கருட புராணம் - 11

11. சித்திரகுப்தன் கணக்கும் நரகங்களும்

சூதமா முனிவர் சௌனகாதி முனிவர்களுக்கு பன்னிரண்டு சிரவணரின் சரிதத்தைச் சொல்லிய பிறகு மேலும் தொடர்ந்து சொன்னார். 

திருமால் கருடனை நோக்கி கூறலானார், “கருடா! ஜீவர்கள் பூவுலகில் வாழ்ந்த காலத்தில் செய்த பாப புண்ணியங்களை எல்லாம் சித்திர குப்தன் என்ற யம லோக கணக்கன் சிரவணர்களின் மூலமாக அறிந்து யம தர்மராஜனுக்கு அறிவித்து, அவனது உத்தரவுப்படியே அவரவரது பாவங்களின் தன்மைக்கேற்ற தண்டனை வாசித்துச் சொல்ல, யமதர்மன் தன கிங்கர்களைக் கொண்டு அத்தண்டனைகளை அவ்வவ்போதே நிறைவேற்றிச் செய்து விடுவான். 

“ஜீவனானவன் வாக்கால் செய்த பாவங்களை வாக்காலும், உடலால் செய்த பாவப் புண்ணியங்களை உடலாலும் மனத்தால் செய்த பாவப் புண்ணியங்களை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

“பெரியோரை இகழ்ந்து நீச மொழிகளால் ஏசிபேசினால்  பாவங்கள் உண்டாகி வாயிலிருந்து புழுக்களாக சொரியும்.

“புண்ணியங்களை மட்டும் செய்தவர்கள் நல்ல சரீரத்தோடு நோய் இன்றி இன்பமாக வாழ்வார்கள்.

“பிறவுயிர்களை ஊட்டி வதைத்தவர்கள் கொடூரமான சரீரத்தை அடைந்து துன்புறுவார்கள்.

பக்ஷி ராஜனான கருடன், திருமகள் கேள்வனைச் சிரம் வணங்கி, கார்மேக வண்ணரே! “நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கின்றன? அவற்றில் யார் யார் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்கள்? அவற்றை அடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும்.” என்று கேட்க,

கார்மேக வண்ணன் கருடனை நோக்கி, “காசிப் புத்திரனே காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன. அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருக்கின்றன அவை......

அடுத்த பதிவில்....

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!