ஏன் என்னை கடவுளே தர்ம வழியில் நடத்தக் கூடாது? விதுரநீதி - 19

திருதராஷ்டிரனுக்கு விதுரர் உபதேசம் செய்து வருகிறார். அப்போது ஒரு சந்தேகம் திருதராஷ்டிரனுக்கு எழுகிறது. நம்மை ஏன் என்னை கடவுளே தர்ம வழியில் நடத்தக் கூடாது, நாம் செய்யும் செயல் தர்மத்தின் வழியில் இல்லை என்றால் உடனே நம்மை ஏன் கடவுள் தடுக்கக் கூடாது என்ற சந்தேகம் எழுவதாகவும் அதற்கு பதிலும் விதுர நீதியில் கொடுக்கப் பட்டுள்ளது.

நம்மை காக்க தேவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்டை மேய்க்கும் இடையன், ஆடு பின்பு நின்று கொண்டு அதை ஓட்டுவது  போல,  நம்மை நடத்துவதாக நினைத்துக் கொள்வோம். நமக்கு அது பிடிக்காமல் போகும். மேலும் நாம் செய்யும் செயல் தவறாக இருந்தால் உடனே அவ்வாறு செய்யக்  கூடாது என்று தேவர்கள் தடுப்பார்கள். அது நமது சுதந்திரத்திற்கு தடையாகவும்  இருக்கும். அதுவும் நமக்கு நிச்சயம் பிடிக்காது. எனவேதான் நமக்கு யோசிக்க புத்தி  கொடுத்துள்ளார்கள். நாம்தான் புத்தியை பயன்படுத்தி எது பாவம் எது புண்ணியம் என்று தெரிந்து கொண்டு அதன் படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார்.

மேலும் நாம் தர்மம்  எவை  என்று தெரிந்து கொள்ளவும் நமக்கு உறுதுணையாக இருப்பதற்கும் மகான்கள் தோன்றி உள்ளார்கள். சாஸ்திர புஸ்தகங்கள் அவர்களால் எழுதப் பட்டுள்ளன. நமக்கு புத்தி கொடுக்கப் பட்டுள்ளது. நாம்தான் நல்ல வழியில் நடந்து கொள்ள வேண்டும் என்று விதுரர் கூறி உள்ளார். மேலும் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், நமக்கு நல்ல புத்தியை கொடுத்து விடுவார்கள். நாம் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மேலும் தெரிவிக்கிறார்.

ஆனால் சிலர்  தேகமும் உடம்பும் ஒன்று என்று நினைக்கிறார்கள். அவர்கள் கண்களால்  பார்ப்பதையே  உண்மை என்றும்  கண்களுக்கு  தெரியாததை  நம்பவும்  மாட்டார்கள் .

அப்படி நினைப்பது சரி என்றால் நாம் பார்க்காத விஷயங்கள் இல்லை என்று கூற முடியாது. நமது எல்லை சிறியது என்றும் நமது அறிவு அவ்வளவு தான் என்றும்  தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு சுவற்றிற்கு பின்னால் உள்ளதை  நாம் பார்க்க முடியாது என்றாலும் அங்கு உள்ள வஸ்துக்கள் இல்லை என்று கூற முடியாது. அப்படி எதுவும் இல்லை என்று நினைத்தால் அது முட்டாள் தனம் ஆகும். 

ஆத்மாவும் உடம்பும் ஒன்று என்றே நினைப்பவர்கள் உடம்பு சுகத்திற்க்காக எதையும் செய்து விடுவார்கள். உதாரணத்திற்கு பிறரது பொருளை ஒருவர்  பிடுங்கி அனுபவித்தால் அது  உடம்பிற்கு சுகம் தரும். ஆனால் அது ஆத்மாவிற்கு பாவத்தை சேர்த்து விடும் என்று கூறியுள்ளார். எனவே நமக்கு ஆத்ம சிந்தனை முதலில் வர வேண்டும் என்று கூறி உள்ளார்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!