விதுரர் தனது உபதேசத்தை தொடர்கிறார். திருதராஷ்டிரன் எதையும் ஏற்றுக் கொள்வதாக இல்லை. இருப்பினும் தனது உபதேசத்தை தொடர்கிறார்.

யார் ரூபம் எப்போது வெளிப்படும் என்று தனது அடுத்த உபதேசத்தில் விளக்குகிறார்:-

தங்கத்தின் தன்மை - நாம் வைத்திருக்கும் தங்கம் உண்மையான தங்கமா என்று அதை காய்ச்சும்போதுதான் தெரியும் அதுவரை தெரியாது.

சத் புருஷன் - ஒருவான் சத்புருஷன் என்றால் அவனது ஆச்சார அனுஷ்டதில் தான் தெரியும். அவன் தான் சத் புருஷன் என்று தெரிவித்துக் கொண்டாலும் உண்மையான சத் புருஷன் என்பது அவனது நடத்தையில் தெரிய வந்து விடும்.

சாது - ஒருவன் சாது என்று சொல்லிக் கொண்டாலும் சாது போன்று உடை அணிந்துக் கொண்டாலும் அவரது பேச்சில் அவர் சாதுவா சாது இல்லையா என்று தெரிந்து விடும். உடை சாது வாக இருந்தாலும் அவர் பேச்சு வேறுமாதிரி இருந்தால் அவர் சாது இல்லை என்று தெளிவாக தெரிந்து விடும்.

சூரன் - ஒருவன் தன்னை சூரன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அவனுக்கு பயம் வந்தால் அவன் சூரன் இல்லை என்பது வெளி உலகிற்கு தெரிந்து விடும்.

தைரியமிக்கவன் - தன்னை தைரியசாலி என்று சொல்லிகொல்பவன் உண்மையான தைரியசாலி இல்லை என்றால் அவனது காசு தொலைந்து விட்டால் உண்மை வெளிப்பட்டு விடும். தைரியசாலி என்றால் தனது சொத்து தொலைந்தாலும் அதை மீண்டும் சம்பாதிர்க்கும் வரை தைரியாமாகவே இருப்பான்.

நமக்கு வேண்டியவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் - நமக்கு ஆபத்து வந்தால் நமக்கு யார் வேண்டியவன் யார் வேண்டதாவன் என்ற உண்மை வெளிப் பட்டுவிடும். நம்மிடம் காசு தொலைந்து விட்டாலோ நமக்கு ஆபத்து வந்து விட்டாலோ நம்மிடம் ஒட்டிக் கொண்டு இருந்தவர்கள் நாம் அருகில் இருந்து உதவி புரியா விட்டால் அவர் நம்மிடம் ஏன் இருந்தார் என்ற உண்மை தெரிந்து விடும்.

இவ்வாறு யார் ரூபம் எப்போது வெளிப்படும் என்று அழகாக விவரித்தார். மேற்கொண்டு உபதேசித்ததை அடுத்த அத்தியாத்தில் காண்போம்.