விதுரர் தர்மத்தின் அம்சம் ஆவார்.  அவர் சொன்ன கருத்துக்கள் லோக ஷேமத்திற்கு சொன்னது ஆகும். விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு உபதேசித்ததாக இருந்தாலும், சனாதன தர்மத்திற்கு சொன்னதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். (சென்ற பதிவில்) சொல்லப் பட்ட பதினேழு பேரும் நரகத்திற்கு செல்வார்கள் என்று கூறியுள்ளார்.  ஆனால் சொர்க்கத்திற்கு எட்டு பேர் தான் செல்வார்கள் என்று கூறியுள்ளார்.  ஏன் அவ்வாறு சொல்லப்பட்டது என்று நம்மால் புரிந்து கொள்ள இயலாது.  மனிதர்களின் குணங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப் பட்டுள்ளது.  ரஜோ குணம், தமோ குணம் மற்றும் சத்துவ குணம்.  இதில் சத்துவ குணம் உள்ளவர்கள்  மட்டும் தான் இறைவனை அறிந்து கொள்ள முடியும். ஆக மூன்றில் ஒரு பங்கு மனிதர்களுக்குத்தான்  சத்துவ குணம் உள்ளது.  எனவே சொர்கத்திற்கு செல்ல எட்டு வகை மனிதர்களே  தகுதியானவர்கள் என்று சொன்னார் போலும். 

சொர்க்கத்துக்கு செல்லும் எட்டு பேர்கள்.

1. பெரியோர் உபதேசத்தை கேட்பவர்கள்.
2. நீதி தெரிந்தவர்கள்.
3. கொடுக்கும் குணம் உள்ளவவர்கள்.
4.நைவேத்தியம் செய்யப்பட உணவையே உண்பவர்கள் அதாவது பெருமாளுக்கு உணவை அர்ப்பணித்து விட்டு  உண்பவர்கள்.
5. பிறரை ஹிம்சிக்காதிருப்பவர்கள். பிறரை மனத்தாலோ, உடம்பாலோ அல்லது சொல்லாலோ ஹிம்சிக்காதவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.
6. உலகத்தில் ஒருத்தருக்கும் தீங்கு செய்யாதவர்கள்.
7. செய்நன்றி மறக்காதவர்கள்.
8. சத்தியமே பேசுபவர்கள்.