வைணவ விண்ணொளி என்ற தலைப்பு இடும்போது கோடி சூர்ய பிரகாசமாக திகழும் ஒரு விண்ணொளி ஸ்ரீ ராமானுஜரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?
ஸ்ரீ ராமானுஜரின் 120 வருஷ வாழ்க்கை விவரம் ஒரு அற்புத சரித்திரம். நிச்சயம் அவர் ஒரு அபூர்வ மனிதர். என்றும் மறக்கமுடியாத ஒரு யுக புருஷர். அவர் வாழ்க்கை பயணம் நீண்டது அல்லவா. முழுவதும் விவரம் அறிந்து படிக்க எத்தனை பேரால் முடியும்? . ஆனால் எல்லோரும் தெரிந்து கொள்ள சுலபமாக ஒரு பாதை அமைத்து வருஷ மாத வாரியாக மைல் கல்லை நட்டு அங்கங்கு விஷயம் அறிவோம். எனக்கு இதை தயாரிக்கும்போது அதிசயமாக இருந்தது. இப்படி ஒரு மனிதரா?? நிச்சயம் மனிதரில்லையே, தெய்வமல்லவா அவதாரம் செய்தது. பரமனின் படுக்கையான ஆதி சேஷன் அல்லவோ லக்ஷ்மணனாகவும் பலராமனாகவும் ஸ்ரீ ராமானுஜராகவும் உருப்பெற்றது.
120 வருஷ சமாசாரம் முழுதும் ஒரே செய்தி மடலில் தர முடியும். அதனால் ஆதிசேஷன் போல் நீண்டதாக இருக்குமே. எனவே மூன்று பகுதிகளாக தருகிறேன். எப்படி இருக்கிறது செய்தியின் விவரங்கள் என்று உங்களுக்கே புரியும். .
1. 1017 சித்திரை மாதம் திருவாதிரை நக்ஷத்ரம் - ஸ்ரீ ராமானுஜன் ஜனனம்
2. 1017 தை மாதம் புனர்பூசம் - சகோதரன் எம்பாரின் ஜனனம்
3. 1024 - 7வயதில் உபனயனம்
4. 1025 -- வயது 8. அக்கா பூமிதேவியின் திருமணம்
5. 1028 - வயது 11 முதலி ஆண்டான் ஜனனம் ,
6. தங்கை கமலைக்கு திருமணம்
7. நடாதூர் ஆழ்வான், கிடம்பி ஆச்சான், பிள்ளை திருமலை நம்பி ஜனனம்.
8. 1032 - 15 வயது. குருகை பிரான் பிள்ளான் அவதாரம்
9. 1033 16 வயது. தஞ்ஜாம்பாளுடன் ( ரக்ஷாம்பாள் ) திருமணம்
10. 1033-1037 - 16-20 வயது - யாதவப்ரகாசரிடம் கல்வி , திருப்புட்குழியில்.
11. 1035 - 18 வயது. தந்தை கேசவ சோமயாஜி மறைவு.
12. பெரிய திருமலை நம்பியின் 3வது மகன் ராமானுஜன் ஜனனம்
13. 1038 -- 21 வயது. யாதவ பிரகாசர் கோஷ்டியோடு காசி மாக ஸ்நானம் புறப்பாடு.(தை, மாசி, பங்குனி)
14. 1038-1040 - 22-23 வயது. யாதவ பிரகாசரிடம் கல்வி.
15. 1039 - 22 வயது. ஆளவந்தார் காஞ்சி வருகை. (வைகாசி )
16. 1041 - 24 வயது. யாதவப்ரகாசரிடம் கல்வி முடிந்து காஞ்சி வரதராஜருக்கு கைங்கர்யம்.
17 1042 - 25 வயது - பெரிய நம்பியோடு ஆளவந்தார் அழைப்புக்கிணங்கி ஸ்ரீ ரங்கம் வருகை. ஆளவந்தார் பரம பதம் ஏகுதல்.
18. 1043 - 26 வயது. மாளவ ராஜா ஜகத் தேவன் த்வார சமுத்ரம், பேலூர், யதுகிரி ஆகிய ஊர்களை எல்லாம் தாக்கி ராம பிரியர் அர்ச்ச விக்ரஹ அபகரிப்பு.
19. 1044 - 27 வயது. முதலியாண்டான் ஸ்ரீ ரங்கத்திலிருந்து வந்து ராமானுஜரிடம் இணைதல்.
20. 1045 - 28 வயது. ராமானுஜரின் தாய் பரமபதம் அடைந்தார்.
21. ஆண்டாளுக்கும் கூரேசருக்கும் திருமணம்.
22. 1046 - 29 வயது. பேலுருக்கு ஹோய்சால பிட்டி தேவன் அரசன் ஆனான்
23. 1049 - 32 வயது. பெருமாளின் 6 கட்டளைகளை திருக்கச்சி நம்பி மூலம் பெறுதல். பெரிய நம்பிகளை மதுராந்தகத்தில் சந்தித்தல். பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டு காஞ்சியில் 6 மாதம் வாசம்.
24. திருக்கச்சி நம்பிகளின் அறிவுரையின் படி சொத்து, செல்வம் எல்லாம் துறந்து கூரேசர் காஞ்சியில் ராமனுஜரின் சிஷ்யன் ஆகிறார்.
25. நடாதூர் ஆழ்வான் சிஷ்யன் ஆகிறார்.
26. தாயின் அறிவுரைப் படி யாதவ பிரகாசர் ராமனுஜரின் சிஷ்யர் (கோவிந்த தாசர்) ஆகிறார்.- யதி தர்ம சமுச்சயம் எழுதப்படுகிறது.
27. திருமலை நம்பிக்கு எம்பாரை (கோவிந்த பட்டர்) சைவத்திலிருந்து வைஷ்ணவத்துக்கு மாறும்படி செய்தி அனுப்பிகிறார்.
28. மார்கழியில் யாதவப் பிரகாசர் பரமபதம் எய்தல்.
29. 1050- 33 வயது. வேதாந்த சாரம் உருவாகியது. இதுவரை இளையாழ்வார், இனி உடையவர் ஆகிறார்.
30. திருவரங்க பெருமாள் அரையரோடு ஸ்ரீரங்கம் வருகை - உடையவர் பட்டம் பெறுதல்.
தொடரும் ....