(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)

அனுப்பியவர் : விஜி. அருள்ஜோதி, 
ஒக்கியம்பேட்டை - சென்னை. 

எனக்கு கூட்டம் என்றாலே அலர்ஜி. திருப்பதி செல்லவே எப்போதும் தயக்கம் தான். ஒரு முறை என் குடும்பத்தோடு சென்ற போது கூட்டம் எல்லா இடங்களலிலும் நிரம்பி வழிந்தது. பணம் கொடுத்தாலும் எங்கும் டிக்கெட் கிடைக்கவேயில்ல. இந்த முறை அவ்வளவு தான் திரும்ப வேண்டியது தான் என முடிவு செய்து வீட்டிற்கு செல்ல தயாரானோம். எங்காவது ஒரு கவுண்டரில் டிக்கெட் கிடைக்குமா என பாரத்துகொண்டே வந்த போது ஒருவர் கையில் ஏதோ பேப்பரோட ஐந்து நபரோடு ஒரு ஹாலை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவர் எங்களை பார்த்தபோது என்னிடம் பத்து பேருக்கான MLA- ன் அனுமதி சீட்டு உள்ளது. எங்கள் குடும்பத்தில் ஐந்து பேர் வரவில்லை நீங்கள் வருவதாக இருந்தால் எங்களுடன் வந்துவிடுங்கள் என்றார். மிக்க மகிழ்ச்சி. எங்களுக்கு டிக்கெட்டும் கிடைக்காமல், ஹாலும் நிரம்பி வழிந்ததால் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தோம். மிகவும் நன்றி சொல்லி அந்த குடும்பத்தோடு சென்று ஒரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் நல்ல முறையில் முடித்துவிட்டு வெளியில் வந்து விட்டோம். 

இரண்டாவது அனுபவம் :

இம்முறை நான் தனியாக திருப்பதி வந்திருந்தேன். 

ஹாலில் அதிக அளவில் கூட்டம். கூட்டத்தை பார்த்தவுடனே நெஞ்சில் ஒரு விதமான வலி பரவியது . ஓம் நமோ நாராயணா என மந்திரம் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது . இம்முறையும் திரும்ப சென்றுவிடலாமா என யோசித்தேன். கூண்டில் அடைபட்டவனாக வெளிய செல்ல முயற்சித்தேன். வெளியே செல்ல வழியுமில்லை. திரும்ப போகவும் அனுமதியும் இல்லை. 

அப்போது நடந்ததோ விசித்திரமான அனுபவம். 

யாரோ ஒரு ஆறடி உயரமுள்ள ஆஜானு பாகுவான, ஜோல்னா பை மாட்டியிருந்த நபர் ஹாலில் இருந்த என்னிடம் பேச்சுக்கொடுத்தார்.சிறிது நேரம் பேசிக்கொடிண்டே இருந்தோம் எனக்கும் சிறிது பதட்டம் குறைந்தது. பின்னர் ஹால் திறக்கப்பட்டது அனைவரும் முண்டியடித்து ஒடினர். பாவம் பெண்கள் அவர்களும் ஆண்களோடு நெரிசலில் வரிசையில் நிற்க ஓடினர். எனக்கு அறிமுகமான அந்த நபர் பதட்டமில்லாமல் என் பின்னாலயே வந்து கொண்டிருந்தார். பகவானின் வாசல் வரை பின்னாலயே வந்தவர் , திடீரென திரும்பி பார்க்ககை யில் மாயமாய் மறைந்து விட்டார். பகவானின் மகிமையை நினைத்து தரிசனம் முடித்து வெளியில் வந்தேன். பின்னர் கோவில் வளாகத்தில் எங்கு தேடியும் அவரை பார்க்க முடியவேயில்லை. 

கலியுகக் கடவுளான திருவேங்கடமுடையான் கருணையே கருணை.

நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்

அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173