நமக்கு பிடித்தவர்கள் செய்வது எல்லாம் சரி ஆகாது. விதுர நீதி 29

நமக்கு பிடித்தவர்கள் செய்வது எல்லாம் சரி ஆகாது. அது போல் பிடிக்காதவர்கள் செய்வது எல்லாம் தவறு ஆகாது. விதுர நீதி தொடர்ச்சி.

மகா பாரதத்தில் விதுரர் திருதராஷ்டிரனுக்கு பாண்டவர்களுக்கு சொத்தைப்  பிரித்துக் கொடுத்து விடு என்று பல வழிகளில் உபதேசிக்கிறார். மகா பாரதம் கதையாக சொல்லப் பட்டிருந்தாலும் அதில் அரிய பல விஷயங்கள் உள்ளன. விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு உபதேசிக்கப் பட்டிருந்தாலும், அது எப்போதும் நாம் கடைப் பிடிக்க என்று  சொல்லப் பட்டது என்றே எடுத்துக் கொள்ளலாம்.

தனது மகன் துரியோதனன் செய்தது தவறு என்று தெரிந்தும், திருதராஷ்டிரன் துரியோதனன் செய்த அத்தனை கெட்ட காரியங்களையும் ஆமோதித்து வந்தான். துரியோதனன் தனக்கு பிடித்தவன் என்பதால்  அவன் செய்தது எல்லாம் சரி என்றே எடுத்துக் கொண்டான். அதுவே துரியோதனனுக்கு அழிவு ஆகியது. மேலும் பாண்டவர்கள் தனக்கு பிடிக்கவில்லை ஆதலால் அவர்கள் செய்வது தவறு என்றே எடுத்துக் கொண்டான்.

எனவே அவ்வாறு செய்வது சரி அல்ல என்றும் அவனை நல்ல வழிக்கு வா என்றும் விதுரர் உபதேசித்தார்.

முற்றும்...

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!