(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)
அனுப்பியவர் ; ஶ்ரீநிவாஸகோபாலன்.
இந்திராநகர் - பெங்களுரு
இந்திராநகர் - பெங்களுரு
1960 வருடம் எனக்கு வயது 16. குடும்பத்துடன் ஏழுமலையான் தரிசனத்துக்கு போயிருந்தோம். அப்போழுது எல்லாம் இப்போது போல் அதிக கூட்டம் கிடையாது. கோயிலின் வெளி மண்டபத்தில் (உண்டியல் மண்டபம்) தரிசனம் முடித்து வெளியே வரும்போது பிராசதம் தருவார்கள். நாங்கள் தரிசனத்துக்கு உள்ளே நுழையும்போது பல அண்டாக்களில் பல விதமான பிராசதங்கள், புளியோதரை, வெண்பொங்கல், சர்கரை பொங்கல் முதலின வைக்கப்பட்டு இருந்தது. தயிர் சாதம் விநியோகம் ஆகிகொண்டிருந்தது. சிறுவனான நான் எனக்கு முன்னால் இருந்த என் பாட்டியிடம், நாம் வரும்போது சக்கரை பொங்கல் கிடைக்குமா என்று கேட்டேன். பதில் கூரிய என் பாட்டி, எல்லாமே பிராசதம்தான், பக்தியுடன் பெருமாளை சேவி என்றார். தரிசனம் முடித்து வந்தோம். எனக்கு முன்னால் என் பாட்டி. அடுத்து நான். என் பாட்டிக்கு தயிர் சாதம் பிரசாதம். என்ன நினைத்தாரோ,என் முறை வரும்போது, சர்கரை பொங்கல் அண்டா இழுக்கப்பட்டு, என்னில் தொடங்கி சர்கரை பொங்கல் விநியோகம் ஆயிற்று. எனக்கு இப்பொழுது 76 வயது. பலமுறை திருப்பதி சேவிக்கிறேன். அன்று என் சர்கரை பொங்கல் ஆசையை பூர்த்தி செய்த பெருமாள், என் வாழ்கையில் எல்லா ஆசைகளையும் கடாஷிக்கிறார்.
நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்
அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173