ஒரு நிலைப்படுத்தி நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களை (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுக்தி, ஆக்ஞா, சகஸ்ரஹாரம்) சீர்படுத்துகிறது. மணி அடித்த ஏழு வினாடிகளும் அந்த அதிர்வலைகள் நமது காதுகளில் ஒழிக்கும். அப்போது நமது மனது ஒரு நிலைப்படும். நமது வலது மற்றும் இடப்புற மூளை தெளிவடையும். இந்த நிலையை தான் டிரான் நிலை என்கிறோம்.
இனிமேல் நீங்கள் கோவிலுக்கு சென்றால் ஒருமுறையாவது மணியை அடியுங்கள். இதை அனைவரும் தெரிந்து கொள்ள முடிந்தவரை பகிருங்கள்....