(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)

அனுப்பியவர் ; பூரணம் தாரா
வெஸ்ட் மாம்பலம் சென்னை

ஹரி ஓம்
பெருமாளைப் பற்றி சொல்வது என்பது கடலின் ஆழத்தை அளவை ஒரு உப்பு பொம்மை அழைத்துச் சென்றது போல் ஆகும் அதாவது இறைவனின் கருணையையும் அழகையும் அருளையும் அளவையும் யாராலும் விவரிக்க இயலாது அவனைப்பற்றிய திருவிளையாடல்களை சொல்லி முடிப்பது என்பது ஒரு பெரிய கடலின் ஆழத்தையும் அளவையும் ஒரு உப்பினால் செய்த பொம்மை நான் போய் கடலின் ஆழத்தை அளவை அளந்து வரப்போகிறேன் என்று கடலில் இறங்குவது போல எப்படி உப்பு பொம்மை கடலில் இறங்கிய உடனே கரைந்து விடுமோ அப்படியே இறைவனின் அருளையும் ஆனந்தத்தையும் புகழையும் முழுவதுமாக சொல்ல முடியாது அப்பேர்ப்பட்ட பிரம்மமயம் இறைவன்

ஆனாலும் ஒரு துளி சுவைப்பது போன்ற அனுபவத்தை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த பாக்கியசாலி ஆனேன்
ஒரு முறை என் கனவில் ஒரு பெரிய அழகான நெருப்பு மழை தோன்றியது அது ஏன் அழகாக இருந்தது என்றால் அது ஒரு பெரிய கோவிலின் கர்ப்பக்கிரகம் போல இருந்தது அந்த நெருப்பு மலையில் அரளி மலரும் துளசி இலையும் மேலே தூவி இருந்தது நெருப்புக் கனல் போன்று கனத்துக் கொண்டிருந்தது அதில் இந்த மலர்களும் துளசி இலையும் வாடாமல் அழகு சேர்த்துக் கொண்டிருந்தது இது என்ன கடவுள் என்று நான் கேட்க அந்தக் கனவிலேயே எனக்குத் தெரிந்தவர் ஒருவர் வந்து இது திருப்பதி பாலாஜி என்று கூறினார்

அந்த கனவு காணும் பொழுது நான் மிகவும் வறுமையிலும் நோய்வாய்ப்படும் இருந்தேன் அந்த கனவில் ஒரு உத்தரவு காதில் விழுந்தது அதில் உனக்கு மறுபடியும் வாழ்க்கையில் எல்லாம் சரியாக வேண்டுமென்றால் எனக்கு வந்து முடி காணிக்கை செலுத்து என்பதுதான் அது இது முடிந்து இந்த கனவு முடிந்தது மறுநாள் நான் வழக்கம் போல எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் காளி கோவிலில் சாமி கும்பிட சென்றேன் 

அங்கு நின்று அம்பாளிடம் எனக்கு இவ்வளவு பெரிய முடி இருக்கிறது அடர்த்தியான முடி இருக்கிறது நீளமான முடி இருக்கிறது இதை காணிக்கை செலுத்த வேண்டும் ஆனால் என்னுடைய இந்த இக்கட்டான சூழ்நிலையில் நான் எப்படி திருப்பதி வருவேன் என்று நினைத்த மாத்திரத்தில் ஒரு தெரிந்த மாமி என் தோளைத் தொட்டு தாரா நாளை திருப்பதி செல்லலாமா என்று கேட்டாள் அந்த மாமியின் பெயர் வசந்தி எனக்கு திடுக்கிட்டுப் போனது இப்பொழுது தான் நான் மனதில் கேட்டுக்கொண்டிருந்தேன் இப்படி உடனே அழைப்பு வந்தது அதுவும் அவள் மிகவும் வாஞ்சையாக கேட்டாள் நீ எதைப் பத்தியும் கவலைப் படாதே நானே உன்னை காரில் கூட்டிச் சென்று ஒரே நாளில் உன் வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறேன் என்றாள்

நான் உடனே எனக்கு முடிகாணிக்கை செலுத்த வேண்டும் என்று கூறினேன் அதனால் என்ன அதையும் செய்து விட்டு தரிசனம் செய்து விட்டு வரலாம் என்று கூறினாள் மறுநாள் பாலாஜி டிராவல்ஸ் ஏசி கார் சுகமான டிராவல் சௌக்கியமா பயணம் ஆனந்தமான தரிசனம் இவ்வளவும் அவர் நினைத்த மாத்திரத்தில் நடத்தி கருணை புரிந்தார் இது திருப்பதி பாலாஜியின் மகிமை இது நடந்து 15 வருடங்கள் ஆகிறது இன்னும் என் நினைவில் பசுமையாக போல அந்த கனவில் வந்த அனைத்தும் பதிந்துள்ளது

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

" ஓம் நமோ நாராயணாய"

நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகித் திரும்பவும் உங்களை வந்து சேரும்.

அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173