(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)
அனுப்பியவர் :
திருமதி.ஜெயந்திமனோகர்,சிவகங்கை.
என் வாழ்க்கையில் எம்பெருமாளின் அனுகிரகத்தை பெற்றதை அனைவருடன் பகிர்ந்து கொள்ளுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் ஒரு அறிவியல் ஆசிரியை. முதன் முதலில் 2007ல் புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயல் என்ற ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியேற்ப்பு செய்தேன். ஆனால் நான் சிவகங்கை யிலிருந்து தினமும் காலையில் 5.30மணிக்கு பஸ் ஏறினால் திருப்பத்தூர் - பொன்னமராவதி - ஆலவயல் பள்ளிக்கு 8.45மணியளவில் சென்றடைய முடியும். சிவகங்கையிலிருந்து செல்லும் போது திருக்கோட்டியூர் பெருமாள் கோயில் உள்ளது.அங்கே பஸ் நிறுத்தம் உள்ளதால் தினமும் காலையில் 6.45மணிக்கு கோபுரதரிசனம் எனக்கு கிடைக்கும்.
அப்போதெல்லாம் செளமிய நாராயணரிடம் கேட்பேன் நீ மட்டும் ஜம்னு படுத்துக்கொண்டு இருக்கிறாய் என்னை மட்டும் இப்படி தினமும் காலையிலும் மாலையிலும் 3+3 ஆறு மணி நேரம் பஸ்ஸிலேயே. அலைய வைக்கிறாய். எனக்குத் தெரியாது என் மகன் அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு செல்லும் போது நான் அவன் அருகில் இருந்து படிக்க வைக்க வேண்டும் என்று தினமும் ஸ்கூல் போகும் போதும் மாலையில் வீடு திரும்பும் போதும் திருக்கோட்டியூரில் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் போதெல்லாம் பெருமாளிடம் கேட்டுக்கொண்டே இருப்பேன்.சில சமயங்களில் கோபபட்டு திட்டுவேன்.ஆனால் என்னே எம் பெருமானின் திருவருள் திருக்கோட்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது என்ற செய்தி கேட்டு மிகவும் ஆச்சரியமடைந்தேன். அந்த இடம் போட்டிகளுக்குள் எனக்கே கிடைக்க கருணை காட்டி என்னை அரவனைத்து நினைக்கும் போதெல்லாம் சென்று தரிசனம் செய்யும் பாக்கியத்தை யும் அருளிய பெருமாளை எப்படி என்ன சொல்ல 11 வருடங்கள் அதே பள்ளியில் பணியாற்றி 2008-2018 ஏப்ரல் மாதத்தில் பணிநிறைவு பெற்றேன்.
நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்
அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173