மகா பாரதத்தில் கிடைக்காத விஷயங்களே கிடையாது. அவ்வளவு விஷயங்கள் அவற்றில் அடங்கியுள்ளன. அதில் உள்ள விதுர நீதியில் விதுரர் சொன்னதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அடுத்ததாக அவர் சொன்னதை மேற்கொண்டு காண்போம்.
ஒரு குலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒரு ஆளை தியாகம் செய்து விடலாம்.
ஒரு கிராமம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒரு குடும்பத்தை தியாகம் செய்து விடலாம்.
ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒரு கிராமத்தையே தியாகம் செய்து விடலாம்.
ஒரு ஆத்மாவின் நன்மைக்காக லோகத்தையே தியாகம் செய்து விடலாம் என்று அடுத்ததாக கூறி உள்ளார்.