அனுப்பியவர் : பி.சுடலைராஜா,
ஊர்:கோவில்பட்டி.
என் தாயும் தந்தையுமான விஷ்ணு பற்றி அனைவரிடம் பகிர்வதில் ஆனந்தம்
என் வாழ்க்கையில் பிறப்பு முதல் என்னுள் இருந்து என்னை இயக்குகிறார்,இதை நான் என் 22வயதில் தான் உணர்ந்தேன்,நான் குழந்தையாக இருந்தபோது என் தாயும் தந்தையும் என்னை கிருஷ்ணராக வேஷம் போட்டு ரசித்தார்கள்,பின்னர் ஏழு வயதில் எங்கள் ஊர் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலத்தில் ஸ்ரீராமராக வேடம் அணிந்து என்னை ரசித்தார்கள்,இப்படி என்னுள் இருக்கும் என் விஷ்ணு பகவானை பின்னாளே அறிந்தேன் அடைந்தேன்
அவரே அனைத்தும் ஆனவர், அவரே ஆரம்ப வித்து, அவரே அனைத்தும் உயிரினங்களுக்கும் காரணமானவர், இதில் சிவபெருமானும் பிரம்மதேவரும், சக்திதேவியும்,தேவர்களும்,அசுரர்களும்,முனிவர்களும்,சித்தர்களும்,மகான்களும்,மனிதர்களும் அவருக்குள்ளே அடக்கம்,என் விஷ்ணு அனைத்துமான பரமாத்மா,சுடர் சூரியனும் அவரே,குளிர் சந்திரனும் அவரே,நவக்கிரகங்களும் அவரே,எனக்குள்ளும் அவரே இதை படிக்கும் நீங்களும் அவரே,நம்மை இந்த குழுவில் ஒன்று சேர்த்ததும் அவரே,என் அறிவும் அவரே,என் ஞானமும் அவரே,என் உப புலன்களும் அவரே, காற்றும்அவரே, நெருப்பு அவரே, கடலும்அவரே, ஆகாயமும்அவரே, அனைத்து விலங்குகள்,பறவைகளிடம் ஜீவாத்மாவாக இருப்பவரும் அவரே,தாவரங்கள் அனைத்தும் அவரே,சிறு செடியும் அவரே,பெரிய மரமும் அவரே ஓம் நமோ நாராயணாய நமஹ தற்போது 26வயதாகும் என் வாழ்வில் சிறு வயதில் இருந்தே துன்பம் என்ற ஆனந்த கடலில் வாழ்கிறேன்,இதற்காக என் விஷ்ணுவிடம் நான் எதுவும் வேண்டுவதில்லை,இது முன் ஜென்ம கர்ம படி நடக்கிறது என்பதை நன்கு அறிவேன்,24 மணி நேரம் அவரது சிந்தனை,நாமம் இல்லாமல் இருந்ததில்லை,அவர் ஆயிரம் துன்பமெல்லாம் அவரை நினைக்கும் போது கரைந்து போய்விடும்,என் விஷ்ணுவை நான் வணங்கும் போது கர்ம படி உன்னால் ஆன அனைத்தும் உயிர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் வேண்டுவேன், எனக்காக என் முன் ஜென்ம கர்ம பாவ பலனை மிச்ச இல்லாமல் இந்த ஜென்மத்தில் தாருங்கள் தந்தையே என்று வேண்டுவேன்,ஆனால் அவரோ என் மேல் பாச மிகுந்தவர் என் கர்ம துன்பத்தில் இருந்து அன்றாட வாழ்க்கையில் ஓவ்வொரு நொடியும் எனக்குள் இருந்து அவரே என்னை அறியாமலே என்னை இன்று வரை பாதுகாத்து வருகிறார் கர்மமே வாழ்வாயினும் அந்த கர்மத்தின் ஆதி பரமாத்மாவே இறுதி தீர்வாக இருக்கிறார் எனது வாழ்வில் இந்த ஜென்மத்தில் என் விஷ்ணுவை அடைந்ததே போதும் வேறு எதுவும் எனக்கு வேண்டாம்.
நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்
அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173