(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)
அனுப்பியவர் : நாகராஜன்
உள்ளகரம் - சென்னை

குறையொன்றுமில்லாத கோவிந்தன் கலியுகக் கடவுளான திருவேங்கடமுடையான்  லீலைகள் ஏராளம் அவ்வாறு அவன் என் வாழ்வில் ஒரு லீலை செய்தான் அதனை பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் எனது ஐந்தாவது வயதில் டைபாய்டு காய்ச்சலால் உயிருக்கு அபாயம் இருந்தபோது என் தாயார் அந்த  திருவேங்கடமுடையானை வேண்டி அதன் பலனாய் நான் மீண்டு வந்ததாக கூறுவாள்  எனக்கும் அவரை தரிசிக்க மிக ஆவல் உண்டு அதற்கான வாய்ப்பும் எனது தமையனார் மூலம் கிடைத்தது அப்பொழுது நான் வட நாட்டில் வேலை செய்து கொண்டிருந்த படியால் விடுப்பில் சென்னை வந்தேன்  திடீரென ஒருநாள் என் தமையனார் என்னிடம் நாளை திருப்பதி சென்று இரவு புஷ்கரணியில் நீராடி அங்கப்பிரதட்சனம் செய்யலாம் என்றார் எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி கிளம்பினோம் (எந்த முன்பதிவும் கிடையாது) மாலை நேரத்தில் சென்று அடைந்தோம் இரவு வரை எங்கே தங்குவது என்று யோசித்தபடி அலைந்து கொண்டிருந்தோம் பிறகு சிலரிடம் விசாரித்து அங்கிருந்த பல மடங்களும் விடுதிகளும் சென்று இடம் இருக்குமா என்றும் கேட்டும் எங்கேயும் காலி இல்லை என்று சொல்லிவிட்டார்கள் யோசித்துக்கொண்டே நடந்தபோது காஞ்சி சங்கர மடம் அருகே நின்றபடி பேசிக் கொண்டிருந்தோம் அப்பொழுது அங்கே நின்றிருந்த ஒரு முதியவர் எங்களை விசாரிக்க நாங்களும் விவரத்தைக் கூறியதும் அவரும் கவலை வேண்டாம் இந்த அறையில் இரவு வரை ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று உள்ளே அழைத்துச் சென்றார் திருவேங்கடமுடையானுக்கு நன்றி சொல்லி உள்ளே சென்றோம் இரவு சற்று அயர்வு மிகுதியால் என் தமையனார் நன்றாக உறங்கிவிட்டார் நான் எவ்வளவு எழுப்பியும் அவரால் எழுந்திருக்க முடியவில்லை விடியற்காலையில் தான் எழுந்தார் எனக்கு மிக வருத்தமாக போய் விட்டது இந்த ஒரு வாய்ப்பும் போய் விட்டதே இப்போது எந்த முன்பதிவும் இல்லாமல் மதியத்திற்குள் எப்படி தரிசனம் கிட்டும் என்று வருந்தி குழப்பமற்ற என் தமையனார் என்னிடம் வா சென்று விடலாம் என்றார் எனக்கு மனமில்லை திருமலை அப்பனை  பார்க்காமல் செல்லமாட்டேன் என்று பிடிவாதமாய் கூறிவிட்டேன் என்ன செய்வது என்று தெரியாமல் நானும் தமையனார் சிறப்பும் நுழைவாயிலில் போய் நின்று கொண்டோம் நான் கண்களை மூடிக்கொண்டு   புருஷ ஸூக்தம் ஜபம் செய்ய ஆரம்பித்தேன் ஒரு சில ஆவர்த்திகள் முடிந்த தருணத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் எங்களை தாண்டி கொண்டு உள்ளே சென்றார் பத்தடி நடந்து அவர் திடீரென்று திரும்பி வந்து நேரே என்னிடம் நீங்கள் தரிசனத்திற்காக வந்துள்ளேன் என்றார் ஆமாம் என்றோம் என்னிடம் மூன்று நுழைவுச் சீட்டுகள் உள்ளன இங்கு நான் ஒருவன் தான் உள்ளேன் விரும்பினால் நீங்களும் வரலாம் என்றார் நான் ஆனந்தமும் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன் கண்கள் கலங்கி நீர் உகுத்ததுநாவில் பேச்சு வரவில்லை என் கோவிந்தனை என்னவென்று புகழ்வது தெரியவில்லை கோவிந்தா என்று கண்ணில் நீர் சொரிய அவர் கைகளைப் பிடித்து நன்றி சொன்னேன் அவர் எங்களுடன் தரிசனம் செய்து மட்டுமின்றி லட்டு பிரசாதம் வாங்கி தந்தார் அவனருள் இருந்தால் நடக்க முடியாது என்பதும் கூட நடந்து விடும் என்பதை கண்கூடாக கண்டேன் அதன் பின் இன்னொரு முறை சென்று அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டு இன்றுவரை முன்பதிவு இல்லாமல் தான் செல்கிறேன் தரிசனம் தந்து விடுகிறான் அந்த கோவிந்தன் குறையொன்றுமில்லை

நீங்களும் உங்கள் வாழ்வில்  பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்

அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173