எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 10

(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)
அனுப்பியவர் : சந்திர போஸ்
மதுரை

என் வாழ்வில் பெருமாள் நிகழ்த்திய அதிசயம் பெருமாள்  பக்தனான எனக்கு ஸ்ரீ ரங்க பெருமாளை  தரிசிக்க வெகு நாட்களாக ஆசை ஒரு நாள் திருச்சிக்கு ஓர் சொந்த வேலையாக நானும் என் நண்பரின் தம்பியும் சென்றிருந்தோம் வேலை  முடிந்ததும் ஸ்ரீரங்கம் சென்றோம் அங்கு  கோயில் பிரகாரங்களை சுற்றி பார்த்து கொன்றிருந்தோம் அன்று ஏனோ  சீக்கிரமாக நடை சாத்துவதாக கூறினார்கள் நாங்கள் இரண்டு பேரும் வேகமாக மூலவரை பார்க்க சென்றோம் நாங்கள் இருவரும்  மற்ற   பக்தர்களும் செல்வதற்குள் கதவை அடைத்துவிட்டார்கள் நாங்கள் அனைவரும் எவ்வளவோ கூறியும் கேட்கவில்லை எனவே எங்கள் இருவரை தவிர அனைவரும்  சென்றுவிட்டார்கள் எனக்கு கண் கலங்கிவிட்டது இன்று உன்னை தரிசிக்காமல் செல்லமாட்டேன் என்று  வேண்டிக்கொண்டேன் சாவி துவாரம் வழியாக பார்த்தால்  உள்ளே அவ்வளவு ஆட்கள் வரிசையில் நிற்க நமக்கு மட்டும் இந்த நிலைமையா என்று வேதனையாக இருந்தது என்ன ஒரு ஆச்சர்யம் ஒரு பெரியவர் வந்து கதவை திறந்தார் அவர் எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை நாங்கள் இருவரும் உள்ளே சென்றுவிட்டோம் திரும்பிப் பார்த்தால் பெரியவரை காணோம் அவர் முதுமைக்கு அந்த பெரிய கதவை ஒரே ஆளாக  திறக்க வாய்ப்பில்லை ஒரே ஆச்சரியத்துடன் கண் குளிர அரங்கனை தரிசனம் செய்து நன்றி கூறினேன் உண்மையான பக்தியுடன் நம்பிக்கையுடன் அழைத்தால் பெருமாள் இறங்கி வருவார் என்று புரிந்துகொண்டேன் அந்த நாளை என் வாழ்நாளில் மறக்கமுடியாது அன்று இரவு முழுவதும் நான் மகிழ்ச்சியில் தூங்கவே இல்லை  

நன்றி வணக்கம்

நீங்களும் உங்கள் வாழ்வில்  பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்

அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!