அனுப்பியவர் : R.S. ராதாகிருஷ்ணன் சென்னை
எனக்கு 18 வயது 1979ம் வருடம் டிசம்பர் மாதம் அன்று நான் கோவையில் ஒரு கணக்காளராக பணிபுரிந்து கொண்டிருந்தேன் அப்பொழுது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் என்னை அழைத்து உங்களுக்கு இங்கு வேலை இல்லை 3 மாதங்கள் அவகாசம் தருகிறேன் வேறு வேலை தேடிக் கொள்ளுங்கள் என்று சொன்னார் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அப்பொழுது என்னுடன் வேலை பார்த்து வந்த ஒருவர் நான் திருப்பதி செல்லவிருக்கிறேன் நீங்கள் வருகிறீர்களா என்று கேட்டார் உடனே ஒப்புக் கொண்டேன் ஏனென்றால் திருப்பதிக்கு சென்றதே இல்லை எனவே 1980 ஜனவரி 1ம் தேதி அன்று தரிசனம் செய்ய முடிவெடுத்தோம் அன்று அதிகாலை 2 மணியிலிருந்து காத்திருந்து அன்று மாலை 4.30 மணிக்கு தான் தரிசனம் கிடைத்தது. அன்று இன்னும் 3 மாதத்தில் எனக்கு வேலை போய் விடும் எனக்கு நிரந்தரமான வேலை வாங்கித் தரும்படி திருப்பதியில் பெருமாளை வேண்டினேன் சரியாக 3 மாத முடிவில் 1980 ஏப்ரல் 2ம் தேதி வேறு இடத்தில் வேலை கிடைத்தது அந்த வேலை தான் நானும் என் குடும்பமும் இன்று வரை நல்ல வாழ்க்கை வாழ வழி செய்தது வாழ்க்கையில் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது என்றென்றும் அவரை பூஜித்துக் கொண்டே இருப்போம்.
நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்
அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண் : 9500074173