கருட புராணம் - 06

06. பிரேத ஜென்மம் நீங்க வழி

கருடாழ்வார் ஸ்ரீமந் நாராயண பகவானைத் தொழுது, “வைகுண்ட நாதரே! மனிதர்களுக்கு மிகவும் கொடியதான பிரேத ஜென்மம் வராமல் ஒழியும் மார்க்கம் எது என்பதை தேவரீர் தயவு செய்து கூறியருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.” என்ற கருடனை நோக்கி ஸ்ரீமந் நாராயணன் கூறலானார்.
                                          
“ஒ கருடா! மனிதர்கள் இறந்தவுடன், பிரேத ஜென்மத்தை நிவர்த்திக்க விரும்பிய யாவரும், ஐந்து வயதுக்கும் மேற்பட்ட யார் இறந்தாலும், அவருக்கு பிரேத ஜென்மம் ஏற்படாமல் இருக்க, கர்மம் செய்பவன் விருஷோற்சர்க்கம் செய்தல் அவசியம்.

“இந்தக் கருமத்தைத் தவிர வேறு கர்மங்கள் செய்வதற்கில்லை. இறந்தவருக்கு பிரேத ஜென்மம் வருவதில்லை. இறந்தவர்களுக்கு இறந்த பதினொன்றாம் நாள் விருஷோற்சனம் என்ற கர்மங்கள் தன் புத்திரனாவது, மனைவியாவது ஆண், பெண் வயிற்றுப் பிள்ளையாவது, பெண்ணாயினும் செய்யலாம். ஆனால், புத்திரன் செய்வது தான் சிறந்தது. கர்மம் செய்யாமல் சிரார்த்தம் மட்டும் செய்வதால் எந்த பலனுமில்லை.

“பிள்ளையில்லாமலும், பெண்ணில்லாமலும் ஒருவர் இறந்து, உரிய உத்திரக் கிரியைகளைச் செய்யாமல் விட்டுவிட்டால் அவன் இரவு பகலாக பசியோடும், தாகத்தோடும் ‘ஐயையோ....!’ என்று கூச்சல்லிட்ட வண்ணம் உலகமெங்கும் நெடுங்காலம் வரை அலைந்து, திரிந்து பிறகு புழுக்கள், கிருமிகள் முதலிய ஜென்மங்கள் எடுத்து, பிறந்து பிறந்து மரிப்பான்.

“யாருமேயில்லாதவன் உயிரோடிருக்கும் போதே சாவதற்கு முன்பாக, நற்கர்மங்கள் செய்யக் கடவன்...” என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!