(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)
அனுப்பியவர் துவாரகேஷ் கிருஷ்ணன்.
திருப்பத்தூர் - திருப்பத்தூர் மாவட்டம்
அனுப்பியவர் துவாரகேஷ் கிருஷ்ணன்.
திருப்பத்தூர் - திருப்பத்தூர் மாவட்டம்
வணக்கம். திருவேங்கடமுடையான் எனது வாழ்வில் நடத்திய அற்புதங்களைப் பற்றி பகிர விரும்புகிறேன்.திருவேங்கடமுடையான் இடம் நான் சில கோரிக்கைகளை வைத்தேன். எனது திருமணத்திற்கு பின்பு ஒரு நாள் கூட என் மனைவி அவரது தாய் வீட்டில் நான் இல்லாமல் தங்கக் கூடாது என்றும், அந்தப் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எனக்கு மகனாக வந்து பிறக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு முறை திருப்பதிக்கு வந்து திருவேங்கடமுடையான் - ஐ தரிசிக்கும் சமயங்களில் எவ்வித இடையூறுகளும் வரக்கூடாது என்றும் 3 கோரிக்கைகளை வைத்தேன். எனக்கு திருமணமாகி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் முடியப் போகின்றது. இன்று வரை என் மனைவி அவரது தாய் வீட்டிற்கு ஒருதடவை கூட சென்று இரவு தங்கியதில்லை. எங்களுக்கு பிறந்த எங்கள் மகன் ஒன்றரை வயது முதலே அந்த கிருஷ்ணரை வழிபடும் அதி தீவிர பக்தன் ஆகவே இருக்கிறான். ஒன்றரை வயதில் எந்த குழந்தையும் அவ்வளவு பக்தியில் ஈடுபட்டு நான் இதுவரை கண்டதில்லை கேட்டதில்லை. திருமணத்திற்குப் பிறகு நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு முறை திருப்பதி செல்லும் போதும் எவ்வித இடையூறுகளும் இன்றி முழுமையாக திருப்பதி வேங்கடம் உடையானை தரிசித்துவிட்டு வருகிறோம். நான் வைத்த மூன்று கோரிக்கைகளை என் வாழ்வில் நிறைவேற்றிய அந்த திருவேங்கடமுடையானுக் கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும்
பல்லாண்டு! பல்லாண்டு! பல்லாண்டு!
நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்
அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173