எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 15

(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)
அனுப்பியவர் : K கணேசன் , திருச்சி .

திருப்பதியில் காணாமல் போன குழந்தை நாங்கள் குடும்பத்துடன் வருடம் ஒரு முறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது திருப்பதி சென்று பெருமாளை தரிசிப்பது வழக்கம்  ஒரு முறை என் தங்கை யானையை வேடிக்கை பார்த்து விட்டு அந்த நினைவிலேயே எங்களை விட்டு தொலைந்து விட்டாள்  பல வருடங்கள் முன்னாடி என்றாலும் அப்பொழுதும் திருப்பதியில் நல்ல கூட்டம் தான்  3 வயது பெண் குழந்தையைக் காணோம் என்று என் தாய் தந்தைக்கு மிகுந்த கவலை  உடனே பெருமாளிடமே அங்கிருந்தபடியே வேண்டினர். 10 நிமிட நேரத்தில், உண்டியல் எதிரே இருந்த உயரமான மேடை மீது ஏறி நின்று நாங்கள் யாராவது வருகிறோமா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். என் தந்தை ஓடிச் சென்று அவளை அழைத்து வந்தார். என் அம்மா அவளிடம் இங்கு நிற்கனும் என்று உனக்கு எப்படித் தோன்றியது என்று கேட்டதற்கு எப்படியும் உண்டியலில்  கொண்டுவந்த ஸ்வாமி பணம் போட வருவீர்கள் அப்போது கண்டுபிடித்து விடலாம் என்றும், நான் நிற்பது உங்களுக்கு தெறிவதற்காக, சற்று உயரமான இடத்தில் நின்றேன் என்று சமயோசிதமாகக் கூறியவளை ஆனந்தக் கண்ணீர் மல்க என் தாய் கட்டிக் கொண்டு திருப்பதி பெருமாளுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்கள். இன்று அவளுக்கும் 60 வயதிற்கு மேல் ஆகி பேரன்கள் மற்றும் பேத்திகளுடன் பெருமாள் புண்ணியத்தில் சௌக்யமாக இருக்கிறாள் .

நீங்களும் உங்கள் வாழ்வில்  பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்
அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!